என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள அத்திவீரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகள் சுவேதா. இவர் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி அன்று வீட்டில் சுவேதா எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்கத்தா காளிக்கோவில் உட்பட 12 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர் வீதி உலா வந்தனர்.
    • 12 தேர்களும் ஒரே இடத்தில் கிழக்கு நோக்கி நிறுத்தி தீபாராதனை செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பகுதியில் நவராத்திரி விழாவை யொட்டி, கோவில்களில் கொழு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாப்பட்டது.

    9 நாளும் கோவில்களில் உள்ள அனைத்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தினமும் பூஜைகள் செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு முதல் பழையப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோவில், கவீசுவரர் கோவில், காட்டி நாயனப்பள்ளி முருகன் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், கிருஷ்ணகிரி நகர் பகுதி உள்ள கிருஷ்ணன் கோவில், ராமர் கோவில், படவட்டம்மாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஞானவிநாயகர் கோவில், கல்கத்தா காளிக்கோவில் உட்பட 12 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர் வீதி உலா வந்தனர்.

    நேற்று காலை அனைத்து தேர்களும் பழையப்பேட்டை வந்தடைந்தது. அப்போது, 12 தேர்களும் ஒரே இடத்தில் கிழக்கு நோக்கி நிறுத்தி தீபாராதனை செய்யப்பட்டது.

    மேலும், செண்டை மேளம், பம்பை முழங்க வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் வன்னி மரத்தின் இலைகளை எடுத்து சென்று வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம் என்பதால், ஏராளமான பக்தர்கள் வன்னி மரத்தின் இலைகளை எடுத்து சென்றனர். இவ்விழாவினை காணவும், சாமிகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்யவும் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    • கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 908 கன அடி நீர் தற்போது ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • ஆற்று நீரில் குவியல் குவியலாக இரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலம் நந்தி மலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    கடந்த 1-ம் தேதி கெலவரப்பள்ளி அணைக்கு 908 கன அடி நீர் வரத்தாக இருந்தது. இன்று 6 ஆம் தேதி 908 கன அடியாகவும் படிப்படியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், அணையில் தற்போது 40.18 கன அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 908 கன அடி நீர் தற்போது ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தென்பெண்ணையாற்றில் அதிக அளவு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

    மழையை பயன்படுத்தி கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள தொழிற்சாலைகள ரசாயன கழிவுகள் அதிக அளவில் தென்பெண்ணையாற்றில் திறந்து விட்டு வருவதால் ஆற்று நீரில் குவியல் குவியலாக இரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது.

    தென்பெண்ணை யாற்றில் அதிக அளவு தண்ணீர் வரும்போது ரசாயன கழிவுகள் திறந்து விடப்படுவதும் ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன கழிவுகள் செல்வதும் தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    • திடீரென வந்த ஒற்றை யானை கிருஷ்ணப்பாவை தனது தந்தத்தால் வலது தொடையில் குத்தி தூக்கி வீசி விட்டுச் சென்றது.
    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாத்தனக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 70 ). இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். இரவு நேரமாகியும் மாடுகள் வீட்டிற்கு வராதனால் மாடுகளைத் தேடிச் சென்றார்.

    அப்போது சாத்தனக்கல்லை சேர்ந்த நாகப்பா என்பவரது நிலத்தின் அருகே சென்றபோது அங்கு திடீரென வந்த ஒற்றை யானை கிருஷ்ணப்பாவை தனது தந்தத்தால் வலது தொடையில் குத்தி தூக்கி வீசி விட்டுச் சென்றது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த கிருஷ்ணப்பாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று யானைகளை வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் இப்பகுதியில் யானைகள் அடிக்கடி விவசாய நிலத்திற்குள் புகுந்து விளைபயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்கினறன. விவசாயிகளை தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது.

    இதனால் வனத்துறையினர் முகாமிட்டு யானைகள் ஊருக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிவசங்கரிடம் இருந்து வாட்ச், 500 பணம் ஆகியவை பறித்தனர்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து முகபுபாஷாவை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதிைய சேர்ந்தவர் சிவசங்கர் (வயது70). இவர் நேற்று பேரிகை சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிவசங்கரிடம் இருந்து வாட்ச், 500 பணம் ஆகியவை பறித்தனர். உடனே அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி ெகாடுத்தனர்.

    அதில் ஒருவர் தப்பியோடி விட்டார். பிடித்த நபரை சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முஸ்லிம் தெருவை சேர்ந்த முகபுபாஷா (வயது37) என்பது தெரியவந்தது. உடன் வந்த நபர் முனீர் (22) தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து முகபுபாஷாவை கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து வாட்ச், பணம் ஆகியவை பறிமுதல் செய்து போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

    • வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த பிரகாஷ், அங்குள்ள குண்டில், ஒரு விலங்கின் உருவம் பாறைக் கீரலாக இருப்பதை கண்டறிந்தார்.
    • இது ஒரு காட்டெரு மையின் உருவமாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், சதானந்த கிருஷ்ணகுமார் மற்றும் ஐகுந்தம் வெங்கடாஜலபதி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைப்பெற்றுவரும் மயிலாடும்பாறையிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள ஐகுந்தம் அருகில் உள்ள மூலைக்கொல்லை பகுதியில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.

    வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த பிரகாஷ், அங்குள்ள குண்டில், ஒரு விலங்கின் உருவம் பாறைக் கீரலாக இருப்பதை கண்டறிந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது:-

    இந்த ஓவியம் பாறையில் கல்லால் கொத்தி தேய்த்து உருவாக்கப்பட்ட பாறைக் கீரல் உருவம் ஆகும். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலக் கலாச்சாரத்தை சேர்ந்த பாறைக் கீரல் இது. இது போன்ற விலங்கின் பாறைக் கீரல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை யாகும். கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இத்தகைய விலங்கு உருவ பாறைக் கீரல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    இது ஒரு காட்டெரு மையின் உருவமாகும். சுமார் 3.5 அடி நீளம் மற்றும் 4.8 அடி உயரமுடையதாக உள்ளது. கீரல் சுமார் அரை முதல் ஒரு அங்குல அகலமுடையதாய் உள்ளது. இக்கீரல் நன்கு தேய்த்து வழவழப்பா க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் நாகராஜ், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்ப டுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கி ணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், பிரகாஷ், வரலாறு ஆசிரியர் ரவி, சரவணகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, ராஜேந்திரன், அறிஞர், தம்பிதுரை, அஸ்லாம், தங்கமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • நிலை தடுமாறி புளிய மரத்தில் மோதி டெம்போ தலை கீழாக கவிழ்ந்தது.
    • டெம்போவில் ஏற்றி வந்த 300-க்கும் மேற்பட்ட கோழிகளில் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகின.

    போச்சம்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் உள்ள காட்டுவெண்றவள்ளி பகுதியில் பண்ணையில் வளர்த்து வரும் கோழிகளை தினமும் ஆந்திரா மாநிலத்திற்கு டெம்போ மூலம் கொண்டு விற்பனை செய்து வருவது வழக்கம்.

    அது போல் கிருஷ்ணகிரி அவதானப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் டெம்போவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை ஏற்றி கொண்டு ேபாச்சம்பள்ளி வழியாக ஏற்றி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அப்புகொட்டாய் பகுதியில் வளைவில் திரும்பும் போது டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி புளிய மரத்தில் மோதி டெம்போ தலை கீழாக கவிழ்ந்தது.

    வண்டியை ஓட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். டெம்போவில் ஏற்றி வந்த 300-க்கும் மேற்பட்ட கோழிகளில் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகின.

    இதுகுறித்து நாகர சம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோழி மற்றும் பால், பூ ஏற்றி வரும் டெம்போ வாகனங்கள் கண்ணை மூடிகொண்டு மின்னல் வேகத்தில் தினமும் பறந்து செல்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

    இந்த விபத்து பகல் நேரத்தில் ஆகி இருந்தால் பல உயிர்கள் சேதம் அடைந்திருக்கும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    • அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • சிறப்பு பூஜைக்கு பின்னர் மகாதீபாராதனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வர சாமி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சிறப்பு பூஜைக்கு பின்னர் மகாதீபாராதனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

    நவராத்திரி நிறைவுநாள் மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, கோவிலில் மூலவர் சோமேஸ்வரர், பார்வதிதேவி அம்மன், விநாயகர், முருகன் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், கோவில் வளாகத்திலிருந்து உற்சவர் விநாயகர் வாத்திய முழக்கத்துடன் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலாவாக அழைத்து செல்லப்பட்டார்.

    இதில், வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழாவையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஜிம்மோகன் மறித்து நீ எதற்கு இந்த மறியல் போராட்டத்திற்கு வரவில்லை என வாக்குவாதம் செய்தார்.
    • இதனால் ஆத்திரமடைந்த ஜிம்மோகன் கல்லை எடுத்து புகழேந்தி மார்பு பகுதியில் குத்தி தாக்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற ஜிம்மோகன் (வயது43). அரசியல் கட்சி பிரமுகரான இவரது தலைமையில் நேற்று முன்தினம் சாமல்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி (40) என்பவரை ஜிம்மோகன் மறித்து நீ எதற்கு இந்த மறியல் போராட்டத்திற்கு வரவில்லை என வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜிம்மோகன் கல்லை எடுத்து புகழேந்தி மார்பு பகுதியில் குத்தி தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசில் அவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஜிம்மோகனை கைது செய்தனர். கைதான இவர் மீது பல்ேவறு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

    • கிருஷ்ணகிரி நமாஸ் பாறை மேம்பாலம் அருகில் ரோந்து சென்ற போது, அவ்வழியே சென்று கொண்டிருந்த மினி கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
    • 50 கிலோ அளவிலான, 300 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது.

    கிருஷ்ணகிரி,

    தமிழக எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரி வழியாக அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, அவற்றை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை - பெங்க ளூர் தேசிய தேசிய நெடுஞ்சா லையில் கிருஷ்ணகிரி நமாஸ் பாறை மேம்பாலம் அருகில் ரோந்து சென்ற போது, அவ்வழியே சென்று கொண்டிருந்த மினி கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில், 50 கிலோ அளவிலான, 300 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது.

    இந்த அரிசியை காஞ்சிபுரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு கடத்தி சென்றது தெரிந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசியுடன் கன்டெய்னர் லாரியை கிருஷ்ணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்த அதிகாரிகள், இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கலைச்செல்வனுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வஜீர்கான்(28), காஞ்சிபுரம் சுரேஷ்(34) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீதியில் சென்றவர்களிடம் இதுபோல் கூறி குடிபோதையில் உளறியவாறு நின்றுள்ளார்.
    • குடிபோதையில் அவசர எண், 100 மூலம் போன் செய்து வெடிகுண்டு புரளியை கிளப்பியதும் தெரிந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எண், 100 மூலம் போன் வந்துள்ளது. அதில் பேசியவர், பர்கூர் அடுத்த மல்லப்பாடி மசூதி வீதியில் இருந்து பேசுவதாகவும், அப்பகுதியிலுள்ள மசூதிக்கு முகமது அலி என்பவர் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். வீதியில் சென்றவர்களிடம் இதுபோல் கூறி குடிபோதையில் உளறியவாறு நின்றுள்ளார்.

    தகவலறிந்து விரைந்து சென்ற பர்கூர் போலீசார், குடிபோதையில் அங்கு பொதுமக்களிடம் உளறியவாறு நின்ற மாலிக் பாஷாவை கைது செய்தனர். விசாரணையில் அவர், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை சேர்ந்தவர் என்பதும் குடிபோதையில் வெடிகுண்டு புரளியை கிளப்பியதும் தெரிந்தது.

    • புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.
    • 1,380 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது, பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஹூசைன், 31, சவுகத்துல்லா, 48, காவேரிப்பட்டணம் கனகராஜ், 42, குண்டியல்நத்தம் சீனிவாச கவுடா, 70, ஊத்தங்கரை ரவி, 46, சிவம்பட்டி சங்கர், 55, சாமல்பட்டி மகபூப் ஜான், 72, கல்லாவி சந்திரா, 50, சிங்காரப்பேட்டை காதர் உசேன், 63, ஆகிய, 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, 1,380 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ×