நடந்து சென்றவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிவசங்கரிடம் இருந்து வாட்ச், 500 பணம் ஆகியவை பறித்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து முகபுபாஷாவை கைது செய்தனர்.
நடந்து சென்றவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதிைய சேர்ந்தவர் சிவசங்கர் (வயது70). இவர் நேற்று பேரிகை சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிவசங்கரிடம் இருந்து வாட்ச், 500 பணம் ஆகியவை பறித்தனர். உடனே அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி ெகாடுத்தனர்.

அதில் ஒருவர் தப்பியோடி விட்டார். பிடித்த நபரை சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முஸ்லிம் தெருவை சேர்ந்த முகபுபாஷா (வயது37) என்பது தெரியவந்தது. உடன் வந்த நபர் முனீர் (22) தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து முகபுபாஷாவை கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து வாட்ச், பணம் ஆகியவை பறிமுதல் செய்து போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com