என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபோதையில்   100-க்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்
    X

    மதுபோதையில் 100-க்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

    • வீதியில் சென்றவர்களிடம் இதுபோல் கூறி குடிபோதையில் உளறியவாறு நின்றுள்ளார்.
    • குடிபோதையில் அவசர எண், 100 மூலம் போன் செய்து வெடிகுண்டு புரளியை கிளப்பியதும் தெரிந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எண், 100 மூலம் போன் வந்துள்ளது. அதில் பேசியவர், பர்கூர் அடுத்த மல்லப்பாடி மசூதி வீதியில் இருந்து பேசுவதாகவும், அப்பகுதியிலுள்ள மசூதிக்கு முகமது அலி என்பவர் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். வீதியில் சென்றவர்களிடம் இதுபோல் கூறி குடிபோதையில் உளறியவாறு நின்றுள்ளார்.

    தகவலறிந்து விரைந்து சென்ற பர்கூர் போலீசார், குடிபோதையில் அங்கு பொதுமக்களிடம் உளறியவாறு நின்ற மாலிக் பாஷாவை கைது செய்தனர். விசாரணையில் அவர், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை சேர்ந்தவர் என்பதும் குடிபோதையில் வெடிகுண்டு புரளியை கிளப்பியதும் தெரிந்தது.

    Next Story
    ×