என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
- டோல்கேட் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் டோல்கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் 10 கிலோ கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த மல்லனூர் பகுதியை சேர்ந்த மாரியப்பா மனைவி ஜெயலட்சுமி (வயது40) என்பது தெரியவந்தது. இது ெதாடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியை கைது செய்தனர்.
இதே போல் பர்கூர் அடுத்த ஜெகதேவி ஞானம்மாள் காலனியை சேர்ந்த யூசுப்கான் என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டது.
Next Story






