என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
    • மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அருண்குமார் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி.

    இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

    நேற்று அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • மாவட்ட கழகத்திற்கு உடன் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர்களில் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் மாநில, மாவடட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கி, கேக் வெட்டி, இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், தங்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளின் விவரங்களையும், புகைப்படங்களையும் மாவட்ட கழகத்திற்கு உடன் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஆலோச னைக்கூட்டம் மத்தம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட வரன்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.

    ஓசூர்,

    ஓசூரில் வன்னியர் " மணமாலை" ஆலோச னைக்கூட்டம் மத்தம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பா.மா.க. வக்கீல்கள் பிரிவு சமூகநீதி பேரவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கனல் கதிரவன் தலைமை தாங்கினார்.

    பா.ம.க. மாநில துணைத்தலைவர் தேவராஜன், மாவ ட்ட செய்வாளர் அருண்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ம.க.மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட வரன்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.

    • இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
    • பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஓசூர்,

    ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில், கணினி அறிவியல் மற்றும் பயன்பட்டியல் துறை சார்பில், வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவும், தரவு அறிவியலும் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. முன்னதாக கணினி அறிவியல்துறை தலைவர் சாந்தி ஜெஸ்லெட் வரவேற்றார்.

    எம்.ஜி.ஆர். கல்லூரி முதல்வர் முத்துமணி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில், கணினி தொழில்நுட்பம், எல்லா துறை மாணவர்களுக்கும் அடிப்படையானது, அத்தியாவசியமானது என்றும், அதனை, மற்ற துறை மாணவர்களும் பயன்படுத்தி தங்கள் துறை ஆராய்ச்சிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    முன்னாள் துணை வேந்தரும், அதியமான் கல்வி குழும ஆலோசகருமான முத்துச்செழியன் கணினி செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தரவு தொழில்நுட்பத்தால் உலகம் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி எட்டியுள்ளது. இந்த தொழில் நுட்பமானது, மனிதர்களுக்கு ஏழாம் அறிவாக செயல்படுகிறது. எனவே மாணவர்கள் இந்தத் தொழில் நுட்பங்களை பயின்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    கருத்தரங்கில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர்ஒவ்வொரு துறை மாணவர்களுக்கும் கட்டாயம் கணினிப் பாடம் வைக்கவேண்டும்.

    மேலும், கணினித் துறையில் பல பிரிவுகள் பிரித்து இன்றைய தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்களின் நுண்ணறிவை பெருக்கிக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்றார்.

    இதில், பாரதிதாசன் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஜார்ஜ் தர்மபிரகாஷ்ராஜ் உள்பட பலர் பேசினர்.கருத்தரங்கில், தமிழகம், பெங்களூரூவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்களும், ஆய்வறிஞர்களும் கலந்து கொண்டனர்.

    முடிவில் கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.

    • கலையரசன்- கலையரசி என்ற சான்றிதழ் வழங்கி துபாய் பள்ளி சுற்றுலா பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
    • பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    தமிழகத்தில் பள்ளி மாண வர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளை நடத்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்து பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பாக அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலை முறைகளுடன் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் வாய்ப்பாட்டிசை, நடனம், காட்சிக்கலை உள்ளிட்ட 10 தலைப்புகளில் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு அதில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்களை கலையரசன்- கலையரசி என்ற சான்றிதழ் வழங்கி துபாய் பள்ளி சுற்றுலா பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இதனையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் அருகேயுள்ள மேட்டுப்புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது .இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வரதராஜன் மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகம்மாள், உதவி தலைமை ஆசிரியர்கள் அம்பேத்கர், வெங்கடேசன், ஆசிரியர்கள் முருகன், பார்த்திபன், ராஜ்குமார், நதியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெங்கடேஸ்வரி மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வங்கியில் இருந்து பேசுவதாக நம்பியதாக ராஜவேல் அந்த எண்களை மர்ம ஆசாமியிடம் கூறியுள்ளார்.
    • ராஜவேலுவின் வங்கி கணக்கில் இருந்து 6 லட்சத்து 32 ஆயிரத்து 665 ரூபாயை அந்த ஆசாமி அபேஸ் செய்துவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன்ஷிப் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 61). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜவேலவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறிய ஒரு ஆசாமி ராஜவேலின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றின் ரகசிய எண்களை கேட்டு வாங்கியுள்ளார். வங்கியில் இருந்து பேசுவதாக நம்பியதாக ராஜவேல் அந்த எண்களை மர்ம ஆசாமியிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து ராஜவேலுவின் வங்கி கணக்கில் இருந்து 6 லட்சத்து 32 ஆயிரத்து 665 ரூபாயை அந்த ஆசாமி அபேஸ் செய்துவிட்டார். வங்கியில் இருந்து செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி மூலம் பணம் பறிபோனதை அறிந்த ராஜவேல் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தாார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • புகார் மனுவை வாபஸ் பெற சொல்லி அந்த ரவுடி சாந்தகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே பின்னமங்கலம் அடுத்துள்ளது எலேசந்திரம் கிராமம். இங்குள்ள சென்னே கவுண்டன் ஏரிக்கரை சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்டவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தொட்டதோகூர் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வத் என்பவரின் மகன் சாந்தகுமார் (வயது 30) என்றும், கார் டிரைவர் என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தகுமார் கொல்லப்பட்டது குறித்து அவரது மனைவி சுஷ்மா மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கொல்லப்பட்ட சாந்தகுமாரின் மனைவி சுஷ்மா பெங்களூரு போலீசில் கொடுத்த புகாரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொட்டதோகூர் பகுதியில் உள்ள மது பார் ஒன்றில் ரவுடி ஒருவருடன் சாந்தகுமாருக்கு தகராறு ஏற்பட்டதாகவும், இதில் அந்த ரவுடி சாந்தகுமாரை தாக்கியதால் இது தொடர்பாக சாந்தகுமார் அந்த ரவுடி மீது பெங்களூரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகார் மனுவை வாபஸ் பெற சொல்லி அந்த ரவுடி சாந்தகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். முதலில் வாபஸ் பெற மாட்டேன் என்று கூறிய சாந்தகுமார் நேற்று முன்தினம் புகார் மனுவை பெங்களூரு போலீஸ் நிலையத்தில் வாபஸ் பெற்றார். இந்த நிலையில்தான் தளி அருகே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்த பெங்களூரு ரவுடி தான் சாந்தகுமாரை தனது கூட்டாளிகளுடன் கடத்தி சென்று கொலை செய்து உடலை போட்டு சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின்பேரில் சாந்தகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவை சேர்ந்த நேபாள்மஞ்சு என்ற ரவுடியையும்,அவனது கூட்டாளி ஒருவனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு ஓசூர் ஒன்றிய தலைவர் திம்மா ரெட்டி தலைமை தாங்கினார்.
    • சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஓசூர் பகுதியில் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடி யாக சிகிச்சை வழங்க கோரியும், நோயினால் இறந்த ஆடு, மாடுகளுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணாசிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு ஓசூர் ஒன்றிய தலைவர் திம்மா ரெட்டி தலைமை தாங்கினார். சி.பி.எம். கட்சியின் மாநகர செயலாளர் சி.பி.ஜெய ராமன், ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி, ஆகியோர் கண்டனவுரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    • பாரூர் பெரிய ஏரி பகுதிக்கு சென்ற நிரோஜ் சர்மா தடுமாறி ஏரிக்குள் தவறி விழுந்துள்ளார்
    • நிரோஜ் சர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மத்தூர்,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரோஜ் சர்மா (வயது 45).மரவேலைகள் செய்பவர். இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள பனங்காட்டூரில் சின்னசாமி என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வேலையைமுடித்துவிட்டு மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் பாரூர் பெரிய ஏரி பகுதிக்கு சென்ற நிரோஜ் சர்மா தடுமாறி ஏரிக்குள் தவறி விழுந்துள்ளார்.இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்று நிரோஜ் சர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குள்ளனூர் சித்தேரி ஏரி தண்ணீர் நிரம்பி இன்று வெளியேறியது.
    • கிடா வெட்டி ,இனிப்புகள் வழங்கி தண்ணீரில் மலர் தூவி வரவேற்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் துறைக்கு சொந்தமான குள்ளனூர் சித்தேரி ஏரி சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் இல்லாமல் புதர் மண்டி வறண்டு காணப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் போச்சம்பள்ளி சுற்று வட்டாரங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனால் தற்பொழுது போச்சம்பள்ளி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    இதனால் ஊராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிக்கரைகளை சீர் செய்து தண்ணீர் தேங்கும் வகையில் வேலைபாடுகள் செய்து தண்ணீர் தேங்கி வந்த நிலையில் குள்ளனூர் சித்தேரி ஏரி தண்ணீர் நிரம்பி இன்று வெளியேறியது.

    நிரம்பிய தண்ணீர் வெளியே செல்ல கிராம மக்கள் ஜெ.சி.பி. எந்திரம் மூலமாக கால்வாய் தூர் வாரி பாதை அமைத்தனர். பின்னர் ஏரியில் தண்ணீர் நிரம்பிய மகிழ்ச்சியில் கிராம மக்கள் ஏரியின் கரையில் பூஜை செய்து ,கிடா வெட்டி ,இனிப்புகள் வழங்கி தண்ணீரில் மலர் தூவி வரவேற்றனர்.

    இதில் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தமூர்த்தி, சீனிவாசன், ஊர் முக்கியஸ்தர்கள் செந்தில் சண்முகம் தூயமணி, செல்வம் ஊராட்சி குழு துணை தலைவர் அருள், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • மது அருந்தியுள்ளனர்.அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த ராயக்கோட்டை போலீசார் பூங்கனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (வயது 34). லாரி டிரைவர்.

    இவரது நண்பர்கள் குமார்(45), பூங்கன்(45), மற்றொரு குமார் (42). இவர்களும் லாரி டிரைவர்கள்.

    இவர்கள் நேற்று மாலை ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகேயுள்ள அரசு மதுக்கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த குமார் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து முனிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.படுகாயம் அடைந்த முனிகிருஷ்ணன் ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து முனி கிருஷ்ணன் தந்த புகாரின்பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த ராயக்கோட்டை போலீசார் பூங்கனை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வரு கின்றனர்.

    • வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள வாலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சதீஸ் (வயது20). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த சதீஸ் நேற்றுமுன்தினம் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×