என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டன.
    • தற்போது அந்த பெண்மணி பூரண குணம் அடைந்துள்ளார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டனத்தில் அைமந்துள்ளது ஜி.பி. மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்மணியை புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    அந்த பெண்மணிக்கு வாய் புற்று நோய் பாதிப்பு இருந்துள்ளது. அதுவும் இறுதி கட்டம் என்று சொல்லக்கூடிய 4-வது நிலையில் அவரது நோய் பாதிப்பு இருந்துள்ளது. அந்த பெண்மணியை ஏற்கனவே பல மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

    ஆனால் குணம் அடைய வில்லை. இந்நிலையில் அவருக்கு காவேரிப்பட்டணம் ஜி.பி. மருத்துவமனை குறித்து ஒரு டாக்டர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி இங்கு சேர்க்கப்பட்ட அவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டன.

    பின்னர் டாக்டர்கள் பார்த்திபன், அருண் ஆகியோர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மயக்கவியல் டாக்டராக பிரபு உடனிருந்துள்ளார். சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நடந்த அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

    அறுவை சிகிச்சைக்கு பிறகும் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். சுமார் 25 நாட்கள் தொடர் கண்காணிப்பிற்கு பிறகு தற்போது அந்த பெண்மணி பூரண குணம் அடைந்துள்ளார். அந்த பெண்மணியின் உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

    • 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்.
    • 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயியான இவருக்கு சொந்தமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சல் முடித்து தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் அனைத்து ஆடுகளையும் கட்டி வைத்தார்.

    பின்னர் இன்று காலை மேய்ச்சலுக்கு செல்ல கொட்ட கையில் வந்து பார்த்த போது மர்ம விலங்கு கடித்து 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விதை உற்பத்தி மையத்தில் எரிவேளாண் அறிவியல் திருவிழா நடந்தது.
    • மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி டாக்டர் பிரதிஷ் குமார் வரவேற்றார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தளி சாலையில் உள்ள மத்திய எரிபட்டுப்புழு விதை உற்பத்தி மையத்தில் எரிவேளாண் அறிவியல் திருவிழா நடந்தது.

    விழாவிற்கு, பட்டு வளர்ச்சித் துறை மண்டல இணை இயக்குனர் எல். சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி டாக்டர் பிரதிஷ் குமார் வரவேற்றார். இதில், சேலத்தில் உள்ள மண்டல பட்டு வளர்ச்சி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டாக்டர் தாஹிரா பீவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும், அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் எஸ். ஸ்ரீதரன், மேட்டுப்பாளையம் பாரஸ்ட் கல்லூரியின் பட்டு வளர்ச்சித் துறை தலைவர் மணிமேகலை, ஓசூர் அரசு கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், விஞ்ஞானி ஜான்சி லட்சுமி, ஓசூர் பட்டு வளர்ச்சி பயிற்சி நிலைய முதல்வர் வி.பாபு ஆகியோர் விழாவில் பேசினர்.

    இதில், 350-க்கும் மேற்பட்ட எரிபட்டு விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி எரிபட்டு தொடர்பான கண்காட்சியும் நடைபெற்றது. முடிவில், பட்டு வளர்ச்சித் துறை விஞ்ஞானி புனிதவதி நன்றி கூறினார்.

    • கழிவு நீர் கால்வாய் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது.
    • தற்போது இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை பஞ்சாயத்து தலைவர் தூர்வாரி கொடுத்துள்ளார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஅள்ளி காவேரிப்பட்டினத்துடன் இணைக்கும் முக்கிய சாலையான கொசமேடு, மேல் மக்கான் சாப்பரம் செல்லும் வழி மற்றும் கே.ஆர்.பி. அணைக்கு செல்லும் வழியில் உள்ள கழிவு நீர் கால்வாய் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது.

    இதனால் கழிவுநீர் அங்குள்ள வீடுகளுக்குள் போகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் காவிரியிடம் முறையிட்டனர்.

    பஞ்சாயத்து தலைவர் காவேரி உடனடியாக மினி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அனைத்து கால்வாய்களையும் தூர்வார ஏற்பாடு செய்தார். கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் பொழுது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது. இதனை அடுத்து நாங்கள் தலைவரிடம் முறையிட்டோம். அவர் உடனடியாக எங்களுக்கு தூர் வாரி தருகிறேன் என உறுதி அளித்தார்.

    இதனையடுத்து தற்போது இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரி கொடுத்துள்ளார். மேலும் இப்பகுதியில் மீன் கடை, பூ கடை, காய் கடை, பேக்கரி கடை, மெக்கானிக்கடை ,ஓட்டல் கடை, கோழி உள்ளிட்ட கடைகள் வைத்துள்ளவர்கள் தங்கள் கடைகளை கழிவு நீர் கால்வாய் மேலே வைத்துக் கொண்டுள்ளனர்.

    இதனால் சாலைகள் குறுகிவிட்டன. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரிய பின்பு கழிவு நீர் கால்வாய் மீது கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டாம் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரிபாக்கியை பலர் செலுத்தவில்லை.
    • ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்து வரி, 3 கோடியே, 65 லட்சம், குடிநீர் கட்டணம், 3 கோடியே, 3 லட்சம், பாதாள சாக்கடை திட்டத்தில், 81 லட்சம் உள்பட, 7.50 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி உள்ளது. வரிபாக்கி உள்ள தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரிபாக்கியை பலர் செலுத்தவில்லை.

    இந்த நிலையில் நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் லூக்காஸ், வருவாய் உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கிருஷ்ணகிரி டி.பி., லிங்க் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜப்தி நோட்டீசை ஒட்டினார்கள். அதில், கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் தொழில்வரி, சொத்துவரி கட்டப்படவில்லை.

    நிலுவைத ்தொகையான, 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 608 ரூபாயை வருகிற 6-ந் தேதிக்குள் கட்டத்தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நகராட்சியில் வரி பாக்கி நிலுவையுலுள்ள அனைவரும் உடனடியாக வரியை கட்டுமாறும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டம் எஸ்பிக்கள் காமன் தொட்டி கிராமத்திற்கு வருகை.
    • சேலம் சரக டிஐஜி சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

    இதனிடையே ஓசூர் அருகே கோப சந்திரம் பகுதியில் சின்ன திருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர்.

    ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.

    அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

    இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.

    மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறிநின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    இந்நிலையில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    ஏராளமான அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர். இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதற்கிடையே, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டம் எஸ்பிக்கள் காமன் தொட்டி கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். சேலம் சரக டிஐஜியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
    • ஏராளமான அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

    இதனிடையே ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சின்னதிருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    100-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.

    அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

    இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.

    மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறிநின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    இந்நிலையில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    ஏராளமான அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர்.

    இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

    வாகனங்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் படிப்படியாக போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
    • எருது விடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதனிடையே ஓசூர் அருகே ஆவலப்பள்ளியில் சப்ளம்மா கோவில் விழா மற்றும் பொங்கல் விழாவையொட்டி, நேற்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து எருது விடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ஆனால்,எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.

    நீதிமன்ற உத்தரவுபடி, விழா நடத்த காப்பீடு செய்த பின்னர் உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்பதால், நேற்று நடைபெற இருந்த எருது விடும் விழா, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் விழாவை காண ஆர்வமாக இருந்த பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் அங்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும், ஓசூர் அட்கோ போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விவசாயிகள் பல்வேறு ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • அரைகுறை ஆடையுடன் பட்டை நாமம் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளை நில பகுகளில் 6-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இதற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் விவசாய உபகரணங்களை வைத்துக்கொண்டு வீடுகளில் கருப்பு கொடி பறக்க விட்டு உத்தனப்பள்ளி ஆர். ஐ. அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றுகாலை உத்தனப்பள்ளி ஊராட்சி குகனுர், லாலிக்கல் பகுதி விவசாயிகள் சிப்காட் நில எடுப்புக்கு எதித்து தெரிவித்து தங்கள் நில பகுதியில் கருணை கொலை செய்யுங்கள் என பேனர் வைத்து உள்ளனர்.

    சூளகிரி அருகே சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்த்து ஊத்தனப்பள்ளியில் 28-வது நாளாக காத்திருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். அரைகுறை ஆடையுடன் பட்டை நாமம் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஆர். ஐ. அலுவலகத்தில் மனு அளித்தனர். 

    • அல்போன்சா, நீலம் மற்றும் செந்தூரா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • தத்துப் பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் உதிர்ந்துவிடும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தோதாபுரி, அல்போன்சா, நீலம் மற்றும் செந்தூரா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    பருவ நிலை மாற்றத்தினாலும் பூக்கும் பருவத்தில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலாலும் மா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

    மா பூத்திருக்கும் இந்த நிலையில் விவசாயிகளிடயே மா பயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டாயம் வேண்டும்.

    டிசம்பர்-ஜனவரி மாதங்களில் மா மரங்கள் பூக்கும் நிலையில் பூக்களைத் தாக்கும் தத்துப் பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் உதிர்ந்துவிடும்.

    இதனை கட்டுப்படுத்திட தைமீத்தோஸாம் 0.20 கிராம்- ஒரு லிட்டர் தண்ணீர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மரம் பூ பூக்க ஆரம்பிக்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

    அடுத்து ஏப்ரல் மாதத்தில் பிஞ்சு காய்களை சேதப்படுத்தக்கூடிய புழுக்களான மா இலைப்புழு மற்றும் காவனப் புழுக்களை கட்டுப்படுத்திட அசாராக்டின் 1500 பி.பி.எம். 4 மில்லி-1 லிட்டர் தண்ணீர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

    பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து மா மகசூலைப் பாதுகாத்திட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை ஆகிய 6 வட்டாரங்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி அந்தந்த வட்டார அளவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை வட்டார அலுவலர்களை தொடர்பு கொண்டு பயிற்சியில் பங்கு பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • 28-ந் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, அரசாணையின் படி, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்.டி.சி,என்.ஏ.சி. பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்.டி.சி./என்.ஏ.சி. பெற்றவர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழில் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022-ல் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு, தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி, ஓசூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகி பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர், முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஓசூர். தொலைபேசி எண். 04344-262457 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
    • இதில் வார்டு உறுப்பினர்கள். அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் மனோ கரன், துணை தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரூராட்சியில் ரூ.36.50 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் பணிமேற்கொள்ள மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    மேலும் 18 வார்டுகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதம் நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள். அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×