என் மலர்
கிருஷ்ணகிரி
- ஒசூா் - கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கிரானைட் தொழிற்சா லைகள் செயல்படுகின்றன.
- ரூ. 1000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஓசூர்,
தமிழ்நாட்டில் பல வண்ணங்கள், அமைப்பு களில் பரந்த அளவிலான கிரானைட் கற்கள் கிடைப்பதால் ஒசூா் - கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கிரானைட் தொழிற்சா லைகள் செயல்படுகின்றன.
இத்தொழிலில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா்.
கிரானைட் தொழிற்சா லைகள் சிறந்த முறையில் இயங்க அதன் அருகில் குவாரிகள் இருப்பதும், தரமான கிரானைட் கற்கள் எளிதில் கிடைப்பதை பொறுத்ததாகும்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான குவாரிகள் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அரசின் சட்ட சிக்கல்களால் மூடப்பட்டுள்ளன.
இதன் விளைவாக தேவையான கிரானைட் கற்கள் கிடைக்காததால் நவீன கல் அறுப்பு இயந்திரங்கள் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே செயல்படு கின்றன. இதன் விளைவாக தொழிற்சாலைகளில் பணியாளா்கள் குறைக்கப்படு கின்றனா்.
பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கிரானைட் தொழிற்சா லைகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கிரானைட் கற்கள் எளிதில் கிடைக்காதலால் வெளி மாநிலங்களில் இருந்து கற்கள் வாங்குவதால் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதால் சாத்தியமில்லை.
இந்தத் தொழில் நலிவடைந்து வருவதால் கடந்த ஓராண்டில் சுமாா் 5000 தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். பல கிரானைட் யூனிட்கள் தமிழ்நாட்டிலிருந்து ராஜஸ்தானுக்கு இடம் பெயா்கின்றன.
இந்த இடம்பெயா்வு காரணமாக ரூ. 1000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிரானைட் குவாரிகள் செயல்படாததாலும், கிரானைட் பதப்படுத்தும் யூனிட்கள் ஓரளவே செயல்படுவதாலும் அரசுக்கு ரூ. 5,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கிரானைட் உற்பத்தியாளா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
- தற்சார்பு இந்தியா 2047 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
- நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்றார்.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில், தற்சார்பு இந்தியா 2047 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் முத்துமணி முன்னிலை வகித்தார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் மஞ்சுநாத் வரவேற்றார்.
முத்துமணி பேசுகையில், மாணவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்றவாறு அவர்கள், தங்களை தயார் செய்துகொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்றார்.
இந்த கருத்தரங்கில், மதுரை உற்பத்தி சபையின் செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு பேசுகையில், மேக் இன் இந்தியா திட்டத்தில் நமக்குத் தேவையான பொருட்களை 30 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி செய்கின்றோம். சிலிக்கானுக்கு மாற்றாக இந்தியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய சோடியம் பயன்படுத்தத் திட்டமிட்டப்பட்டிருக்கிறது.
இதனால் இந்தியா, உற்பத்தியில் 2047-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்ற நாடாக மாறிவிடும். அதற்கு, மாணவர்கள் திறம்பட செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மேலும் நிகழ்ச்சியின்போது,
மதுரை உற்பத்தி சபையும், ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறையும் இணைந்து அதியமான் கல்வி அறக்கட்டளையின் ஆலோசகர் முத்துச்செழியன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. . இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கானக் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடைபெறும் என ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், இந்தகருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில், பேராசிரியர் கோபி நன்றி கூறினார்.
- கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள என்னேகால் புதூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 23). இவர் குருபரபள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
அனிதாவுக்கும், சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுரேசை பிரிந்த அனிதா தொட்டதிம்மனஅள்ளியில் உள்ள தனது அண்ணன் வேங்கடேன் என்பவரது வீட்டுக்கு வந்து தங்கிவிட்டார்.
அங்கிருந்து அனிதா வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்ற அனிதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அனிதா வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று வெங்கடேசன் விசாரித்தார்.
அப்போது 1-ந்தேதி அன்று அந்த நிறுவனத்துக்கு வந்த சுரேஷ், அனிதாவை அழைத்து பேசியதாகவும், இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டு சென்றதும் தெரிய வந்தது.
இது குறித்து குருபரபள்ளி போலீசில் வெங்கடேசன் புகார் செய்துள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர்.
- போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
- கலவரத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். தொடர்ந்து ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே விழா நடத்த அனைத்து ஏற்பாடு–களும் தயார் நிலையில் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களின் மாடுகளை அழைத்து வந்தனர். கோபசந்திரம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், 300-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே விழா நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் எருதுவிடும் விழா தொடங்க வில்லை.
மறியல்-வன்முறை
ஏற்கனவே 2 முறை விழா நடத்த மாடுகளை அழைத்து வந்து ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது 3-வது முறையாக விழா தொடங்க தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேறறு காலை 7.30 மணி அளவில் திடீரென ஓசூர் அருகே கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் பிரிவு சாலை கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் டிப்பர் லாரியை தேசிய நெடுஞ்சா லையின் குறுக்கே நிறுத்தியும், சாலையில் ஜல்லிக்கற்களை கொட்டியும் மறியல் போராட்டத்தை தொடங்கி–னர். பேச்சுவார்த்தை இதையடுத்து நேரம் செல்ல செல்ல 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் திரண்டனர்.
இதனால் கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் அதி விரைவுப்படை போலீசார், வஜ்ரா வாகனம் மற்றும் துப்பாக்கி ஏந்திய 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் சமாதானம் அடையாத மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீசார் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் கற்களை வீச தொடங்கினர்.
இதனால் சாலையில் நின்ற அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், கார், ஜீப் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள், பயணிகள் சிலரும் காயம் அடைந்தனர்.
கண்ணீர் புகை குண்டு வீச்சு
மேலும் போராட்டக்–காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை தூக்கி வீசினர். அங்கு பெரும் பதற்றம் ஏற்படவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுற–மும் சிதறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் என 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற சரோஜ்குமார் தாக்கூர்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.
300 பேர் அதிரடி கைது
மேலும் இந்த போராட்டம் சுமார் 1.30 மணி வரை நடந்தது. இதனால் சுமார் 5 மணி நேரம் பயங்கர கலவரம் நடந்துள்ளது. போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை எழுதி வாங்கி விட்டு மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கூறுகையில், சாலை மறியல், வன்முறையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து போராட்டக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எருது விடும் விழா நடத்துபவர்கள் உரிய அனுமதி பெற்று பாதுகாப்பு–டன் நடத்த வேண்டும். உயிர் சேதமும், கால்நடைகளுக்கு பாதிப்பும் ஏற்படாதவாறு கலெக்டரிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று எருது விடும் விழாவை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் கலவரம் நடத்த நெடுஞ்சாலை பகுதி மற்றும் கோபசந்திரம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. அங்கு ஏராளமான போலீ–சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடாத வகையில் நெடுஞ்சாலையில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
- இளை ஞர்களுக்கு பல்வே றுதிறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- பயிற்சி அளிக்கும் நிறுவ னத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ள ப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினத்தை சார்ந்த இளை ஞர்களுக்கு பல்வே றுதிறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தாட்கோ நிறுவனமானது புகழ் பெற்ற தனியார் வங்கியுடன் இணைந்து கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியை வழங்க உள்ளது.
இந்த பயிற்சியில் சேர 22 வயது முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் பழங்குடியின சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கணிதம்) முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 20 நாட்கள் ஆகும். மேலும், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவ னத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ள ப்படும்.
இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கு அனுமதி க்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு பி.எஸ்.எப்.ஐ.யால் அங்கீகரி க்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக பணியில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். இப்பணியில் ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பெறலாம். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களின் மாடுகளை அழைத்து வந்தனர்.
- கோபசந்திரம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், 300-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இருந்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். தொடர்ந்து ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களின் மாடுகளை அழைத்து வந்தனர். கோபசந்திரம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், 300-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே விழா நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் எருதுவிடும் விழா தொடங்கவில்லை.
ஏற்கனவே 2 முறை விழா நடத்த மாடுகளை அழைத்து வந்து ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது 3-வது முறையாக விழா தொடங்க தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று காலை 7.30 மணி அளவில் திடீரென ஓசூர் அருகே கோபசந்திரம் தட்சிணதிருப்பதி கோவில் பிரிவு சாலை கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் டிப்பர் லாரியை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தியும், சாலையில் ஜல்லிக்கற்களை கொட்டியும் மறியல் போராட்டத்தை தொடங்கினர். பேச்சுவார்த்தை இதையடுத்து நேரம் செல்ல செல்ல 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் திரண்டனர்.
இதனால் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் அதி விரைவுப்படை போலீசார், வஜ்ரா வாகனம் மற்றும் துப்பாக்கி ஏந்திய 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் சமாதானம் அடையாத மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீசார் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் கற்களை வீச தொடங்கினர்.
இதனால் சாலையில் நின்ற அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், கார், ஜீப் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள், பயணிகள் சிலரும் காயம் அடைந்தனர்.
மேலும் போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை தூக்கி வீசினர். அங்கு பெரும் பதற்றம் ஏற்படவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் என 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற சரோஜ்குமார் தாக்கூர்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் இந்த போராட்டம் சுமார் 1.30 மணி வரை நடந்தது. இதனால் சுமார் 5 மணி நேரம் பயங்கர கலவரம் நடந்துள்ளது. போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை எழுதி வாங்கி விட்டு மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கூறுகையில், சாலை மறியல், வன்முறையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து போராட்டக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எருது விடும் விழா நடத்துபவர்கள் உரிய அனுமதி பெற்று பாதுகாப்புடன் நடத்த வேண்டும். உயிர் சேதமும், கால்நடைகளுக்கு பாதிப்பும் ஏற்படாதவாறு கலெக்டரிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று எருது விடும் விழாவை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் கலவரம் நடத்த நெடுஞ்சாலை பகுதி மற்றும் கோபசந்திரம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடாத வகையில் நெடுஞ்சாலையில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
- மேய்ச்சலுக்கு செல்ல கொட்டகையில் வந்து பார்த்த போது மர்மவிலங்கு கடித்து 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- தகவல் அறிந்து சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயியான இவருக்கு சொந்தமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சல் முடித்து தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் அனைத்து ஆடுகளையும் கட்டி வைத்தார்.
பின்னர் இன்று காலை மேய்ச்சலுக்கு செல்ல கொட்டகையில் வந்து பார்த்த போது மர்மவிலங்கு கடித்து 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
- ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி.ஆர். நகர் சிவன்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 24 ). இவர் தனது 4 வயது குழந்தை ஸ்ரீனிதுயுடன் கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
இது குறித்து அவரது கணவர் கம்சலா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல கேளுகுண்டா கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் தாமோதரன் (15). இவரது உறவினர் ஒருவர் வெங்கடேஷ் நகரில் வசித்து வருகிறார். அவரது மகன்களான வினோத்குமார் (15), நடராஜ் (16) ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெரியசாமி வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் துக்க காரியம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெரியசாமி 3 சிறுவர்களையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெரியசாமி தந்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கோவிந்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ள சிறுமியின் தாய் பிரதீபா தனது மகளை தாகேபல்லிதின்னா பகுதியை சேர்ந்த சிவகுமார் (19) என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்திருந்தது.
- பூக்கள் நன்றாகப் பூத்திருந்த நிலையில் பனியால் கருகி உதிர்ந்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வருடம் மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்திருந்தது.
ஆனால், டிசம்பர்முதல் தற்போது வரை பனியி ன்தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மா மரங்களில் பூக்கள் கருகி உதிர்ந்தன.
மேலும், பூச்சித் தாக்குதல் அதிகரித்தது. தற்போது, பிஞ்சுகளும் உதிர்ந்து வருகிறது. இதனால், உற்பத்தி பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக விவசாயி ஒருவர் கூறியதா வது:-
மாமரங்களில் பூக்கள் நன்றாகப் பூத்திருந்த நிலையில் பனியால் கருகி உதிர்ந்தன. வழக்கமாக 2 முறை மருந்து தெளித்தால், பூக்கள் கருகுவது குறையும். ஆனால், 3 முறை மருந்து தெளித்தும் பூக்கள் உதிர்வதும், கருகுவதும் குறைவில்லை. தற்போது, பிஞ்சுகளும் உதிர்ந்து வருகிறது. இதை தடுக்க தரமான மருந்தை அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக தோட்ட க்கலைத் துறை அலுவலர்கள் கூறியதாவது:-
மா மரங்கள் பூக்கும் நிலையில் பூக்களைத் தாக்கும் தத்துப் பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் உதிர்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த, 'தைமீத்தோஸாம்' 0.20 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். பூச்சிகளைத் தொடர்ந்து சாம்பல் நோய், பழ அழுகல் மற்றும் நுனி தண்டு அழுகல் நோய் போன்ற நோய்கள் பூக்காம்பு, பூக்கள் மற்றும் இளம் பிஞ்சுகளைத் தாக்கும்.
இதனால், பூக்கள் கருகி காய்பிடிப்புத் திறன் குறைந்து அதிகப்படியான மகசூல் இழப்பு ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த, 'கார்பன்டாசிம்' 1 மில்லியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் கூறியதாவது:-
பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து மா மகசூலைப் பாதுகாக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை ஆகிய 6 தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி வரை விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இதில், விவசாயிகள் பங்கேற்றுப் பயன்பெறலாம். மேலும், விவரங்கள் அறிய அந்தந்தப் பகுதி தோட்டக் கலைத் துறை வட்டார அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லாட்டரி விற்றவர்களை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர்.
- கைதானவர்களிடம் இருந்து பணம், போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள், லாட்டரி விற்றவர்களை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர்.
அந்த வகையில் பர்கூர் மல்லபாடி பகுதியில் காதர்பாஷா (52), கிருஷ்ணகிரி அவ்வை நகர் பகுதியை சேர்ந்த அஜய் (21), ஓசூர் காடிபாளையம் பகுதியை சேர்ந்த மகபூப் (59), ஓசூர் டவுன் பகுதியில் சென்னமூர்த்தி (40) ஆகியோர் கைதாகினர்.
இதேபோல சூளகிரி நல்லகானகொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (26), அஞ்செட்டி நாட்றாபாளையம் பகுதியை சேர்ந்த ரகுநாதன் (45), சிவண்ணன் (43), சபீர் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல பழைய குற்றவாளிகளான நாகரசம்பட்டி ஈஸ்வரி (37), வீரமலையை சேர்ந்த மனோ (40), தட்டக்கள் பகுதியை சேர்ந்த காவேரி (எ) அண்ணாமலை (57), காட்டுகொல்லையை சேர்ந்த சின்னையன் (60)ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
- கொலை செய்யப்பட்டு கிடந்தது ஓசூரில் மாயமான சல்மான் என உறுதி செய்யப்பட்டது.
- காதல் விவகாரத்தில் சல்மான்கான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
ஓசூர்,
கர்நாடகா மாநிலம் கனகபுரா மாவட்டம் கங்கிலிபுறா பகுதியை சேர்ந்தவர் கலிமுல்லா. இவருடைய மகன் சல்மான்கான் (வயது 23). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஓசூர் ராம்நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்தார்.
மேலும் அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதை அறிந்த சல்மான்கான் சிறுமி தன்னை காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அனுப்பி திருமணத்தை நிறுத்தினார்.
மீண்டும் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகளை நிறுத்த சல்மான்கான் முயற்சி செய்ததால் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் சல்மான்கானை எச்சரித்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 10-ந் தேதி சல்மான்கான் மாயமானார்.
இது தொடர்பாக அவரது தாய் ஹாதாஜ் பானு கடந்த 26-ந் தேதி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சல்மான்கானை தேடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் தாவரக்கரே பகுதியில் குட்டை ஒன்றில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக அந்த மாநில போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஓசூரில் மாயமான சல்மான் என உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இக்கொலை வழக்கு ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் காதல் விவகாரத்தில் சல்மான்கான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஓசூர் ராம்நகரை சேர்ந்த ஜான்பாஷா (36), சாதிக் (45), வாஜித் (25), முகமது அலி (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் இக்கொலையில், ஓசூர் தளி சாலையை சேர்ந்த ஸ்ரீகாந்த் (36), தர்மபுரி மாவட்டம் திருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த கமலேசன் (28) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் சேலம சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.
- வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.
இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறு த்தியிருந்தது.
இதனிடையே ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சின்னதிருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடு களையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
100-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.
அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.
மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறிநின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
இந்நிலையில் இளை ஞர்களின் போராட்டம் எதி ரொலியாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஏராளமானஅரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர்.
இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதையடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
வாகனங்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.பின்னர் போலீசார் படிப்படியாக போக்குவரத்தை சீர் செய்தனர்.






