search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25 வருடங்களுக்கு பின்பு கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு
    X

    கழிவுநீர் கால்வாய் ஜே.சி.பி எந்திரம் மூலம் தூர்வாரபட்டு வருவதை பஞ்சாயத்து தலைவர் காவேரி பார்வையிட்டார்.

    25 வருடங்களுக்கு பின்பு கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு

    • கழிவு நீர் கால்வாய் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது.
    • தற்போது இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை பஞ்சாயத்து தலைவர் தூர்வாரி கொடுத்துள்ளார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஅள்ளி காவேரிப்பட்டினத்துடன் இணைக்கும் முக்கிய சாலையான கொசமேடு, மேல் மக்கான் சாப்பரம் செல்லும் வழி மற்றும் கே.ஆர்.பி. அணைக்கு செல்லும் வழியில் உள்ள கழிவு நீர் கால்வாய் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது.

    இதனால் கழிவுநீர் அங்குள்ள வீடுகளுக்குள் போகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் காவிரியிடம் முறையிட்டனர்.

    பஞ்சாயத்து தலைவர் காவேரி உடனடியாக மினி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அனைத்து கால்வாய்களையும் தூர்வார ஏற்பாடு செய்தார். கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் பொழுது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது. இதனை அடுத்து நாங்கள் தலைவரிடம் முறையிட்டோம். அவர் உடனடியாக எங்களுக்கு தூர் வாரி தருகிறேன் என உறுதி அளித்தார்.

    இதனையடுத்து தற்போது இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரி கொடுத்துள்ளார். மேலும் இப்பகுதியில் மீன் கடை, பூ கடை, காய் கடை, பேக்கரி கடை, மெக்கானிக்கடை ,ஓட்டல் கடை, கோழி உள்ளிட்ட கடைகள் வைத்துள்ளவர்கள் தங்கள் கடைகளை கழிவு நீர் கால்வாய் மேலே வைத்துக் கொண்டுள்ளனர்.

    இதனால் சாலைகள் குறுகிவிட்டன. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரிய பின்பு கழிவு நீர் கால்வாய் மீது கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டாம் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×