என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய் புற்று நோயாளிக்கு வெற்றிகர அறுவை சிகிச்சை
    X

    காவேரிப்பட்டணம் ஜி.பி.மருத்துவமனையில் வாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்ணையும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் பார்த்திபன், அருண் ஆகியோரையும் காணலாம்.

    வாய் புற்று நோயாளிக்கு வெற்றிகர அறுவை சிகிச்சை

    • அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டன.
    • தற்போது அந்த பெண்மணி பூரண குணம் அடைந்துள்ளார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டனத்தில் அைமந்துள்ளது ஜி.பி. மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்மணியை புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    அந்த பெண்மணிக்கு வாய் புற்று நோய் பாதிப்பு இருந்துள்ளது. அதுவும் இறுதி கட்டம் என்று சொல்லக்கூடிய 4-வது நிலையில் அவரது நோய் பாதிப்பு இருந்துள்ளது. அந்த பெண்மணியை ஏற்கனவே பல மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

    ஆனால் குணம் அடைய வில்லை. இந்நிலையில் அவருக்கு காவேரிப்பட்டணம் ஜி.பி. மருத்துவமனை குறித்து ஒரு டாக்டர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி இங்கு சேர்க்கப்பட்ட அவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டன.

    பின்னர் டாக்டர்கள் பார்த்திபன், அருண் ஆகியோர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மயக்கவியல் டாக்டராக பிரபு உடனிருந்துள்ளார். சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நடந்த அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

    அறுவை சிகிச்சைக்கு பிறகும் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். சுமார் 25 நாட்கள் தொடர் கண்காணிப்பிற்கு பிறகு தற்போது அந்த பெண்மணி பூரண குணம் அடைந்துள்ளார். அந்த பெண்மணியின் உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×