என் மலர்
கிருஷ்ணகிரி
- உடலிலும், முகத்திலும் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவரது உடல் கிடந்தது.
- கொன்று உடலை இங்கு வீசியுள்ளனரா?என்று விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டேனிஷ் நகர் பகுதியில் இருந்த ஒரு தோப்பில் உடலிலும், முகத்திலும் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவரது உடல் கிடந்தது.
இது குறித்து மூக்கண்ட பள்ளி கிராம நிர்வாக அதிகாரி விவேக் ஷர்மா என்பவர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிணமாக கிடந்தவர் யார் என்று விசாரணை நடத்தினர்.
அதில் இறந்து கிடந்தவர் பெங்களூரு தேசிங்கு நகரை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் எவ்வாறு உயிரிழந்தார்? இந்த பகுதிக்கு வந்தது ஏன்? யாராவது அவரை அடித்து கொன்று உடலை இங்கு வீசியுள்ளனரா?என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
- பல ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி பயிரிடப்பட்டு ள்ளது.
- ஒரு கட்டு ரூ.2, ரூ.3 எனவும், கடைகளில் ரூ.10-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வருகின்றன.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் புலியரசி, மருதாண்டபள்ளி, வேம்பள்ளி, மார ண்டபள்ளி, செம்பரசனபள்ளி, அத்திமுகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி பயிரிடப்பட்டு ள்ளது.
இவை விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்டு, சூளகிரியில் உள்ள கொ த்தமல்லி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கிருந்து தினமும் மூட்டை, மூட்டையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் கொத்தமல்லி வரத்து மார்க்கெட்டுக்கு அதிகரித்து இருப்பதால் கடந்த சில நாட்களாக அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த வாரம் வரை கடைகளில் ஒரு கட்டு ரூ.20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தற்போது தோட்டங்களில் ஒரு கட்டு ரூ.2, ரூ.3 எனவும், கடைகளில் ரூ.10-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வருகின்றன. இதனால் கொத்தமல்லி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்.
மேலும் கொத்தல்லியை பறித்து விற்றாலும் செலவு கூட மிஞ்சாது என்பதால் கொத்தமல்லியை பறி க்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர். மேலும் அவை ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
- வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றுள்ளார்.
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள சீகலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நீலம்மாள் (வயது 48). இவர் நேற்று தனது வீட்டில் சமைத்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கேஸ் தீர்ந்து விட்டது. இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு சிலிண்டர் வாங்க சென்றார். சாவியை நிலைவாசலில் மேல்புறம் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட அதே பகுதியை சேந்த சீனப்பா என்பவர் அந்த சாவியை எடுத்து நீலம்மாலின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றுள்ளார்.
அதற்குள் நீலம்மாள் திரும்பி விட்டார். தன வீட்டிற்குள் சீனப்பா நுழைய முயற்சி செய்வதை கண்டு கூச்சல் போட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு வந்து சீனப்பாவை மடக்கி பேரிகை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.
- மண்ணின் நலம் அறிவோம் மற்றும் சத்து குறைபாட்டைத் தவிர்ப்போம் என்று கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண்மை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மணவர்கள் 11 பேர் கொண்ட குழுவாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் நடுப்பையூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மண் பரிசோதனை குறித்து செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வுப் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேரப் அலி முன்னிலையில், ஊர்வலம் தொடங்கப்பட்டு கிராம மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பேரணியின் போது மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை ஏந்திக் கொண்டு, உயிருக்கு பிளட் டெஸ்ட், மண்ணுக்கு மண் டெஸ்ட், மண் பரிசோதனை செய்து, மண்ணின் நலம் அறிவோம் மற்றும் சத்து குறைபாட்டைத் தவிர்ப்போம் என்று கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
- மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பள்ளி வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
ஓசூர்,
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில், மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொறுப்பு) கோபாலப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில், பள்ளி மாணவர்கள் மற்றும் என்.சி.சி, சாரணர் படை, என்.எஸ்.எஸ், என்.ஜி.சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆய்வாளர் சுரேஷ்பாபு, தலைமையாசிரியர் முனிராஜ், ஆசிரியர்கள் ரமேஷ் ராஜு, சுதாகர் மற்றும் பசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது, பள்ளி வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. முடிவில், என்.எஸ்.எஸ். அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
- கணவரை பிரிந்து கடந்த 4 வருடங்களாக வசித்து வந்தார்.
- ஆத்திரமடைந்த ருத்ரன் அங்கு சென்று ருத்ரம்மாவை கத்தியால் குத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள கொட்டையூர்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரம்மா (வயது 40).
இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ருத்ரன் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு கணவரை பிரிந்து கடந்த 4 வருடங்களாக வசித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ருத்ரம்மா மனம் திருந்தி தனது கணவன் வீட்டுக்கு திரும்பிவிட்டாராம்.இதில் ஆத்திரமடைந்த ருத்ரன் அங்கு சென்று ருத்ரம்மாவை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ருத்ரம்மா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனி கோட்டை போலீசார் ருத்ரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- மகளிர் சுய உதவி குழு ஒன்றை தொடங்கி அதன் தலைவியாக இருந்து வருகிறார்.
- ரூ.16 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள புனுக ன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 28). இவர் தனது கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு ஒன்றை தொடங்கி அதன் தலைவியாக இருந்து வருகிறார்.
இவரது குழுவில் 35 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழு மூலம் பாண்டியன் கிராம வங்கியில் கடன் வாங்கியுள்ளனர். அந்த கடன் தொகையை மாதாமாதம் முறையாக செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் வங்கியில் இருந்து கடனுக்கான தவணை தொகை வந்து சேரவில்லை என்று மஞ்சுளாவுக்கு தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது மகளிர் குழு கடன்களுக்கான அரசு துறையில் பணிபுரியும் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த நேத்ரா (எ) கில்பட்டா நேத்ரா (30) என்பவர் மகளிர் குழுவினர் செலுத்திய ரூ.16 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா ஹட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணி நடத்தினர். இதில் நேத்ரா மீதான புகார் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் அதிகாரி நடந்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவ, மாணவிகளுக்கான பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியாளர்களை தேர்வு செய்ய கண்காணிப்பு குழு மூலம் பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல இணை இயக்குனர் லதா, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் துணை இயக்குநர் குப்புசாமி, மாநில தலைவர் ஜாய், அருண், விஜய் என உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் முன்னிலையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
- 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
தண்ணீரை கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
பாம்பாறு அணை 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பாறு அணையின் முழு நீர் மட்ட உயரம் 19.68 அடி. இதன் முழு கொள்ளளவு 280 மி.க.அடி ஆகும். பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2022-2023-ம் ஆண்டு ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்த ராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள்வலசை, புளியம்பட்டி, எட்டிப்பட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் ஆகிய 12 கிராமங்களைச் சேர்ந்த 2,501 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அதே போல தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் உள்ள தா.அம்மாப்பேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி மற்றும் ஆண்டியூர் ஆகிய கிராமங்களிலுள்ள 1,499 ஏக்கர் என மொத்தம் 16 கிராமங்களிலுள்ள 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றது.
எனவே, விவசாயிகள் பொதுப் பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புளி சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.
- புளியை இருப்பு வைக்க அரசு சார்பில் குளிர் பதன கிடங்குகள் இல்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதானத் தொழிலாக உள்ளது. இங்கு மலை, சிறுகுன்றுகள் அதிகம் உள்ள நிலையில் வறட்சியைத் தாங்கும் புளி சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய புளி சந்தையான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அடுத்து தமிழகத்திலேயே மிகப் பெரிய சந்தையாகக் கிருஷ்ணகிரி பழையபேட்டை புளி சந்தை உள்ளது.
இங்கு வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை கூடுகிறது. சந்தைக்கு என தனி இடவசதிகள் இல்லாத நிலையில், சந்தை கூடும் நாட்களில் சாலைகளில் மூட்டை மூட்டையாக விற்பனைக்கு புளி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
இச்சந்தையின் விலை நிர்ணயத்தை வைத்து தான் ராஞ்சி மற்றும் மத்திய பிரதேசம் ஜபல்பூர் புளி சந்தைகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில், புளியைச் சேமிக்க நவீன வசதிகளுடன் குளிர்பதன கிடங்கு அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக புளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமாக புளிய மரங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 30 ஆயிரம் டன்னுக்கு மேல் புளி அறுவடை கிடைக்கின்றது.
புளியின் விலையைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கத்தில் உள்ள நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான சீசன் காலங்களில் புளியை இருப்பு வைக்க அரசு சார்பில் குளிர் பதன கிடங்குகள் இல்லை.
எனவே, கிருஷ்ணகிரியை மையமாக கொண்டு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மெட்ரிக் டன் வரை புளியை இருப்பு வைக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும்.
இவ்வாறு புளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
- ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை சிலர் குட்டைகளில் வளர்த்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
- நிரந்தரமாக தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதி மற்றும் பல்வேறு இடங்களில், மத்திய மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை சிலர் குட்டைகளில் வளர்த்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த வகையான மீன்களால் தோல் வியாதி, ஒவ்வாமை மற்றும் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பு மற்றும் ஒசூர் மீன் மார்க்கெட்டில் இதன் விற்பனையையும் முற்றிலுமாக மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது சம்பந்தமாக, புகார் செய்தால் ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் அடிக்கடி பெயரளவிற்கு சோதனை நடத்துதோடு சரி, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தீவிரமாக கண்காணித்து ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு மற்றும் விற்பனையை நிரந்தரமாக தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிவகாசியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்.
- ஓசூர் புதிய டி.எஸ்.பி.யாக பாபு பிரசாந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் புதிய டி.எஸ்.பி.யாக பாபு பிரசாந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல்லை சேர்ந்த இவர் இதற்கு முன்பு சிவகாசியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்.
பாபு பிரசாந்துக்கு, ஓசூர் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தன்னை 6383291232 என்ற எண்ணில் பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்கள் தெரிவிக்கலாம் என்றும் பாபு பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.






