என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணமாக கிடந்த வாலிபர்"

    • உடலிலும், முகத்திலும் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவரது உடல் கிடந்தது.
    • கொன்று உடலை இங்கு வீசியுள்ளனரா?என்று விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டேனிஷ் நகர் பகுதியில் இருந்த ஒரு தோப்பில் உடலிலும், முகத்திலும் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவரது உடல் கிடந்தது.

    இது குறித்து மூக்கண்ட பள்ளி கிராம நிர்வாக அதிகாரி விவேக் ஷர்மா என்பவர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிணமாக கிடந்தவர் யார் என்று விசாரணை நடத்தினர்.

    அதில் இறந்து கிடந்தவர் பெங்களூரு தேசிங்கு நகரை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் எவ்வாறு உயிரிழந்தார்? இந்த பகுதிக்கு வந்தது ஏன்? யாராவது அவரை அடித்து கொன்று உடலை இங்கு வீசியுள்ளனரா?என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிபாளையம் ரெயில் தண்டவாளம் பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    உளுந்தூர்பேட்டை அருகே அழுகிய நிலையில் பிணமாக கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது. போலீசார் வாலிபரின் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    சென்னை வேளச் சேரியை சேர்ந்தவர் சிவா (வயது 33). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார். ஆனால் அவர் வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு செல்லவில்லை.

    இதைத்தொடர்ந்து சிவாவின் தாயார் விஜயலட்சுமி அவரது செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து சிவாவின் நண்பர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்ததாக தெரிவித்தனர்.

    ஆனால் சிவா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவரது தாய் விஜயலட்சுமி அவர்களிடம் கூறினார். இதைத் தொடர்ந்து சிவா காணாமல் போனது தொடர்பாக கோவை பீளமேடு போலீ சில் புகார் செய்யப்பட்டது. சிவாவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமத்தின் ஏரிக்கரை அருகே உள்ள விவசாய நிலத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அழுகியநிலையில் கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் காணாமல் போனவர்கள் குறித்து பதிவாகி இருந்த வழக்குகளை வைத்து போலீசார் விசாரித்தனர்.

    அதில் செங்குறிச்சி ஏரிக்கரை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இறந்து கிடந்த வாலிபர் சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவாவாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவாவின் தாயார் விஜயலட்சுமியை போலீசார் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்தனர். அவரிடம் இறந்து கிடந்த வாலிபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை காண்பித்தனர். அதைப்பார்த்த விஜயலட்சுமி தனது மகன் சிவாவின் பொருட்கள்தான் என உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து அழுகியநிலையில் பிணமாக கிடந்தது சிவாதான் என்பது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து கோவை பகுதியில் சிவாவுடன் வேலைபார்த்த அவரது நண்பர்களையும் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சிவா எப்படி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சிக்கு எதற்காக வந்தார். சிவாவை யாரேனும் அடித்துகொலை செய்து பிணத்தை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவாவின் சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

    ×