என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனையை தடை செய்ய கோரிக்கை
- ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை சிலர் குட்டைகளில் வளர்த்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
- நிரந்தரமாக தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதி மற்றும் பல்வேறு இடங்களில், மத்திய மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை சிலர் குட்டைகளில் வளர்த்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த வகையான மீன்களால் தோல் வியாதி, ஒவ்வாமை மற்றும் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பு மற்றும் ஒசூர் மீன் மார்க்கெட்டில் இதன் விற்பனையையும் முற்றிலுமாக மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது சம்பந்தமாக, புகார் செய்தால் ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் அடிக்கடி பெயரளவிற்கு சோதனை நடத்துதோடு சரி, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தீவிரமாக கண்காணித்து ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு மற்றும் விற்பனையை நிரந்தரமாக தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






