என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மகளிர் குழு பெண்களிடம் ரூ.16 லட்சம் ஏமாற்றிய பெண் அதிகாரி
  X

  மகளிர் குழு பெண்களிடம் ரூ.16 லட்சம் ஏமாற்றிய பெண் அதிகாரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகளிர் சுய உதவி குழு ஒன்றை தொடங்கி அதன் தலைவியாக இருந்து வருகிறார்.
  • ரூ.16 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது தெரிய வந்தது.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள புனுக ன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 28). இவர் தனது கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு ஒன்றை தொடங்கி அதன் தலைவியாக இருந்து வருகிறார்.

  இவரது குழுவில் 35 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழு மூலம் பாண்டியன் கிராம வங்கியில் கடன் வாங்கியுள்ளனர். அந்த கடன் தொகையை மாதாமாதம் முறையாக செலுத்தி வந்துள்ளனர்.

  இந்நிலையில் வங்கியில் இருந்து கடனுக்கான தவணை தொகை வந்து சேரவில்லை என்று மஞ்சுளாவுக்கு தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து விசாரித்துள்ளார்.

  அப்போது மகளிர் குழு கடன்களுக்கான அரசு துறையில் பணிபுரியும் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த நேத்ரா (எ) கில்பட்டா நேத்ரா (30) என்பவர் மகளிர் குழுவினர் செலுத்திய ரூ.16 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது தெரிய வந்தது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா ஹட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணி நடத்தினர். இதில் நேத்ரா மீதான புகார் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் அதிகாரி நடந்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×