என் மலர்
கிருஷ்ணகிரி
- அவதூறு வீடியோக்களை யாரும் பரப்ப கூடாது.
- சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்றும் வீடியோக்கள் அவதூறாக பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் இந்தியில், தனது சமூக வலைதள பக்கமாக டிவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டார்.
அதில் அவர் கூறியதாவது:-
நான் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாக்கூர் பேசுகிறேன். எங்கள் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மாவட்டத்தில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் எப்போதோ, வேறு எந்த மாநிலத்திலோ நடந்த வீடியோக்களை போட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை போன்று அவதூறு பரப்பி வருகிறார்கள்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் நன்றாக உள்ளார்கள். அவதூறு வீடியோக்களை யாரும் பரப்ப கூடாது. அவ்வாறு பரப்புபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிவிட்டர் பக்கத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல ஒரு கருத்தை பரப்பியதாக சுக்லா என்பவர் பரப்பி உள்ளார். அவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
- தீ விபத்தால் வீட்டில் இருந்த டிவி, இருசக்கர வாகனம், 33 ஆயிரம் பணம் மற்றும் ரேசன்கார்டு, ஆதார் கார்டு என முக்கிய ஆவணங்கள் எரிந்தன.
- இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்திய போது மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பாலேதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளியான இவர் தனது தந்தை மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார்.
நேற்று ஊத்தங்கரை அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பிரகாஷ் குடும்பத்துடன் சென்றார். வீட்டில் தந்தை மட்டும் இருந்த வந்தார்.
இரவு திடீரென வீட்டில் இருந்து புகைவந்தது. இதனை பார்த்த அவர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். பின்னர் குபுகுபுவென பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்த அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக எரிந்தது.
இது குறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தால் வீட்டில் இருந்த டிவி, இருசக்கர வாகனம், 33 ஆயிரம் பணம் மற்றும் ரேசன்கார்டு, ஆதார் கார்டு என முக்கிய ஆவணங்கள் எரிந்தன.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்திய போது மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
- விளைநில பகுதிகளில் 6-வது சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- 61-வது நாளாக போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்க விட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளைநில பகுதிகளில் 6-வது சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் விவசாயிகள், கட்சியினர் பல்வேறு ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
நேற்று நடந்த 61-வது நாளாக போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்க விட்டனர்.
இந்த நிலையில் உத்தனப்பள்ளி பகுதியில் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவிய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜாக்டோ- ஜியோ சார்பில், வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது.
- பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ- ஜியோ சார்பில், வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாதப்பன், தங்கதுரை, மாரப்பன், பாஸ்கரன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தொடக்க உரையாற்றினார். ஜாக்டோ- ஜியோ நிதி காப்பாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார்.
இப்போராட்டத்தில், எதிர்கால இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பறிக்கின்ற 115, 139, 152 உள்ளிட்ட அரசு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.எஸ் .திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.
தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். 7&வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 400&க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- வாய் தகராறு ஏற்பட்டதில் கூலி தொழிலாளியை மூவரும் கைகளால் தாக்கினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ன பீரான், ரகுபதி ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம். செம்படம் புத்தூர் அருகே உள்ள மூங்கில் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவம் (56). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது பெள்ளம் பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (32), சின்ன பீரான் (23), ரகுபதி (25) ஆகிய மூவரும் வயலில் சென்றனர்.
அப்போது வாய் தகராறு ஏற்பட்டதில் கூலி தொழிலாளியை மூவரும் கைகளால் தாக்கியதில் காயம் அடைந்த சிவன் சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணனின் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ன பீரான், ரகுபதி ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- வேன் எதிர்பாராதவிதமாக சந்தோஷ் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே ஒப்பந்தவாடி அடுத்துள்ள புனந்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் நேற்று வாணியம்பாடி பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக சந்தோஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த 2 பேர் உருட்டு கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே எம்.சி.பள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் நேற்று மகாராஜாகடை அருகே சென்றுள்ளார்.
அப்போது அங்கு மதுவாங்க வந்த பொன்னேரி மாடம் அருகேயுள்ள மாரிகவுண்டன் சவுளூர் பகுதியை சேர்ந்த மதன்குமார், நவீன் ஆகியோர் முருகனிடம் தகராறு செய்தனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த 2 பேர் உருட்டு கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீன்களை பறிமுதல் செய்து, வியாபாரி முருகேசனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
- ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி கொட்டி பிளீச்சிங் பவுடரை போட்டு புதைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய வசந்த் நகர் குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்து இரவு நேரங்களில் மொத்த விற்பனை செய்து வருவதாக மாவட்ட மீன் வளத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் நேற்று மாவட்ட மீன்வளத்துறை சார் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் முருகேசன் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, அவர் வீட்டில், சட்டத்திற்கு புறம்பாக தொட்டி அமைத்து அதில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து இரவு நேரத்தில் மொத்த விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது
பின்னர், தொட்டியில் இருந்த சுமார் 200 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்து, வியாபாரி முருகேசனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர் பறிமுதல் செய்த கெளுத்தி மீன்களை பஸ்தி பகுதியில் உள்ள ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி கொட்டி பிளீச்சிங் பவுடரை போட்டு புதைத்தனர்.
இந்த பணியில் மேற்பார்வையாளர்கள் ராமன், மற்றும் மீன் வள உதவியாளர்கள் மஞ்சு மற்றும் ராஜேஷ் மற்றும் வாகன ஓட்டுனர் சுகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது.
- ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுதெரு பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தை என 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் மனமுடைந்த அம்மு தனது மூத்த 3 குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின் தனது கடைசி இரண்டு குழந்தைகளான பெண் குழந்தை சுபிக்ஷா (7), ஆண் குழந்தை பீஷ்மர் (5), ஆகியோருடன் ஊத்தங்கரை அருகேயுள்ள ரெயில் தண்டவாளம் அருகில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் செல்லக்கூடிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து அம்மு தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே துறையினர் மற்றும் கல்லாவி காவல் துறையினர் சம்பவ இடத்தில் விரைந்து வந்தனர். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பீஷ்மர் மற்றும் தாய் அம்மு ஆகியோர் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுத்தனர். மேலும் மகள் சுபிக்ஷாவின் உடல் கிடைக்காததால் தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த பெண் குழந்தையின் உடல் தேடும் பணியில் கல்லாவி போலீசார் மற்றும் இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் சபரி தலைமை தாங்கினார்.
- மத்திய அரசை கண்டித்து, கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, ஓகுரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் சபரி தலைமை தாங்கினார். தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.
மேலும் இதில் மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் விசுவநாதன், காவேரி, மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து, கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் ஆர்ப்பாட்.டத்தின்போது, சாலையின் நடுவே சிலிண்டரை வைத்து அதற்கு மாலை அணிவித்தும், சுற்றிலும் விறகை வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். முடிவில், மாவட்ட தலைவர் காதர் பாஷா நன்றி கூறினார்.
- மூட்டையில் 50 கிலோ எடை கொண்ட 5 பைகளில் மொத்தம் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
- அவரிடம் இருந்து 250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மொபட் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் மத்திகிரி - ஆனேக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒருவர் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி சேதனை செய்த போது அவர் வைத்திருந்த மூட்டையில் 50 கிலோ எடை கொண்ட 5 பைகளில் மொத்தம் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அந்த அரிசியை மத்திகிரி, குருப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாங்கி கர்நாடகாவில் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக ஓசூர் மத்திகிரி குருப்பட்டியை சேர்ந்த ஜீலன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மொபட் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
- போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்கவிட்டனர்.
- ஒரு நாள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளைநில பகுதிகளில் 6-வது சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் விவசாயிகள், கட்சியினர் பல்வேறு ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
நேற்று நடந்த 61-வது நாளாக போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்கவிட்டனர்.
இந்த நிலையில் உத்தனப்பள்ளி பகுதியில் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவிய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






