என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிசை வீடு தீ பிடித்து எரிந்து நாசம்
    X

    குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அணைத்த காட்சி.

    குடிசை வீடு தீ பிடித்து எரிந்து நாசம்

    • தீ விபத்தால் வீட்டில் இருந்த டிவி, இருசக்கர வாகனம், 33 ஆயிரம் பணம் மற்றும் ரேசன்கார்டு, ஆதார் கார்டு என முக்கிய ஆவணங்கள் எரிந்தன.
    • இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்திய போது மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பாலேதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளியான இவர் தனது தந்தை மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார்.

    நேற்று ஊத்தங்கரை அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பிரகாஷ் குடும்பத்துடன் சென்றார். வீட்டில் தந்தை மட்டும் இருந்த வந்தார்.

    இரவு திடீரென வீட்டில் இருந்து புகைவந்தது. இதனை பார்த்த அவர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். பின்னர் குபுகுபுவென பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதனை பார்த்த அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக எரிந்தது.

    இது குறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தால் வீட்டில் இருந்த டிவி, இருசக்கர வாகனம், 33 ஆயிரம் பணம் மற்றும் ரேசன்கார்டு, ஆதார் கார்டு என முக்கிய ஆவணங்கள் எரிந்தன.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்திய போது மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    Next Story
    ×