என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஓசூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் சபரி தலைமை தாங்கினார்.
    • மத்திய அரசை கண்டித்து, கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, ஓகுரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் சபரி தலைமை தாங்கினார். தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.

    மேலும் இதில் மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் விசுவநாதன், காவேரி, மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து, கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் ஆர்ப்பாட்.டத்தின்போது, சாலையின் நடுவே சிலிண்டரை வைத்து அதற்கு மாலை அணிவித்தும், சுற்றிலும் விறகை வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். முடிவில், மாவட்ட தலைவர் காதர் பாஷா நன்றி கூறினார்.

    Next Story
    ×