search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் வளர்த்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்
    X

    ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆப்பரிக்கன் கெளுத்து மீன்களை புதைத்தனர்

    வீட்டில் வளர்த்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்

    • மீன்களை பறிமுதல் செய்து, வியாபாரி முருகேசனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
    • ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி கொட்டி பிளீச்சிங் பவுடரை போட்டு புதைத்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய வசந்த் நகர் குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்து இரவு நேரங்களில் மொத்த விற்பனை செய்து வருவதாக மாவட்ட மீன் வளத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் நேற்று மாவட்ட மீன்வளத்துறை சார் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் முருகேசன் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, அவர் வீட்டில், சட்டத்திற்கு புறம்பாக தொட்டி அமைத்து அதில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து இரவு நேரத்தில் மொத்த விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது

    பின்னர், தொட்டியில் இருந்த சுமார் 200 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்து, வியாபாரி முருகேசனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்த கெளுத்தி மீன்களை பஸ்தி பகுதியில் உள்ள ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி கொட்டி பிளீச்சிங் பவுடரை போட்டு புதைத்தனர்.

    இந்த பணியில் மேற்பார்வையாளர்கள் ராமன், மற்றும் மீன் வள உதவியாளர்கள் மஞ்சு மற்றும் ராஜேஷ் மற்றும் வாகன ஓட்டுனர் சுகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

    Next Story
    ×