என் மலர்
கிருஷ்ணகிரி
- மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 211 மனுக்களை வழங்கினார்கள்.
- மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 211 மனுக்களை வழங்கினார்கள்.
அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது
- இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்குகிறார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்குகிறார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம் என்று கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஓசூர் சாலையில் சைக்கிளில் சென்ற சித்தார்த் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்
- சிகிச்சை பலனின்றி சித்தார்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பூமிகா கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். இவரது மகன் சித்தார்த் (வயது11). இவர் ஓசூரில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஓசூர் சாலையில் சைக்கிளில் சென்ற சித்தார்த் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சித்தார்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் உள்ள சாலைகள் பழுதடைந்து உள்ளது.
- உடனடியாக அப்பகுதி சாலைகளை தனது சொந்த செலவில் சீரமைப்பதை பார்வையிட்டார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் உள்ள சாலைகள் பழுதடைந்து உள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் எனவே அப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவேரிபட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் குறைகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக அப்பகுதி சாலைகளை தனது சொந்த செலவில் சீரமைப்பதை பார்வையிட்டார்.
அப்பொழுது உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மாலினி மாதையன், கிளை செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் நகர துணைச் செயலாளர் முனிராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஹரிநாராயணன், அசோகன், மற்றும் அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தரமான பூக்களை சாகுபடி செய்ய முடியதாக நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- கடும் வெயிலால் பூ மற்றும் செடிகள் காய்ந்து வருகின்றன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் கடந்த சில தினங்க ளாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படு கிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் வறண்டன.
தேன்கனிக்கோட்டை, பாகலூர், ஓசூர், கெலமங்கலம், சூளகிரி சுற்று வட்டாரத்தில் 2500 ஏக்கரில் பசுமை குடில் அமைத்து ரோஜா, ஜெர்புரா, கிரசாந்திமம், கார்னேசன் போன்ற கொய்மலர் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் வெளிநாடுகளுக்கு ஓசூரில் இருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மற்ற நாட்களில், உள்ளூர் சந்தை மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஓசூரில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
குடில்களில் 29 டிகிரி வரை வெப்ப நிலை இருக்க வேண்டும். தற்போது வெயில் ெகாளுத்துவதால் 38 டிகிரி வரை வெப்பம் உயர்ந்துள்ளது. இதனால் ரோஜா, கிரசாந்திமம், ஜெர்புரா, கார்னேசன் உள்ளிட்ட கொய் மலர்கள் செடிகளிலேயே காய்ந்து, கருகி வருகின்றன.
செடிகளை தினமும் காப்பாற்ற, தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மேலும், பூச்சிகளை அழிக்க மாலையில் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனாலும், தரமான பூக்களை சாகுபடி செய்ய முடியதாக நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் வரை ஒரு கட்டு ரோஜா 30-க்கு விலை போனது. தற்போது 80 முதல் 100-க்கு வாங்கப்படுகிறது. கடும் வெயிலால் பூ மற்றும் செடிகள் காய்ந்து வருகின்றன.
செடிகளை காப்பாற்ற போராடி வருகிறோம். கேரளாவுக்கு அனுப்ப பூக்கள் தேவை இருந்தும், தரமான பூக்கள் கிடைக்காமல் போராட வேண்டியுள்ளது என்றார்.
- 15 ஆண்டுகளாக பேளகொண்டபள்ளியில் மருந்தகம் வைத்து போலி வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
- 3 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் பகுதியில், மருத்துவம் படிக்காமல், போலி டாக்டர்கள் வைத்தியம் பார்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பரமசிவன் அறிவுறுத்தலின்படி, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில், மாவட்ட மருந்துக்கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி, வருவாய்த்துறையினர் மற்றும் மத்திகிரி போலீசார், ஓசூர் அருகே பேளகொண்டபள்ளியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மருந்தகம் வைத்து, போலியாக வைத்தியம் செய்து வந்த ஷானிமா (24) என்ற பெணலி டாக்டர் மற்றும் சவுகத் அலி (46) ஆகியோரது மருந்தகங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், ஷானிமா கஜகஸ்தானில் மருத்துவம் படித்துவிட்டு, இந்தியாவில் தகுதித்தேர்வு எழுதாமல் கடந்த 1 ஆண்டுகளாக பேளகொண்ட பள்ளியில் வைத்தியம் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதேபோல், ஓசூர் ெரயில்வே நிலைய பகுதியை சேர்ந்த சவுகத் அலி, பார்மசி படிப்பு படித்து, கடந்த 15 ஆண்டுகளாக பேளகொண்டபள்ளியில் மருந்தகம் வைத்து போலி வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
மேலும், ஓசூர் அருகே கொத்த கொண்டபள்ளியில், சீனிவாஸ் (33) என்பவர் மருந்தகமும், உள்ளே 3 படுக்கை கொண்ட கிளினிக்கையும் வைத்து வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
இதையடுத்து 3 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களின் மருந்தகத்தில் இருந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மருந்தகங்களும் சீல் வைக்கப்பட்டது.
- சிசிடிவி காமிராவில் பதிவான 2 திருடர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
- கைதான அவர்களை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாதிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் வீட்டில் 11 நாட்டுகோழிகளை வளர்ந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் உள்ள 11 நாட்டுகோழிகள் திருடு போனது.
இது குறித்து அவர் பாரூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சிசிடிவி காமிராவில் பதிவான 2 திருடர்களை பிடித்து விசாரணை நடத்திய போது தேவேரஅள்ளி பகுதியை சேர்ந்த பிரதாப்சிங், கிரு ஷ்ணன் (வயது21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.
- உழவர்சந்தை எதிரில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- விழாவிற்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில், உழவர்சந்தை எதிரில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்.மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தண்ணீர் பந்தலை, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, நீர்மோர், தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் இதில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர் ராமு, மாநகராட்சி கவுன்சிலர்கள் மோசின்தாஜ் நிசார் அகமது, மாதேஸ்வரன், சென்னீரப்பா, மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேலுமலை பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்தவித பலனும் அளிக்காததால் விரக்தியில் இருந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உறவினர்கள் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மஸ்தபதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேவ் (வயது22). கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்தவித பலனும் அளிக்காததால் விரக்தியில் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தபசு மரத்தின் கீழ், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைப்பதோடு, நல்ல மழை பெய்து விவசாயமும் செழிக்கும் என்கிற நம்பிக்கையும் கிராம மக்களிடையே உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பழையபேட்டை தர்மராஜா கோயில் தெருவில், 7 கிராமங்களுக்கு சொந்தமான ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் அக்னி வசந்த மகோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த மகோற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மகாபாரத தெருக்கூத்து நாடகங்களும் நடைபெற்று வருகிறது.
இதில் தினமும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், கிருஷ்ணன் பிறப்பு, பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, சுபத்திரா திருமணம் உள்ளிட்ட பல்வேறு இதிjjjjjjjjjjjjjjjjjfffffffffffffffffffff காச மகாபாரத தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த மகாபாரத தெருக்கூத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்சுணன் தபசு நாடகம் நடைபெற்றது. இதில் கவுரவர்களை கூண்டோடு அழிக்க சிவபெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற வேண்டி அர்சுணன் தபசு மரத்தின் கீழ், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைப்பதோடு, நல்ல மழை பெய்து விவசாயமும் செழிக்கும் என்கிற நம்பிக்கையும் கிராம மக்களிடையே உள்ளது. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான கிராம மக்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டதுடன், தபசு மரத்தைச் சுற்றிலும் குப்புற படுத்துக் கொண்டனர். அர்ச்சுணன் வேடம் அணிந்தவர் அவர்களுக்கிடையில் நடந்து சென்று ஆசி வழங்கினார்.
பின்னர் அர்ச்சுணன் ஒவ்வொரு படிக்கும் பாடல் பாடி தபசு மரம் ஏறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணகிரி நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
- நகர தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்ட், 5 ரோடு ரவுண்டானா அண்ணா சிலை, மாவட்ட பதிவாளர் அலுவவகம், ராசி வீதி ஆகிய 4 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவரு மான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணகிரி நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நகர தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்ட், 5 ரோடு ரவுண்டானா அண்ணா சிலை, மாவட்ட பதிவாளர் அலுவவகம், ராசி வீதி ஆகிய 4 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் பரிதாநவாப் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, பொதுமக்கள், நீர்மோர், தர்பூசணி பழம், முலாம் பழம், பழசரசங்கள், வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவடட பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், தி.மு.க. நிர்வாகிகள் அன்பரசன், வக்கீல் மதியழகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது.
- ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, ஈஸ்டர் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளிக்கிழமையை தொடர்ந்து வரும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஸ்டர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், கடந்த 7-ந்தேதியன்று புனித வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 24-ம் தேதி, மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாட்டை தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தொடங்கி வைத்தார்.
அன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை சுற்றிலும், சிறிய சிலுவைப்பாதை ஜெபவழிபாடும், அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பாரம்பரிய பழைய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் முதல் புதிய புனித ஆரோ க்கிய அன்னை ஆலயம் வரை பங்கு தந்தை கிறிஸ்டோபர் தலைமையில் குருத்தோலை பவனியும், தொடர்ந்து 7-ம் தேதி புனித வெள்ளிக்கிழமை அன்று பெரிய சிலுவை ப்பாதை பவனியும் நடைபெற்றது.
இந்த குருத்தோலை மற்றும் பெரிய சிலுவைப்பாதை வழிபாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து நேற்று, ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, ஈஸ்டர் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் தருமபுரி மறை மாவட்ட வட்டார தலைமை குரு பெரியநாயகம் பங்கேற்று ஈஸ்டர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதணை மற்றும் மறையுரை நிகழ்த்தியும் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு நிறைவேற்றினார். இதில் பங்கு தந்தை கிறிஸ்டோபர், ராயப்பர், பங்கு மக்கள் பங்கேற்றனர். அனைவரும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.






