search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர், மத்திகிரியில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
    X

    தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்னை நடைபெற்றது.

    ஓசூர், மத்திகிரியில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    • ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது.
    • ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, ஈஸ்டர் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளிக்கிழமையை தொடர்ந்து வரும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஸ்டர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில், கடந்த 7-ந்தேதியன்று புனித வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து பிப்ரவரி 24-ம் தேதி, மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாட்டை தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தொடங்கி வைத்தார்.

    அன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை சுற்றிலும், சிறிய சிலுவைப்பாதை ஜெபவழிபாடும், அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பாரம்பரிய பழைய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் முதல் புதிய புனித ஆரோ க்கிய அன்னை ஆலயம் வரை பங்கு தந்தை கிறிஸ்டோபர் தலைமையில் குருத்தோலை பவனியும், தொடர்ந்து 7-ம் தேதி புனித வெள்ளிக்கிழமை அன்று பெரிய சிலுவை ப்பாதை பவனியும் நடைபெற்றது.

    இந்த குருத்தோலை மற்றும் பெரிய சிலுவைப்பாதை வழிபாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து நேற்று, ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, ஈஸ்டர் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் தருமபுரி மறை மாவட்ட வட்டார தலைமை குரு பெரியநாயகம் பங்கேற்று ஈஸ்டர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதணை மற்றும் மறையுரை நிகழ்த்தியும் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு நிறைவேற்றினார். இதில் பங்கு தந்தை கிறிஸ்டோபர், ராயப்பர், பங்கு மக்கள் பங்கேற்றனர். அனைவரும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    Next Story
    ×