என் மலர்
நீங்கள் தேடியது "பூக்கள் செடியிலேயே கருகுகிறது"
- தரமான பூக்களை சாகுபடி செய்ய முடியதாக நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- கடும் வெயிலால் பூ மற்றும் செடிகள் காய்ந்து வருகின்றன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் கடந்த சில தினங்க ளாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படு கிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் வறண்டன.
தேன்கனிக்கோட்டை, பாகலூர், ஓசூர், கெலமங்கலம், சூளகிரி சுற்று வட்டாரத்தில் 2500 ஏக்கரில் பசுமை குடில் அமைத்து ரோஜா, ஜெர்புரா, கிரசாந்திமம், கார்னேசன் போன்ற கொய்மலர் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் வெளிநாடுகளுக்கு ஓசூரில் இருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மற்ற நாட்களில், உள்ளூர் சந்தை மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஓசூரில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
குடில்களில் 29 டிகிரி வரை வெப்ப நிலை இருக்க வேண்டும். தற்போது வெயில் ெகாளுத்துவதால் 38 டிகிரி வரை வெப்பம் உயர்ந்துள்ளது. இதனால் ரோஜா, கிரசாந்திமம், ஜெர்புரா, கார்னேசன் உள்ளிட்ட கொய் மலர்கள் செடிகளிலேயே காய்ந்து, கருகி வருகின்றன.
செடிகளை தினமும் காப்பாற்ற, தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மேலும், பூச்சிகளை அழிக்க மாலையில் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனாலும், தரமான பூக்களை சாகுபடி செய்ய முடியதாக நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் வரை ஒரு கட்டு ரோஜா 30-க்கு விலை போனது. தற்போது 80 முதல் 100-க்கு வாங்கப்படுகிறது. கடும் வெயிலால் பூ மற்றும் செடிகள் காய்ந்து வருகின்றன.
செடிகளை காப்பாற்ற போராடி வருகிறோம். கேரளாவுக்கு அனுப்ப பூக்கள் தேவை இருந்தும், தரமான பூக்கள் கிடைக்காமல் போராட வேண்டியுள்ளது என்றார்.






