என் மலர்
கிருஷ்ணகிரி
- நீண்ட நாளாக வயிற்றுவலி பிரச்சனை இருந்துள்ளது.
- மனவேதனை அடைந்த குமரேசன் 14-ம் தேதி விஷம் குடித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் மோட்டுகொள்ளை பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி குமரேசன்( 41),
இவருக்கு நீண்ட நாளாக வயிற்றுவலி பிரச்சனை இருந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை .இதனால் மனவேதனை அடைந்த குமரேசன் 14-ம் தேதி விஷம் குடித்துள்ளார்.
இதனைப் பார்த்த அவரது மனைவி கலைவாணி மற்றும் உறவினர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் குமரேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காக்கனுர் செக்போஸ்ட் பகுதியில் பாகலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- எம்சாண்ட் தலா 3 யூனிட்டும், 5 யூனிட் கற்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி மற்றும் பாகலூர் போலீசார் அந்திவாடி மற்றும் காக்கனுர் செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி எம் சாண்ட் இரண்டு டிப்பர் லாரிகளில் தலா 3 யூனிட்டும்,மற்றொரு லாரியில் 5 யூனிட் கற்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரிகளை பறிமுதல் செய்தனர் .
மேலும் லாரி டிரைவர்கள் போலீசாரை பார்த்ததும் லாரி நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- குடிப்பழக்கத்தினால் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
- மனவிரக்தியில் முனிராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒன்னால்வாடி பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (வயது 54) .விவசாயி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் அதிக அளவில் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 7-ம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மனவேதனையில் முனிராஜ் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நீண்ட நாட்களாக சீறுநீரகத்தில் கல் பிரச்சனையால் அவதிபட்டு வந்துள்ளார்
- மன விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,பாரூர் அருகே உள்ள அனுமான் கோவில் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது42). கட்டிட தொழிலாளி.
இவருக்கு நீண்ட நாட்களாக சீறுநீரகத்தில் கல் பிரச்சனையால் அவதிபட்டு வந்துள்ளார்.இதனால் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை.
இதனால் மன விரக்தியில் இருந்த குமரேசன் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குமரேசன் உடலை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவருக்கு கலைவானி (35) என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளது குறிப்பிடதக்கது.
இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஐயப்பன் கோவிலில், சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அனைத்து செல்வ
- பூஜை அறையில் காய், கனிகள் ,தானியங்கள், புத்தாடைகள், பூக்களை கொண்டு அலங்கரித்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி,
மலையாள வருட பிறப்பான விசு பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள், சனிக்கிழமை நடைபெற்றன.
மலையாள வருடப் பிறப்பை விசு பண்டியாக உலகம் எங்கும் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோவிலில், சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி, சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில் வாழும் மலையாளிகள், தங்கள் வீடுகளில், பூஜை அறையில் காய், கனிகள் ,தானியங்கள், புத்தாடைகள், கொற்றைப் பூக்களை கொண்டு அலங்கரித்து சுவாமியை வழிபட்டனர். சிறுவர்கள், பெரியவர்களை வணங்கி வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றனர்.
- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- வாகனம் மோதி படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சின்னமுதலைபட்டி பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 55). கூலித் தொழிலாளி.
இவர் நேற்று பெங்களூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
- 18-ந் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவ லகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கிரிக்கெட் சஙகம அனைத்து மாவட்டங்களிலும் 14 வயது முதல் 24 வயது வரையிலான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த வீரர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மாணவர்களுக்கான பள்ளி பொதுத் தேர்வுகளின் காரணமாக இந்த முகாம் தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி, தருமபுரி கமலம் இண்டர்நேஷ்னல் பள்ளியில் உள்ள தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையத்தில் வருகிற 22-ந் தேதி சுழற்பந்து வீச்சாளர்களுக்கான தேர்வு முகாமும் 23-ம் தேதி வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தேர்வு முகாமும் காலை 8 மணியளவில் நடைபெறும். இதில் பங்கு பெறுதவற்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றவர்கள் பூர்த்தி செய்து, ஆதார் கார்டு நகலினை இணைத்து வருகிற 18-ந் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகம், 33-கே.தியேட்டர் ரோடு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், புதியதாக பங்கு பெற விரும்புபவர்கள் நேரில் ஆதார் கார்டு, பிறப்பு சான்றுடன் மேற்காணும் விலாசத்திற்கு சென்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 18-ந் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
- சுபாஷ்-அனுசுயா திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு வந்ததால் அவர்கள் கடந்த 27-ந்தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50), விவசாயி. இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், சுபாஷ் (26) என்ற மகனும் உள்ளனர்.
சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுபாஷின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சுபாஷ்-அனுசுயா திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு வந்ததால் அவர்கள் கடந்த 27-ந்தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சுபாஷ் தனது மனைவி அனுசுயாவை அழைத்து கொண்டு நேற்று சொந்த ஊரான அருணபதிக்கு வந்தார். அப்போது புதுமண தம்பதியான சுபாஷ்-அனுசுயா இருவரும் தண்டபாணி வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.
தனது எதிர்ப்பை மீறி தனது மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனம் தாங்காமல் விரக்தியடைந்த தண்டபாணி 2 பேரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து வைத்தனர்.
இருவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது சுபாஷின் பாட்டி கண்ணம்மா அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்தார்.
தன்னுடைய பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டு வந்த மகனுக்கு தனது தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்த செய்தி தண்டபாணிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அப்போது கோபத்தில் இருந்த தண்டபாணி தனது தாய் கண்ணம்மா வீட்டிற்கு சென்று என் பேச்சை மீறி திருமணம் செய்துகொண்ட அவர்களை வெளியே அனுப்பாமல் என்னை மேலும் அவமானப்படுத்தும் விதமாக வீட்டிற்குள் எப்படி அனுமதித்தாய்? என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷையும், கண்ணம்மாவையும் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த மருமகள் அனுசுயாவையும் அவர் சரமாரியாக வெட்டினார். இதனால் 3 பேரும் வலியால் பயங்கரமாக அலறினர்.
சிறிது நேரத்தில் சுபாஷூம், கண்ணம்மாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருமகள் அனுசுயா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அனுசுயாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா எட்வின் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும் ஆணவ கொலை செய்த தண்டபாணியை விரைவில் பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
தலைமறைவாக உள்ள தண்டபாணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த மகனையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாட்டியையும் வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காயமடைந்த 4 பேரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- புகாரன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தூயமணி, சுப்ரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த குள்ளனூரைச் சேர்ந்தவர் தூயமணி (வயது 35). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த சின்னபையன் என்கிற சுப்ரமணி (45).
இருவரும் நேற்று இரவு போச்சம்பள்ளயில் மது வாங்கி குடித்துள்ளனர். பின்னர் அவர்கள் புதுமோட்டூர் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்களை வாங்கி சென்றனர். அங்கு போதையில் இருந்த 2 பேரும் மளிகை கடை உரிமையாளர் முருகனிடம் (53) வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து முருகனை தாக்கி கடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு முருகனின் மகன் குறளரசன், உறவினர் மாணிக்கம் (45), நவீன்குமார் ஆகியோர் 3பேரும் தடுக்க வந்தனர். அவர்களையும் கடித்தனர். இதில் காயமடைந்த 4 பேரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முருகன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தூயமணி, சுப்ரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். குடிபோதையில் 2 பேரும் 4 பேரை கடித்து காயம் ஏற்படுத்திய சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
- சிறப்பு கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி, கிராமங்களுக்கு சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய், பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கபட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு துணை தலைவர் மாதேஷ்வரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாகேஷ், ரத்னம்மா லஷ்மம்மா , பாக்கியவதி, புஷ்பா, தமிழ்செல்வி மஞ்சுளா, சங்கீதா, லதா, கான்ஞ்சனா, வனீதா, ஹரிஷ், முனிராஜ், வரதன், சேட்டு, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி, கிராமங்களுக்கு சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய், பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கபட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோபாலகிருஷ்னண், விமல் ரவிகுமார் மற்றும் உதவிபொரியாளர்கள் சுமதி,.ஷியாமளா,வெங்கடேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் (சத்துணவு) ஆகியோர் பேசினர்.
ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்து கொண்டனர். இறுதியில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் முகிலன் நன்றியுறை வழங்கினார்.
- தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த அலுவலர்கள் பணியாளர்கள் 33பேருக்கும் வருடந்தோறும் ஏப்ரல் 14-ந் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
- கிருஷ்ணகிரியில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்புத் துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு துறையில் தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த அலுவலர்கள் பணியாளர்கள் 33பேருக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்விற்கு கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர் எம்.மகாலிங்க மூர்த்தி தலைமை தாங்கினார் . உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர் வெங்கடாஜலம், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
- கிருஷ்ணகிரியில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
- தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி வழிப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார். பகல் 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. இதில், ஏராளமான பெண் பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.
இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தட்சிண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






