என் மலர்
கிருஷ்ணகிரி
- மத்தூர் ஒன்றியம் பேருந்து நிலையத்தில் அதிமுக வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் தண்ணீர், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
- விழாவிற்கு மத்தூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் பேருந்து நிலையத்தில் அதிமுக வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் தண்ணீர், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மத்தூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வும், அதிமுக கழக துணை பொது செயலாருமான கே.பி.முனுசாமி தண்ணீர், நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், பழரசங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி ஒன்றிய இணைச் செயலாளரும் களர்பதி ஊராட்சி மன்ற தலைவருமான ஜெயந்தி புகழேந்தி, சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜகான், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, சிவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மனோகரன், கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்க்கொடி சுந்தரவடிவேல், ஆனந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பவித்ரா சிலம்பரசன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் மணிவண்ணன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கீதா சுந்தரேசன், சின்னபாப்பா நடராஜன், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் எம்.ஆர்.முனுசாமி, இளைஞர் அணி கே முருகன் , இளம் பாசறை பாண்டியன், தகவல் துட்ப பிரிவு பூபதி , சிவராஜ் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க கட்சி கொடியேற்று விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
- தண்ணீர் பந்தலையும் அவர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பொதுமக்களுக்கு குடிநீர், இளநீர், நுங்கு, பானகம், தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட ரெயில் நிலையம் அருகே, அ.தி.மு.க கட்சி கொடியேற்று விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு, 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் லட்சுமி ஹேமகுமார் தலைமை தாங்கினார். மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டு 62 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலையும் அவர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பொதுமக்களுக்கு குடிநீர், இளநீர், நுங்கு, பானகம், தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் இதில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு, மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
- 10 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
- கோவிலை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை கடப்பாரையால் இடித்து தள்ளினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கோவில் எதிரே உள்ள 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அந்த வழியை அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் 10 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் கோவில் முன்பு தனி நபர் சுற்றுச்சுவர் கட்டினார். இதனால் ஆவேசமடைந்த கிராம பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவில் முன்பு திரண்டனர். பின்னர் கோவிலை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை கடப்பாரையால் இடித்து தள்ளினர். இந்த சம்பவம், சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவத்தன்று தமயந்தியின் அப்பா மற்றும் அவருடைய காதலனிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
- மன விரக்தியில் இருந்த தமயந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமயந்தி (வயது 19). இவர் கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மாணவனுடன் இரண்டு வருடமாக காதல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தமயந்தியின் அப்பா மற்றும் அவருடைய காதலனிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது . இதனால் மன விரக்தியில் இருந்த தமயந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீட்டுக்கு திரும்பிய முருகன் தனது குழந்தைகள் ஏரி அருகே விளையாட சென்றதை அறிந்து பதற்றத்துடன் அங்கு சென்றார்.
- ஏரியில் இறங்கி 2 பேரையும் தேடினார். இதையடுத்து இறந்த மகள், மகனின் உடல்களை தோளில் சுமந்து கரைக்கு கொண்டு வந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி (35). இவர்களுக்கு அர்ச்சனா (14), புவனா (10) என்ற 2 மகள்களும், வினோத் (8) என்ற மகனும் உண்டு.
இதில் புவனா மத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பும், வினோத் அதே பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை என்பதால் புவனா, வினோத் ஆகியோர் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள மாதவபுரம் ஏரிக்கு குளிக்க சென்றனர்.
அப்போது புவனா ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதைக் கண்ட வினோத் அக்காள் புவனாவை காப்பாற்றுவதற்காக தானும் ஆழமான பகுதிக்கு சென்றார். இதனால் வினோத்தும் தண்ணீரில் மூழ்கினான். இதில் அக்காள், தம்பி இருவரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
இதற்கிடையே வீட்டுக்கு திரும்பிய முருகன் தனது குழந்தைகள் ஏரி அருகே விளையாட சென்றதை அறிந்து பதற்றத்துடன் அங்கு சென்றார்.
அப்போது அங்கு ஏரியில் இறங்கி 2 பேரையும் தேடினார். இதையடுத்து இறந்த மகள், மகனின் உடல்களை தோளில் சுமந்து கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் இருவரின் உடல்களை பார்த்து அவரும், உறவினர்களும் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மத்தூர் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகளை ஏரி, குளங்களில் குளிக்க பெற்றோர்கள் அனுமதிக்ககூடாது. இதனால் பலர் நீரில் முழ்கி உயிரிழக்கிறார்கள். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
- ரத்தக்கரை ஆடையுடன் தண்டபாணி ஊத்தங்கரை அருகேயுள்ள அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளார்.
- அங்கு துக்கம் தாங்காமல் தண்ட பாணி தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கதவணி ஊராட்சி காரப்பட்டு அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது50). தையல் தொழி லாளி. இவரது மனைவி சுந்தரி.
இவர்களுக்கு பவித்ரா, சுஜி என்ற 2 மகள்களும், சுபாஷ் (25) என்ற மகனும் உள்ளனர். இதில் சுபாஷ் தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சுபாஷ்க்கு ம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதனால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் சுபாஷ், அனுசுயாவை திரும ணம் செய்து கொண்டார். பின்னர் மனைவியை தனி யாக தங்க வைத்து விட்டு சுபாஷ் தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் அதிகாலை தண்டபாணி காதல் திருமணம் செய்த தனது மகன் சுபாசை அரி வாளால் மகன் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதனை தடுக்க வந்த கண்ணம்மாளுக்கும் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது. இதில் சுபாஷ், அவருடைய பாட்டி கண்ணம்மாள் ஆகியோர் இறந்தனர்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத தண்டபாணி அரிவாளால் மருமகள் அனு சுயாவையும் வெட்டினார்.
இதில் அனுசுயா சாலையில் ரத்த வெள்ள த்தில் சரிந்து விழுந்தார். 3 பேரையும் வெட்டிய தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த சுபாஷ், கண்ணம்மா ள் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை க்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த அனுசுயாவை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக இன்றுகாலை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்ைச அளித்து வருகின்றனர்.
இதையடுத்து கொலை யாளியை பிடிக்க உடனடி யாக தனிப்படை அமைக்க ப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
அப்போது ரத்தக்கரை ஆடையுடன் தண்டபாணி ஊத்தங்கரை அருகேயுள்ள அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளார்.
அங்கு துக்கம் தாங்காமல் தண்ட பாணி தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஊத்தங்கரை நோக்கி சாலையில் நடந்து வந்து ெகாண்டிருந்தார்.
அப்போது தனிப்படை போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய குற்றவாளி தண்டபாணியை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி தண்டபாணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் குணமடைந்த பிறகு தண்ட பாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அனுசுயாவின் தாய் வனிதா உருக்கமான பேட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் நடந்த ஆணவ கொலையில் வெட்டுப்பட்டு காயம் அடைந்த அனுசுயா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அனுசுயாவின் தாய் அனிதா உருக்கமான பேட்டி அளித்தார். அப்போது அவர் போது கூறியதாவது:-
என் மகள் அனுசுயா காதல் திருமணம் செய்து கொண்டதாக அவர் கணவர் சுபாஷ் உடன் இருவரும் எங்கள் வீட்டிற்கு வந்த போது தான் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியும்.
அதனால் இருவருக்கும் மீண்டும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தோம். பின்னர் எங்களிடமே இருவரையும் இருக்க சொன்னோம். ஆனால் சுபாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாக தெரிவித்தார்.
சுபாஷின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. அதனால் உங்களை நம்பி என் பெண்ணை அனுப்ப முடியாது. நீங்கள் மட்டும் தனியாக சென்று வாருங்கள் என்று கூறினோம். அதற்கு சுபாஷ் உங்கள் பொண்ணை திருமணம் செய்து விட்டு செல்வதற்காகவா வந்தோம்.
என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா, நம்பிக்கை தான் வாழ்க்கை என்று சொல்லி கிருஷ்ணகிரிக்கு அழைத்து செல்வதாக கூறினார். உறவினர்கள் அனைவரும் சேர்ந்து தான் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தோம். கிருஷ்ணகிரி அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளதாகவும் தினமும் அனுசுயாவின் அம்மா அனிதாவிற்கு போன் செய்து நலமுடன் இருப்பதாக 20 நாட்களாக தெரிவித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் நான் போன் செய்து சுபாஷை கேட்டபோது என் தந்தை எங்கள் இருவரையும் போன் செய்து வர சொன்னார்.
அதனால் வந்தோம். எங்கள் இருவரையும் என் அப்பா மனசார ஏற்றுக் கொண்டார். இப்போது தான் சாப்பிட்டு விட்டு அமர்ந்துள்ளோம் என தெரிவித்தார்.
அதனால் அவர் கூறியதை நம்பி நாங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மாலை எங்கள் வீட்டிற்கு செல்கிறோம் வேலை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
சுபாஷின் தந்தை தண்டபாணி இன்று ஒரு நாள் தங்கி விட்டு நாளை காலை சென்று விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதனை நம்பி இருவரும் படுத்து தூங்கும் பொழுது தண்டபாணி என் மகள் அனுசுயாவை முதலில் வெட்டி உள்ளார். அனுசுயாவின் அலறல் சத்தம் கேட்ட கணவர் சுபாஷ் தந்தையை தடுக்கச் சென்றபோது சுபாஷின் கழுத்தில் தண்டபாணி வெட்டி உள்ளார்.
பின்னர் தடுக்க வந்த பாட்டியையும் வெட்டி உள்ளார். என் பெண்ணை வெட்டிய பிறகு என் பெண்ணை யார் காப்பாற்றினார்கள் என்னவென்று எங்களுக்கு தெரியாது. என் பெண்ணிற்கு கழுத்து, கால், முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி உள்ளார்.
நாங்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என் பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று எங்களிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் நம்பி வரவழைத்து வெட்டி விட்டார்களே என்று அழுதபடி கூறினார்.
சேலம் மாஜிஸ்தி ரேட்டிடம் மருமகள் வாக்குமூலம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் நடந்த ஆணவ கொலையில் வெட்டுப்பட்டு காயம் அடைந்த அனுசுயா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்றம் ஜே.எம்-3 நீதித்துறை மாஜிஸ்திரேட் தங்க கார்த்திகா இன்று காைல சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து அனுசியாவிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.
அப்போது அனுசியா தனக்கு நேர்ந்த சம்பவத்தை கண்ணீர் மல்க மாஜிஸ்திரேட்டிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து மாஜிஸ்திரேட், அவருக்கு ஆறுதல் தெரிவித்து, விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அனுசி யாவுக்கு டாக்டர்கள் தொட ர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- ஆர்.ஒ எந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி உதவினார்.
- கல்லூரிகளுக்கு ரூ.68 லட்சம் மதிப்பிலான ஆர்.ஒ எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரி களில் பயிலும் நாளைய இளையத் தலைமுறை யினருக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், சுகாதாரமான குடிநீர் சுத்திகரிப்பு ஆர்.ஒ எந்திரத்தை வழங்கி வருகிறது.
அவ்வகையில் திருப்பத்தூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் இயங்கி வரும் லிட்டில் பிளவர் சிறுவர் இல்லத்தில் தங்கி பயிலும் பெற்றோரை இழந்த மற்றும் சிதைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2,16,957 மதிப்பிலான ஆர்.ஒ எந்திரம் மற்றும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி ரூ.2,66,253 மதிப்பிலான ஆர்.ஒ எந்திரம் என மொத்தம் ரூ.4.83 லட்சம் மதிப்பிலான ஆர்.ஒ எந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி உதவினார்.
ஆர்.ஒ எந்திரத்தை நேரில் சென்று வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இந்த குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் ஆரோக்கியமான உடல் நலத்தோடு கல்வி பயின்று வாழ்வில் மேன்மேலும் உயர்ந்து பெற்றோர்க்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதுவரை ஐ.வி.டி.பி நிறுவனம் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.68 லட்சம் மதிப்பிலான ஆர்.ஒ எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
- இவர் கடந்த 14-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள யாரப் நகர் பகுதியை சேர்ந்தவர் சுகில் (21). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டில் இருந்து நமாஸ் செய்ய சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கடந்த 14-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இருகுடும்பத்தினர் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
- முனிராஜ் இருவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் மல்லேஷ் ஆகிய இருவரை தகாத வார்த்தையில் பேசி தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பெட்ட கான பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி.
அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 31. இருகுடும்பத்தினர் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினரான முனிராஜ் இருவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் மல்லேஷ் ஆகிய இருவரை தகாத வார்த்தையில் பேசி தாக்கினர்.
இது குறித்த புகாரின் பேரில் உத்தன பள்ளி போலீசார் மணிகண்டன் மற்றும் முனிராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் உடல்நலம் சரியாகவில்லை.
- பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள சூடு கொண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில் இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் உடல்நலம் சரியாகவில்லை. இதனால் மனவிரக்தியில் இருந்த மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
- லாரியில் இருந்த 50 கிலோ இரும்புக் கம்பிகள் காணாமல் போனதாக கோவையில் உள்ள தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
- விசாரணை நடத்தியதில், லாரியில் இருந்த 50 கிலோ கம்பிகளை அந்த லாரி டிரைவர்களே திருடி விற்றதாக தெரியவந்தது.
ஓசூர்,
கர்நாடக மாநிலம், பெல்லாரி என்ற இடத்தில் இருந்து கோவை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு லாரிகள் பாண்டிச்சேரி தனியார் தொழிற்சாலைக்கு இரும்புக் கம்பிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகளை டிரைவர்களான நெப்போலியன் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் ஓட்டி சென்றனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காளிங்கவரம் பிரிவு சாலையில் உள்ள தாபா ஓட்டல் அருகே அந்த 2 லாரிகளும் உணவுக்காக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், லாரியில் இருந்த 50 கிலோ இரும்புக் கம்பிகள் காணாமல் போனதாக கோவையில் உள்ள தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலில் அடிப்படையில் கோவையில் இருந்து சூளகிரி போலீஸ் நிலையம் வந்து, நிறுவன மேலாளர் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், லாரியில் இருந்த 50 கிலோ கம்பிகளை அந்த லாரி டிரைவர்களே திருடி விற்றதாக தெரியவந்தது. இதையடுத்து, நெப்போலியன், ராம்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
- சுபாஷ், அனுசுயா திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- அவர்கள் கடந்த 27-ம் தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (50), விவசாயி. இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், சுபாஷ் (26) என்ற மகனும் உள்ளனர்.
சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுபாஷின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கடந்த 27-ம் தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சுபாஷ் தனது மனைவி அனுசுயாவை அழைத்துக் கொண்டு நேற்று சொந்த ஊரான அருணபதிக்கு வந்தார். அப்போது புதுமண தம்பதியான சுபாஷ்-அனுசுயா இருவரும் தண்டபாணி வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.
தனது எதிர்ப்பை மீறி மகன் காதல் திருமணம் செய்துகொண்டதால் விரக்தி அடைந்த தண்டபாணி 2 பேரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து வைத்தனர்.
இருவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது சுபாஷின் பாட்டி கண்ணம்மா அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்தார். தன்னுடைய பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டு வந்த மகனுக்கு தனது தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்த செய்தி தண்டபாணிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
கோபத்தில் இருந்த தண்டபாணி தனது தாய் கண்ணம்மா வீட்டிற்குச் சென்று என் பேச்சை மீறி திருமணம் செய்துகொண்ட அவர்களை வெளியே அனுப்பாமல் என்னை மேலும் அவமானப்படுத்தும் விதமாக வீட்டிற்குள் எப்படி அனுமதித்தாய்? என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷையும், கண்ணம்மாவையும் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த மருமகள் அனுசுயாவையும் அவர் சரமாரியாக வெட்டினார். இதனால் 3 பேரும் வலியால் பயங்கரமாக அலறினர். சிறிது நேரத்தில் சுபாஷூம், கண்ணம்மாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மருமகள் அனுசுயா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அனுசுயாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா எட்வின் சம்பவ இடம் வந்து பார்வையிட்டார். மேலும் ஆணவ கொலை செய்த தண்டபாணியை விரைவில் பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள தண்டபாணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இரட்டை ஆணவக்கொலை செய்து தலைமறைவாக இருந்த தண்டபாணியை அரூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.






