என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • விஜய் டிரைவர் ஆக பணியாற்றுவதால் 15 நாட்கள் அல்லது மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
    • காவேரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த திருவனப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது33). டிரைவர். இவருடைய மனைவி காவேரி (29). இவர்கள் இருவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    விஜய் டிரைவர் ஆக பணியாற்றுவதால் 15 நாட்கள் அல்லது மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    காவேரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவு காவேரியின் மீது கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றினார்.

    இதில் முகம், முன்கழுத்து வலதுபக்கம் மார்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு காவேரி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கருமுட்டை விவகாரம் ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பூதாகரமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
    • தற்போது ஓசூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருமுட்டையை விற்றுவிட்டதா கணவன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்தவர் சப்தகிரி. இவரது மனைவி சவிதா. இவர்கள் குழந்தை வேண்டி, ஓசூரில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் குழந்தை கருத்தரிப்புக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

    இதற்காக, அவர்கள் ரூ.3,50,000- வரை செலவு செய்துள்ளனர். கருத்தரிப்புக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் சப்தகரியின் விந்தணு மற்றும் சவிதாவின் கருமுட்டை ஆகியவற்றை பெற்று 13 கரு முட்டைகளை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் 3 கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி, அதனை கடந்த மாதம் 22 ஆம் தேதி சவிதாவின் கருப்பைக்குள் செலுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று, கருப்பைக்குள் செலுத்தப்பட்ட கருமுட்டைகள் கருத்தரிக்கவில்லை என டாக்டர்கள், சப்தகிரி தம்பதியிடம் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் 3 கருமுட்டைகளில், 2 கருமுட்டைகள் மட்டும்தான் கருப்பைக்குள் வைக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு கருமுட்டையை தற்போது கருப்பைக்குள் வையுங்கள், அதன் மூலம் மீண்டும் கருத்தரிக்கலாம் என கேட்டுள்ளனர்.

    அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் 3 கருமுட்டைகளையும் கருப்பைக்குள் வைத்து கருத்தரிக்க சிகிச்சை அளித்தோம். ஆனால் 3 கருமுட்டைகளும் கருத்தரிக்கவில்லை என கூறியுள்ளனர்.

    அதனை ஏற்க மறுத்த சப்தகிரியின் குடும்பத்தினர், 2 கரு முட்டைகளை மட்டுமே மருத்துவர்கள் கருப்பைக்குள் வைத்துள்ளனர். மீதமிருந்த ஒரு கருமுட்டையை மருத்துவமனை நிர்வாகம் பணத்திற்காக விற்று விட்டதாக ஆவேசமடைந்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் டவுன் போலீசார் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட சப்தகிரி, சவிதா ஆகியோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருமுட்டை விவகாரம் ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பூதாகரமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஓசூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருமுட்டையை விற்றுவிட்டதா கணவன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வல்லரசு தனது செல்போனை கார்த்திக்கிடம் சரிசெய்ய பொங்கல் பண்டிகை அன்று கொடுத்துள்ளார்.
    • இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி பழைய பேட்ைட கொத்தபேட்டா காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது24). கார்பெண்டரான இவரது நண்பர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த வல்லரசு (25).

    இந்த நிலையில் வல்லரசு தனது செல்போனை கார்த்திக்கிடம் சரிசெய்ய பொங்கல் பண்டிகை அ ன்று கொடுத்துள்ளார். அவரும் அந்த செல்போனை சரி செய்து கொடுத்துள்ளார். அதற்கான கட்டணம் 2 ஆயிரம் பணம் கொடுக்கவில்லை.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வல்லரசு, கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வனையில் சேர்த்தனர்.

    இது குறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வல்லரசை கைது செய்தனர்.

    • அம்பேத்கர் படத்தை கிழித்ததுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், 2 கார் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.
    • ரமேஷ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சின்ன தாசரப்பள்ளி கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவையொட்டி பாடல் கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து அருகில் உள்ள அட்டூர் கிராமத்துக்குள் 200-க்கும் மேற்பட்டோர் புகுந்து அம்பேத்கர் படத்தை கிழித்ததுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், 2 கார் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.

    இதுதொடர்பாக அட்டூர் கிராமத்தை சேர்ந்த மோகன் (வயது 27) என்பவர் பாகலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பெரிய தாசரப்பள்ளியை சேர்ந்த மகேஷ் (20), வினோத் (24), கீர்த்தி (24) மற்றும் சின்ன தாசரப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் (25) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கழிவு நீர் கால்வாயை அரசு சார்பில் சில வாரம் முன்பு அமைக்கு பணி நடை பெற்றது.
    • கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜர் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் புதிதாக கழிவு நீர் கால்வாயை அரசு சார்பில் சில வாரம் முன்பு அமைக்கு பணி நடை பெற்றது.

    இந்த நிலையில் கட்டபட்ட கால்வாயானது மற்ற கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • தலைமறைவான தண்டபாணி நேற்று முன்தினம் இரவு கழுத்தை அறுத்து தறகொலைக்கு முயன்றார்.
    • அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). இவரது மகன் சுபாஷ் (25) வேறு சமுதாயத்தைச் சேர்ந்த அனுசுயா (25) என்பவரை காதலித்து கடந்த மாதம் 27-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களின் காதல் திருமணததிற்கு எதிர்ப்பு தெரிவித்த தண்டபாணி நேற்று முன்தினம் சுபாசை வெட்டிக் கொலை செய்தார். தடுக்க சென்ற பாட்டி கண்ணம்மாளையும் வெட்டிக் கொன்றார். மருமகளையும் சரமாரியாக வெட்டினார்.

    இந்த நிலையில் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனுசுயா, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அதன் பிறகு நேற்று முன்தினம் இரவு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து இரவு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இரட்டை கொலை செய்து தலைமறைவான தண்டபாணி நேற்று முன்தினம் இரவு கழுத்தை அறுத்து தறகொலைக்கு முயன்றார்.

    ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த அவரை, போலீசார் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்ததும், அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சுபாஷ், பாட்டி கண்ணம்மாளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து தண்டபாணியின் மனைவி சுந்தரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அருணகிரி சுடுகாட்டில் 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. 

    • அடர்ந்த வனப்பகுதியில் மேலகிரி அய்யப்பன் கோவில் உள்ளது.
    • சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா கூச்சுவாடி, நெல்லுகுந்தி கிராமங்களுக்கு அருகே அடர்ந்த வனப்பகுதியில் மேலகிரி அய்யப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் சித்திரை விஷூவையொட்டி கோவில் குருசாமி கோபால் தலைமையில் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் நெல்லுகுந்தி, கூச்சுவாடி, கோவை குட்டை, குடியூர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சிவண்ணா தலைமை தாங்கினார்.
    • ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ் எஸ்.தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    தமிழ்நாட்டில் நேற்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்,பாகலூர் ஹட்கோ பகுதியில் இருந்து அணிவகுப்பு தொடங்கி,பாகலூர் சாலை, பஸ் நிலைய சாலை, பழைய பெங்களூரு சாலை, எம்.ஜி.சாலை, ஏரித்தெரு, மற்றும் ராமநாயக்கன்ஏரி வழியாக சென்று கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் பேரணி நிறைவு பெற்றது. வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

    பின்னர், நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சிவண்ணா தலைமை தாங்கினார்.ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட தலைவர் சங்கர்லால் முன்னிலை வகித்தார்.

    அகில பாரத துறவியர் சங்கத்தின் துணைத்தலைவர் ராமானந்தா சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசினார். வட தமிழக ஆர்.எஸ் எஸ்.மாநில இணைசெயலாளர் பிஷோப குமார் சிறப்புரையாற்றினார்.

    இதில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ் எஸ்.தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி,

    ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • படுகொலை சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த மகன் சுபாஷ் மற்றும் கொலையை தடுக்க முயன்ற சுபாஷின் பாட்டி கண்ணம்மாவைவும் வெட்டி ஆணவக் கொலை செய்த கொலையாளி தண்டபாணிக்கு பிணையில் விடாமல் குண்டர் தடுப்பு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும்.

    இந்த படுகொலை சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

    இது போன்ற ஆணவக் கொலைகளை உடனடியாக விசாரிப்பதற்காக தனி நீதிமன்றத்தை தமிழக அரசு நிறுவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விசிக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட.ன ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விசிக கட்சியின் மாநில துணைச் செயலாளர் அசோகன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • உணவு வகைகள் உடலுக்கு சத்து தரும் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
    • உணவுகளை சுவைத்து சிறப்பாக உணவு செய்தவர்களுக்கு பாராட்டி வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவில் மகளிர் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திருவிழாவில் சமைக்கப்பட்ட உணவு வகைகள் உடலுக்கு சத்து தரும் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    அதனை சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் லாவண்யா ஹேம்நாத் உணவுகளை சுவைத்து சிறப்பாக உணவு செய்தவர்களுக்கு பாராட்டி வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்சி அலுவர்கள் கோபால கிருஷ்னண், விமல் ரவிகுமார், உதவி திட்ட அலுவலர் பிரபாகர், வட்டார மேலாளர் எல்லப்பன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், ேமுகிலன் மற்றும் சுய உதவி குழுவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ஓசூர் அந்திவாடியில் நடைபெற்ற விழாவிற்கு, மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆதி திராவிடர் நல சங்கம் சார்பில், ஓசூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    ஓசூர் அந்திவாடியில் நடைபெற்ற விழாவிற்கு, மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவி சரோஜம்மா முன்னிலை வகித்தார்.

    இதில், சங்க நிறுவனர் அன்பு தீபன், சங்கத்தின் மாநில தலைவரும், ஓய்வுபெற்ற ரெயில்வேத்துறை அதிகாரியுமான டாக்டர் ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் ராஜா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகராட்சி கவுன்சிலர் பாக்யலட்சுமி உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.

    விழாவின் போது ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் மற்றும் சிறுவர்,சிறுமியருக்கு நோட்டு புத்தகம், பேனா, டிபன் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன.

    மேலும் இதில், லலிதா, லட்சுமி, பவ்யா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து அந்திவாடி மைதான அருகிலிருந்து விழா நடைபெறும் மைதானம் வரை, மேள, தாள முழக்கத்துடன் ஊர்வலம் நடைபெற்றது.

    • தண்டவாளத்தில் தலை வைத்து படுக்க முயன்ற ஒரு நிர்வாகியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
    • இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

    ஓசூர், 

    ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசின் போக்கை கண்டித்தும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று மதியம் ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி ஓசூர் ரெயில் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியினர் ரெயில்நிலையத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பேரி கார்டுகள் வைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமையில் மறியலில் ஈடுபட ரெயில் நிலையம் நோக்கி வந்த, மாநில செயலாளர் சிவகுமார், மாநகர தலைவர் தியாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    இதேபோல், ஓசூர் ஆர்.சி. சர்ச் அருகே தண்டவாளத்தில் மறியலில் ஈடுபட முயன்றும், தண்டவாளத்தில் தலை வைத்து படுக்க முயன்ற ஒரு நிர்வாகியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசாரின் இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டு, ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    ×