என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலில் எடுத்து விசாரிக்க முடிவு"

    • தலைமறைவான தண்டபாணி நேற்று முன்தினம் இரவு கழுத்தை அறுத்து தறகொலைக்கு முயன்றார்.
    • அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). இவரது மகன் சுபாஷ் (25) வேறு சமுதாயத்தைச் சேர்ந்த அனுசுயா (25) என்பவரை காதலித்து கடந்த மாதம் 27-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களின் காதல் திருமணததிற்கு எதிர்ப்பு தெரிவித்த தண்டபாணி நேற்று முன்தினம் சுபாசை வெட்டிக் கொலை செய்தார். தடுக்க சென்ற பாட்டி கண்ணம்மாளையும் வெட்டிக் கொன்றார். மருமகளையும் சரமாரியாக வெட்டினார்.

    இந்த நிலையில் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனுசுயா, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அதன் பிறகு நேற்று முன்தினம் இரவு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து இரவு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இரட்டை கொலை செய்து தலைமறைவான தண்டபாணி நேற்று முன்தினம் இரவு கழுத்தை அறுத்து தறகொலைக்கு முயன்றார்.

    ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த அவரை, போலீசார் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்ததும், அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சுபாஷ், பாட்டி கண்ணம்மாளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து தண்டபாணியின் மனைவி சுந்தரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அருணகிரி சுடுகாட்டில் 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. 

    ×