என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஒவ்வொரு மாதமும் நடைப்பெறும் சங்க கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்
    • ஓய்வு ஊதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அரச சலுகைகள் காலதாமதம் இன்றி வழங்க அரசை கேட்டுக்கொள்வது

    கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வு பெற்ற சீருடை பணயாளர்கள் காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு துறை பணியாளர்கள் சங்க புதிய மாவட்ட நிர்வாகிகளாக கீழ்கண்டவாறு தேர்தெடுக்கப்பட்டது தலைவராக ஓய்வு டி.எஸ். பி. ராமர்த்தி, செயலாளராக கே.ராஜகோபால் எஸ்.ஐ. (ஓய்வு), பீ.மாரப்பன், எஸ்.ஐ. (ஓய்வு) பொருளராகவும், துணைத்தலைவராக ரபேல்ரெட்டி வனத்துறை ஏ.சி.எப். (ஒய்வு) ஆகியோர் ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.அதன் பின் நடந்த பொது குழ கூட்டம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகம் அருகே உள்ள சங்க கட்டிடத்தில் ஓய்வு டி.எஸ்.பி ராமமூர்த்தி மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது

    ஓய்வுபெற்ற டி.எஸ்.பி, ஞானசேகரன், ("ஓய்வு) ஏ.டி.எஸ்.பி., எஸ்.கே.தன்ராஜ், வேணுகோபால் டி.எஸ்.பி (ஓய்வு) மகளிர் அணி சூரியகலா ஏ.டி.எஸ்.பி.(ஓய்வு) ஆகியோர்முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் கே.ராஜகோபால் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நடைப்பெறும் சங்க கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும், சங்கம் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது ஓய்வு ஊதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அரச சலுகைகள் காலதாமதம் இன்றி வழங்க அரசை கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மாவட்ட சமுகநலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்று அனைத்து துறை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் துரை உட்பட 100-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்.முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜகோபால் பிறந்தநாளை முன்னிட்டு சங்க அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது இறுதியாக மாவட்ட பொருளாளர் பீ.மாரப்பன் அனைவருக்கும் நன்றி கூறினர்.

    • இருவழிதடமாக அகலபடுத்த ரூ.11 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் பணிக்கும் பணிக்கு பூமிபூஜை நடைப்பெற்றது.
    • தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக்கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சி சாலை முதல் உத்தனப்பள்ளி வரை நெடுஞ்சாலைதுறை மூலம் சாலை மேம்பாட்டு திட்டத்தில் இடைவழி தடத்திலிருந்து இருவழிதடமாக அகலபடுத்த ரூ.11 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் பணிக்கும் பணிக்கு பூமிபூஜை நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக்கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் தேன்கனி க்கோட்டை உதவி கோட்ட பொறி யாளர் திருமால்செ ல்வன், ராயக்கோட்டை உதவி பொறியாளர் மன்னர்மன்னன், முன்னால் பேருரட்சி தலைவர் சையத் அசேன், ஒப்பந்ததாரர் சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகராஜ், கிரி, சண்முகம், அகிலா சாதிக், வச்சலா லட்சுமைய்யா, இந்திய கம்யூனிட்டு கட்சி நகர செயலாளர் மது, துணைசெயலாளர் குருராஜ், ஜெயராமன், நகராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • நேற்று முன்தினம் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு வந்த ரேவதி உறவினர்களிடம் சென்று சொத்து பிரிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
    • மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தேர்பேட்டை வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ரேவதி (வயது32).

    ஆசிரியை

    இவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும், அவரது உறவினர்களான கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்கானி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாதையன் (50), அவரது மகன் காந்தி என்கிற சக்தி (28), மாரி (45) ஆகியோருக்கு இடையே சொத்து பிரிப்பது காரணமாக தகராறு இருந்து வந்தது.

    கொலை மிரட்டல்

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு வந்த ரேவதி உறவினர்களிடம் சென்று சொத்து பிரிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் 3 பேரும் சேர்ந்து ரேவதி கத்தியை எடுத்து கையை கிழித்துள்ளனர். மேலும் அவரை கட்டையாலும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதில் காயமடைந்த ரேவதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாலிபர் கைது

    இந்த சம்பவம் குறித்து ரேவதி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 3பேர் மீது வழக்கு பதிவு செய்து காந்தி என்கிற சக்தியை கைது செய்தனர். மற்ற 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கல் குமாரம்பட்டி கோவில் அருகே செல்லும்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கே.எட்டிபட்டி அருகில் உள்ள கல்குமாரம் பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது32). விவசாயி.

    நேற்று இரு சக்கர வாகனத்தில் கல் குமாரம்பட்டி கோவில் அருகே செல்லும்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மாரியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400ம், பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    • விண்ணப்பத்தில் வயது வரம்பு, தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300ம், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400ம், பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இதே போல், மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முறையே ரூ.600, ரூ. 750, ரூ. 1000 வீதம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணைதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்பு அட்டையுடன் விண்ணப்ப படிவத்தினை நேரிலும் பெற்று கொள்ளலாம்.

    விண்ணப்பத்தில் வயது வரம்பு, தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், விண்ணப்பத்துடன், அனைத்து கல்வி சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, புகைப்படம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கியின் கணக்கு புத்தகம் உள்ளிட்டவையின் நகல்கள் இணைத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சமர்பிக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் சமர்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவராக இருப்பின் சுய உறுதிமொழி ஆவணம் சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கெண்டாடப்பட்டது.
    • பா.ஜனதா பட்டியல் அணி தலைவர் ஆர்.கே.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கெண்டாடப்பட்டது.

    இதையொட்டி மாவட்ட தலைவர் சிவபிரகாசம் முன்னிலையில் கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ஜனதா பட்டியல் அணி தலைவர் ஆர்.கே.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பட்டியல் அணி பார்வையாளர் திருமலை பெருமாள் வரவேற்புரை யாற்றினார்,மாநில செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாவட்ட செயலாளர் மன்னன் சிவா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள் திருமுகம், ஜெயா, வேலன் ராமமூர்த்தி, பத்ரிநாதன், விச்சந்திரன், ரமேஷ், பாலு ,வெங்கடாஜலபதி. முருகேசன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • காவேரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவு காவேரியின் மீது கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றினார்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த திருவனப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது33). டிரைவர். இவருடைய மனைவி காவேரி (29). இவர்கள் இருவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    விஜய் டிரைவர் ஆக பணியாற்றுவதால் 15 நாட்கள் அல்லது மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    காவேரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவு காவேரியின் மீது கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றினார்.

    இதில் முகம், முன்கழுத்து வலதுபக்கம் மார்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு காவேரி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மொத்த விற்பனைக்கு பிரபலமாக கம்பெனிகளின் சிமெண்டு மூட்டைகள் இருப்பதாகவும், அதனை தங்களுக்கு குறைந்த விலையில் வருவதாக கூறியுள்ளார்.
    • இதனை நம்பிய சன்பசப்பா அவர் தெரிவித்த வங்கி கணக்கில் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்தை செலுத்தி உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்தவர் சந்திரப்பா. இவரது மகன் சன்பசப்பா (வயது36). இவர் ஓசூரில் தனியார் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் கட்டிடம் தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி சன்பசப்பாவிற்கு போனில் ஆசிஷ்குமார் என்பவர் தன்னிடம் மொத்த விற்பனைக்கு பிரபலமாக கம்பெனிகளின் சிமெண்டு மூட்டைகள் இருப்பதாகவும், அதனை தங்களுக்கு குறைந்த விலையில் வருவதாகவும், அதற்கு பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.

    இதனை நம்பிய சன்பசப்பா அவர் தெரிவித்த வங்கி கணக்கில் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். அதன் பிறகு அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. மேலும், மர்ம நபர் ஒருவர் தன்னை மோசடி செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சன்பசப்பா கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • எதிரே வந்த ஆட்டோ ஒன்று சங்கர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேபள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மகன் சங்கரப்பா என்கிற சங்கர் (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் அன்னியாம்-பாலேபள்ளி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று சங்கர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி எரிகோடி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவி உள்ளார்.

    இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் மனம் விரக்தியில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அமுதா அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பாத்தகோட்ட பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார்.
    • அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக கவுரம்மா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த நாயக்கன்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவுரம்மா (வயது 66). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாத்தகோட்ட பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக கவுரம்மா உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து வந்து கவுரம்மாவின் உடலை ஆற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேரும் சேர்ந்து ரேவதி கத்தியை எடுத்து கையை கிழித்துள்ளனர். மேலும் அவரை கட்டையாலும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தனர்.
    • ரேவதி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தேர்பேட்டை வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ரேவதி (வயது32).

    இவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும், அவரது உறவினர்களான கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்கானி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாதையன் (50), அவரது மகன் காந்தி என்கிற சக்தி (28), மாரி (45) ஆகியோருக்கு இடையே சொத்து பிரிப்பது காரணமாக தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு வந்த ரேவதி உறவினர்களிடம் சென்று சொத்து பிரிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் 3 பேரும் சேர்ந்து ரேவதி கத்தியை எடுத்து கையை கிழித்துள்ளனர். மேலும் அவரை கட்டையாலும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதில் காயமடைந்த ரேவதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து ரேவதி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 3பேர் மீது வழக்கு பதிவு செய்து காந்தி என்கிற சக்தியை கைது செய்தனர். மற்ற 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×