என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொதிக்கும் எண்ணையை மனைவி  முகத்தில் ஊற்றிய கணவர்
    X

    கொதிக்கும் எண்ணையை மனைவி முகத்தில் ஊற்றிய கணவர்

    • காவேரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவு காவேரியின் மீது கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றினார்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த திருவனப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது33). டிரைவர். இவருடைய மனைவி காவேரி (29). இவர்கள் இருவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    விஜய் டிரைவர் ஆக பணியாற்றுவதால் 15 நாட்கள் அல்லது மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    காவேரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவு காவேரியின் மீது கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றினார்.

    இதில் முகம், முன்கழுத்து வலதுபக்கம் மார்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு காவேரி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×