என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரு சக்கர வாகனங்கள் மோதல்; விவசாயி பலி
- கல் குமாரம்பட்டி கோவில் அருகே செல்லும்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.
- அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கே.எட்டிபட்டி அருகில் உள்ள கல்குமாரம் பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது32). விவசாயி.
நேற்று இரு சக்கர வாகனத்தில் கல் குமாரம்பட்டி கோவில் அருகே செல்லும்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மாரியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






