என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூக்குபோட்டு கூலித்தொழிலாளி தற்கொலை
- இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி எரிகோடி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவி உள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் மனம் விரக்தியில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அமுதா அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story