என் மலர்
கிருஷ்ணகிரி
- இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். இந்த நாட்டின் தூண்கள்.
- குழந்தைகளுக்கு எவ்வாறு ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகள் அளிக்க வேண்டும் என்றும், செயல் வழி கற்றல் பற்றியும் எடுத்து கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி குத்துவிளக்கேற்றி வரவேற்று பேசினார். விழாவில் பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசும் போது இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். இந்த நாட்டின் தூண்கள். மாணவர்கள் அறிவியல் மேதைகளாகவும், சிறந்த மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும், மாவட்ட கலெக்டர்களாகவும் இந்த நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும் என்று பேசினார்.
மேலும் பள்ளியில் படிக்கும் கிண்டர்கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவின் முடிவில் பள்ளியின் இயக்குனர் டாக்டர் சந்தோஷ் குழந்தைகளுக்கு எவ்வாறு ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகள் அளிக்க வேண்டும் என்றும், செயல் வழி கற்றல் பற்றியும் எடுத்து கூறினார். விழாவின் முடிவில் பள்ளியின் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் நசீர்பாஷா செய்திருந்தார்.
- மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- அப்போது மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர அமைச்சர் உறுதி அளித்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம்,அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ தலைமையில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, மஞ்சுகொண் டப்பள்ளி ஊராட்சி தலைவர் சிவனங்கிரி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிவா, சண்முகப்பா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளாட்சிதுறை அமைச்சர் பெரியசாமியை நேரில் சந்தித்து தளி சட்டமன்ற தொகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி சாலை வசதி செய்து தர கோரியும், குறிப்பாக அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர அமைச்சர் உறுதி அளித்தார்.
- இளைஞர் காங்கிரஸ் சார்பில், சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
- கிருஷ்ணகிரி செல் லக்குமார் எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி செல் லக்குமார் எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாநில காங்கிரஸ் செயலாளர் தேன், கு அன்வர், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், காங்கிரஸ் நகரதலைவர் பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா, முன்னாள் நகர தலைவர் தாஸ், தொழிலதிபர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பின்னால் அமர்ந்து வந்த லட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல். இவரது மனைவி லட்சுமி (வயது 31).
இவரும் அவரது உறவினரான அதேபகுதியைச் சேர்ந்த செல்வம் ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்புபோது பின்னால் வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்து வந்த லட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். செல்வத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. இரு–வரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே லட்சுமி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். செல்வத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
- மத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், கேட்டறிந்தார்.
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் பரிந்துரை மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, கொத்தபெட்டா அங்கன்வாடி மையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையம், கிருஷ்ணகிரி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக்கடை, கூட்டுறவு மருந்தகம் மற்றும் கிருஷ்ணகிரி உழவர் சந்தை ஆகியவற்றை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கொத்தப்பெட்டா அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட அவர், குழந்தைகளின் தினசரி வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மின் இணைப்பு, குழந்தைகளின் எடை, உணவு பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் சரியான நேரத்திற்கு வருகை தர அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறினார்.
மேலும், அங்கன்வாடி மையம், சமையலறை பகுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், தினசரி வழங்கப்படும் உணவு பட்டியலை பட்டியலிட வேண்டும் என அங்கன்வாடி பணியாளர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, கொத்தப்பேட்டாவில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டு குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படுகிறதா என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட காந்திரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக்கடையில் அரிசி, சக்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் குறித்த பதிவேடுகள் மற்றும் மின்னனு பாய்ன்ட் ஆப் சேல் எந்திரங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கூட்டுறவு மருந்தகத்தை பார்வையிட்டு தினசரி விற்பனை, மருந்துகள் இருப்பு, காலாவதியான மருந்து பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், கிருஷ்ணகிரி உழவர் சந்தையை பார்வையிட்டு அங்காடிகளின் எண்ணிக்கை, தினசரி காய்கறிகள் வரத்து, தினசரி விற்பனை, வாகனங்கள் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், காய்கறிகள் இருப்பு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கு, மின்விளக்கு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும், தினசரி நோயாளிகளின் வருகை, உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் பரிந்துரை மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு, கற்றல் திறன் குறித்து மாணவ, மாணவிகளிடம் உரையாடினார்.
மேலும், போச்சம்பள்ளியில் வார சந்தை செயல்படும் பகுதியை பார்வையிட்டு, சந்தையை மேம்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள கருத்துரு தயாரிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் சம்பத் (கிருஷ்ணகிரி), தேன்மொழி (போச்சம்பள்ளி) மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- கம்பெனியில் வேலை பார்த்தபோது பிளாண்ட்டில் இருந்து சுடு தண்ணீர் எதிர்பாராதவிதமாக ஆதித்தியாகுரான் மீது கொட்டியது.
- சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரபள்ளி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஆதித்தியாகுரான் (வயது19). இவர் ஓசூர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று கம்பெனியில் வேலை பார்த்தபோது பிளாண்ட்டில் இருந்து சுடு தண்ணீர் எதிர்பாராதவிதமாக ஆதித்தியாகுரான் மீது கொட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடன் பணிபுரியும் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தைகள், வேலைக்கு செல்வோரும் அவ்வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவாசப் பிரச்சினைகளாலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காமன்தொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சப்படி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி மற்றும் பல கிரானைட் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாகவும், அரசு விதிகளை மீறியும் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சேஷாத்திரி ஏரி நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தூசி படிந்து பயிர்கள் பாழாகின்றன. அதே போல இப்பகுதியில் உள்ள கோபால் சாகர் ஏரி, தின்னூர் ஏரி பராமரிப்பு பணி செய்ய, ரூ.55 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றக்கோரி மனு அளித்து, வருவாய் துறையினர் நிலங்களை அளந்து கல் நட்ட பின்பும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இது குறித்து கேட்டால் ஊர் பொதுமக்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர்.
அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளால் பெரிய சப்படி முதல் காமன்தொட்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விவசாய நிலங்கள் பாழடைந்தும், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோரும் அவ்வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவாசப் பிரச்சினைகளாலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீதிபதியிடம் தண்டபாணி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
- ஊத்தங்கரைக்கு அழைத்து வந்து கடந்த 15-ந் தேதி மகனையும், மருமகளையும் கத்தியால் வெட்டினேன்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதியில் கடந்த 15-ந் தேதி தண்டபாணி என்பவர் காதல் திருமணம் செய்த மகன் சுபாஷ் (வயது25), தடுக்க வந்த தாய் கண்ணம்மாள் (60) ஆகியோரை வெட்டி கொலை செய்தார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா(25) சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மகனையும், தாயையும் கொன்று விட்டு தப்பி ஓடிய தண்டபாணி ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகே தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை தனிப்படை போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தண்டபாணியை கைது செய்தனர். சிகிச்சை பிறகு அவரை நேற்று ஊத்தங்கரை நீதிமன்றத்தில் நீதிபதி அமர் ஆனந்த முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதியிடம் தண்டபாணி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இதில் தனது மகன் காதல் திருமணம் செய்தது தனக்கு பிடிக்காததால் அவர்கள் இருவரையும் திருப்பூரில் இருந்து ஊத்தங்கரைக்கு அழைத்து வந்து கடந்த 15-ந் தேதி மகனையும், மருமகளையும் கத்தியால் வெட்டினேன். அப்போது என்னை தடுக்க வந்த தாய் கண்ணாம்மாளையும் வெட்டினேன். இதில் எனது தாயும்,மகனும் உயிரிழந்தனர். மருமகள் வெட்டுகாயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தண்டபாணி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு மற்றும் இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் அவரை போலீசார் வேனில் அழைத்து சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் நாளை (20-ந் தேதி) சென்னையில் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹால்தர் விசாரணை நடத்த இருக்கிறார்.
- அதேபகுதியில் நடந்து செல்லும் போது அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்தார்.
- அதில் அவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சாபர்தி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது36).
இவர் நேற்று முன்தினம் அதேபகுதியில் நடந்து செல்லும் போது அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்தார்.
அதில் அவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் அங்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வீரமலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயியான இவர் கடந்த மாதம் 31-ந் தேதி தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் 2 பைக்குகளும் மோதிக்கொண்டதில் சபரி மற்றும் ஹர்ஷா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பகுதியைச் சேர்ந்தவர் சபரி (வயது24), கர்நாடக மாநிலம் பொம்மச்சந்திரா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா, மத்திகிரி பகுதியை சேர்ந்தவர் நோபிக் மற்றும் ஒருவர் என 4 பேர் 2 இருசக்கர வாகனத்தில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது இன்று அதிகாலையில் கிருஷ்ணகிரி அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி என்ற இடத்தில் கண் இமைக்கும் நேரத்தில் 2 பேரும் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டு சாகசத்தில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 2 பைக்குகளும் மோதிக்கொண்டதில் சபரி மற்றும் ஹர்ஷா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நோபிக் என்பவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து விகாஷ்குமாரை சரமாரியாக குத்தினர்.
- போதையில் இருந்ததால் விகாஷ்குமார் இறந்ததும் தங்களுக்கு தெரியாது என்று அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
ஓசூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விகாஷ் குமார் (21). இவர் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், மேலாக வேலை செய்து வந்தார்.
மேலும், ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் பாபு ரெட்டி என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் இவரது நண்பர் பீகாரை சேர்ந்த சிவம் குமார்(19) என்பவருடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று விகாஷ் குமார் அந்த வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த விகாஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் சிவம்குமார் மற்றும் நண்பர்களான மேற்குவங்கத்தை சேர்ந்த தன்மராய் (21) மற்றும் சுஷாந்தா தேப்சிங்கா (21) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது விகாஷ்குமார் புதிதாக செல்போன் வாங்கியதை கொண்டாட, நண்பர்கள் மது விருந்து கேட்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விகாஷ்குமார், தனது வீட்டில் மது விருந்து வழங்கியுள்ளார். அப்போது போதை தலைக்கேறி, அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து விகாஷ்குமாரை சரமாரியாக குத்தினர். பின்னர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.
போதையில் இருந்ததால் விகாஷ்குமார் இறந்ததும் தங்களுக்கு தெரியாது என்று அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.






