என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேர் பலி
- விபத்தில் 2 பைக்குகளும் மோதிக்கொண்டதில் சபரி மற்றும் ஹர்ஷா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பகுதியைச் சேர்ந்தவர் சபரி (வயது24), கர்நாடக மாநிலம் பொம்மச்சந்திரா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா, மத்திகிரி பகுதியை சேர்ந்தவர் நோபிக் மற்றும் ஒருவர் என 4 பேர் 2 இருசக்கர வாகனத்தில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது இன்று அதிகாலையில் கிருஷ்ணகிரி அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி என்ற இடத்தில் கண் இமைக்கும் நேரத்தில் 2 பேரும் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டு சாகசத்தில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 2 பைக்குகளும் மோதிக்கொண்டதில் சபரி மற்றும் ஹர்ஷா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நோபிக் என்பவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.






