என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருமுட்டை விற்பனை"

    • கருமுட்டை விவகாரம் ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பூதாகரமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
    • தற்போது ஓசூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருமுட்டையை விற்றுவிட்டதா கணவன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்தவர் சப்தகிரி. இவரது மனைவி சவிதா. இவர்கள் குழந்தை வேண்டி, ஓசூரில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் குழந்தை கருத்தரிப்புக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

    இதற்காக, அவர்கள் ரூ.3,50,000- வரை செலவு செய்துள்ளனர். கருத்தரிப்புக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் சப்தகரியின் விந்தணு மற்றும் சவிதாவின் கருமுட்டை ஆகியவற்றை பெற்று 13 கரு முட்டைகளை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் 3 கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி, அதனை கடந்த மாதம் 22 ஆம் தேதி சவிதாவின் கருப்பைக்குள் செலுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று, கருப்பைக்குள் செலுத்தப்பட்ட கருமுட்டைகள் கருத்தரிக்கவில்லை என டாக்டர்கள், சப்தகிரி தம்பதியிடம் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் 3 கருமுட்டைகளில், 2 கருமுட்டைகள் மட்டும்தான் கருப்பைக்குள் வைக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு கருமுட்டையை தற்போது கருப்பைக்குள் வையுங்கள், அதன் மூலம் மீண்டும் கருத்தரிக்கலாம் என கேட்டுள்ளனர்.

    அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் 3 கருமுட்டைகளையும் கருப்பைக்குள் வைத்து கருத்தரிக்க சிகிச்சை அளித்தோம். ஆனால் 3 கருமுட்டைகளும் கருத்தரிக்கவில்லை என கூறியுள்ளனர்.

    அதனை ஏற்க மறுத்த சப்தகிரியின் குடும்பத்தினர், 2 கரு முட்டைகளை மட்டுமே மருத்துவர்கள் கருப்பைக்குள் வைத்துள்ளனர். மீதமிருந்த ஒரு கருமுட்டையை மருத்துவமனை நிர்வாகம் பணத்திற்காக விற்று விட்டதாக ஆவேசமடைந்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் டவுன் போலீசார் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட சப்தகிரி, சவிதா ஆகியோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருமுட்டை விவகாரம் ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பூதாகரமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஓசூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருமுட்டையை விற்றுவிட்டதா கணவன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிறுமியின் தாய், அவரது ஆண் நண்பர், புரோக்கர் மாலதி ஆகியோர் சிறுமிக்கு ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் மூலம் போலியாக பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை தயாரித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சூரம்பட்டி போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தன்னை தனது தாய் மற்றும் அவரது ஆண் நண்பர், பெண் புரோக்கர் ஒருவர் ஆகியோர் சேர்ந்து கருமுட்டை கொடுக்க வைத்து கொடுமைபடுத்துவதாக கூறி இருந்தார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய், அவரது ஆண் நண்பர் மற்றும் பெண் புரோக்கர் மாலதி(36) ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சிறுமியின் தாய் அடிக்கடி தனியார் ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டையை விற்று உள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது ஆண் நண்பருடன் ஜாலியாக செலவு செய்து வந்து உள்ளார். அப்போது சிறுமியின் தாய்க்கும், ஈரோடு கைக்காட்டி வலசு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மாலதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் கருமுட்டை விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் தாயின் ஆண் நண்பர் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். மேலும் சிறுமியின் மூலமும் கருமுட்டை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி சிறுமியின் தாய், அவரது ஆண் நண்பர், புரோக்கர் மாலதி ஆகியோர் சிறுமிக்கு ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் மூலம் போலியாக பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை தயாரித்து உள்ளனர்.

    பின்னர் சிறுமிக்கு அதிக வயது என்று கூறி அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளை அணுகி கருமுட்டையை விற்று உள்ளனர். இதில் சிறுமிக்கு 20 ஆயிரம் ரூபாயும், புரோக்கர் மாலதிக்கு 5 ஆயிரமும், ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் கொடுத்து உள்ளனர்.

    இந்த பணத்தை வைத்து சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 12 வயது முதல் 16 வயது வரை 8 முறை சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்றது தெரிய வந்தது.

    ஒரு கட்டத்தில் தாயின் ஆண் நண்பரால் சிறுமிக்கு தாங்க முடியாத தொல்லை ஏற்பட்டது. இதையடுத்து சிறுமி அவர்களிடமிருந்து தப்பி சேலத்தில் உள்ள உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்தார். அவர்களிடம் நடந்த விபரங்களை கூறி அழுதார். இதையடுத்து அவர்கள் சிறுமியை அழைத்து வந்து போலீசில் புகார் கொடுத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பெற்ற மகளையே பணத்துக்கு ஆசைப்பட்டு கருமுட்டை விற்க வைத்த தாய், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் ஆண் நண்பர் மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோர் மீது போலீசார் போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுமியின் தாய், புரோக்கர் மாலதி ஆகியோர் கோவை சிறையிலும் தாயின் ஆண் நண்பர் கோபி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே சிறுமிக்கு போலி பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் எண் மூலம் போலீசார் அவரை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் இதே போல் வேறு யாருக்காவது போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவர் பிடிபட்டால் தான் முழு விபரமும் தெரிய வரும். மேலும் கைதான பெண் புரோக்கர் மாலதி மேலும் சில சிறுமிகளை இது போல் கருமுட்டை விற்பனை செய்ய உதவினாரா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

    ×