என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர்  கைது
    X

    கைது செய்யபட்ட லாரி டிரைவர்களை படத்தில் காணலாம்

    இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர் கைது

    • லாரியில் இருந்த 50 கிலோ இரும்புக் கம்பிகள் காணாமல் போனதாக கோவையில் உள்ள தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • விசாரணை நடத்தியதில், லாரியில் இருந்த 50 கிலோ கம்பிகளை அந்த லாரி டிரைவர்களே திருடி விற்றதாக தெரியவந்தது.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலம், பெல்லாரி என்ற இடத்தில் இருந்து கோவை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு லாரிகள் பாண்டிச்சேரி தனியார் தொழிற்சாலைக்கு இரும்புக் கம்பிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகளை டிரைவர்களான நெப்போலியன் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் ஓட்டி சென்றனர்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காளிங்கவரம் பிரிவு சாலையில் உள்ள தாபா ஓட்டல் அருகே அந்த 2 லாரிகளும் உணவுக்காக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், லாரியில் இருந்த 50 கிலோ இரும்புக் கம்பிகள் காணாமல் போனதாக கோவையில் உள்ள தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அந்த தகவலில் அடிப்படையில் கோவையில் இருந்து சூளகிரி போலீஸ் நிலையம் வந்து, நிறுவன மேலாளர் புகார் அளித்தார்.

    அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், லாரியில் இருந்த 50 கிலோ கம்பிகளை அந்த லாரி டிரைவர்களே திருடி விற்றதாக தெரியவந்தது. இதையடுத்து, நெப்போலியன், ராம்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×