என் மலர்
நீங்கள் தேடியது "வீரர்களுக்கு அஞ்சலி"
- வீரர்களுக்கு 4-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அரூர் கச்சேரிமேட்டில் நடைபெற்றது.
- டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமை வகித்தார்.
அரூர்,
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 4-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அரூர் கச்சேரிமேட்டில் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் .வீரர்களின் திருவுருவ படங்களுக்கு வருவாய் மற்றும் காவல் துறையினர் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதில், சி.ஆர்.பி.எப். வீரர் பச்சையப்பன், வட்டாட்சியர் பெருமாள், காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு, தொண்டு நிறுவன களப்பணியாளர் சாலா, ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் உள்ளி ட்டோர் கலந்துகொண்டனர்.
- தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த அலுவலர்கள் பணியாளர்கள் 33பேருக்கும் வருடந்தோறும் ஏப்ரல் 14-ந் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
- கிருஷ்ணகிரியில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்புத் துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு துறையில் தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த அலுவலர்கள் பணியாளர்கள் 33பேருக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்விற்கு கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர் எம்.மகாலிங்க மூர்த்தி தலைமை தாங்கினார் . உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர் வெங்கடாஜலம், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.






