என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மற்ற பெட்ரோல் பங்க்கில் உள்ள பெட்ரோலுக்கும், அங்குள்ள பெட்ரோலுக்கும் நிறத்திலும், திட தன்மையிலும் வித்தியாசம் இருந்தது.
    • போலீசார் அங்கு சேகரிக்கப்பட்ட பெட்ரோலை பரிசோ தனைக்காக சென்னைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.

    இவர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி ஒரு பெட்ரோல் பங்கில் தனது மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டார். அவர் பெட்ரோல் பங்க்கில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் நின்றது.

    இதையடுத்து நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள் இயங்காததால் அவர் பழுது பார்க்கும் கடைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அண்ணாமலை நேற்று காலை அந்த பெட்ரோல் பங்க்கிற்கு வந்து தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வதாக கூறினார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து டவுன் போலீசார் அங்கு வந்து பெட்ரோலை பாட்டிலில் பிடித்து பார்த்தனர்.

    அப்போது பெட்ரோல் நிறம் வித்தியாசமாக இருப்பதை அறிந்த போலீசார் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அந்த பெட்ரோலை எடுத்துக் கொண்டனர்.

    மற்ற பெட்ரோல் பங்க்கில் உள்ள பெட்ரோலுக்கும், அங்குள்ள பெட்ரோலுக்கும் நிறத்திலும், திட தன்மையிலும் வித்தியாசம் இருந்தது.

    இதனால் போலீசார் அங்கு சேகரிக்கப்பட்ட பெட்ரோலை பரிசோ தனைக்காக சென்னைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

    மேலும் அந்த பெட்ரோல் பங்க்கில் தற்காலிகமாக பெட்ரோல் வினியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. 

    • மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 44 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின.

    மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மொத்தம் 84 பள்ளிகளில் பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் 20703 பேர் தேர்வு எழுதினர். இதில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    இதில் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 44 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். 

    • சின்னஏரிக்கரை பகுதியில் வந்த போது திருப்பத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.
    • விபத்தில் நாராயணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காரப்பட்டு அடுத்துள்ள காமாட்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது55). சாலை பணியாளராக பணியாற்றி வந்த இவர் இருசக்கர வாகனத்தில் தனது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சின்னஏரிக்கரை பகுதியில் வந்த போது திருப்பத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் நாராயணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாயி பெருமாள் யானைகள் தாக்கியதில் பலியாகி உள்ளார்.
    • கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் 4 பேரை தாக்கி கொன்றுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே காட்டுகொல்லை கிராமத்திற்குள் வந்த இந்த யானைகள் ராம்குமார் (27) என்பவரை தாக்கி கொன்றன.

    அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் ( ஏப்ரல்) 21-ந் தேதி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டடி ஏரிகொட்டாள்ய் இருளர் காலனியை சேர்ந்த காளியப்பன் (வயது 70) என்பவரை இந்த யானைகள் தாக்கி கொன்றன.

    தொடர்ந்து கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய மொரசுப்பட்டி யை சேர்ந்த வேடி (55) என்ற விவசாயியை இந்த யானைகள் தாக்கி கொன்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலையை சேர்ந்த விவசாயி பெருமாள் யானைகள் தாக்கியதில் பலியாகி உள்ளார். கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்த 2 யானைகளும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் 4 பேரை தாக்கி கொன்றுள்ளன. 

    • மழைக்காலங்களில் கழிவு நீர் வெளியேறுவதால் தொற்று நோய்களும் துர்நாற்றமும் ஏற்படுகிறது.
    • அப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க ஆய்வு செய்தனர்.

    காவேரிபட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் ஒன்றியம் ஏர்ரஅள்ளி ஊராட்சி அண்ணா நகர் , ஸ்ரீராமுலு நகர் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து மழைக்காலங்களில் கழிவு நீர் வெளியேறுவதால் தொற்று நோய்களும் துர்நாற்றமும் ஏற்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட அவை தலைவர் நாகராஜ் மற்றும் ஏர்ர அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தமிழரசன் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்பு அப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க ஆய்வு செய்தனர்.

    அப்போது உடன் ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கர்நாடக மாநிலத்தில் 2023 சட்டபேரவை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • 12 டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று 8-ந்தேதி மாலை 6 மணி முதல் 10-ந்தேதி அன்று நள்ளிரவு வரை மூடப்படும் என கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி:

    கர்நாடக மாநிலத்தில் 2023 சட்டபேரவை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.

    அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா ஒட்டியுள்ள நாச்சிக்குப்பம், கர்னூர், கோட்டயூர், தளி, ஜவளகிரி, சொக்காபுரம், பேரிகை, முகலப்பள்ளி, பாகலூர் மற்றும் கக்கனூர் கிராமங்களில் அமைந்துள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 12 டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று மாலை 6 மணி முதல் 10-ந்தேதி அன்று நள்ளிரவு வரை மூடப்படும் என கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

    • விபத்தில் அப்துல் பாட்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேட்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாட்ஷ (வயது55).

    கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 11 பேருடன் காரில் கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றார். அப்போது அந்த கார் வேலூர்-கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதியான பர்கூர் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அப்துல் பாட்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்தில் அப்துல் பாஷாவின் மனைவி வானா கவுசர் (45), அல்டாப் (22), அப்துல் பாஷா, பாத்திமா முனிஷா (55), முகமது அனிஷ் (30) உள்பட 10 பேரும் காயம் அடைந்தனர்.

    அவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 93.20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.
    • காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் மழை நீர் நிரம்பி சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தும் வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் கிருஷ்ணகிரியில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து நேரம் செல்ல செல்ல சுமார் 3 மணி நேரம் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதேபோன்று நேற்று மாலை முதல் இன்று காலை விடிய, விடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் சாலைகள் வெள்ளக்காடானது. குறிப்பாக 5 ரோடு ரவுண்டானா அருகில் முட்டு அளவுக்கு தண்ணீர் சென்றது. மேலும் சென்னை சாலையில் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    மேலும் நகரில் பெரும்பாலான இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. தொடர்ந்து இரவும் கிருஷ்ணகிரி நகரில் மழை விடாமல் பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் அஞ்செட்டி, பாரூர், தேன்கனிக்கோட்டை, நெடுங்கல், பெனுகொண்டாபுரம், போச்சம்பள்ளி, சூளகிகரி, ஊததங்கரை, சின்னாறு டேம், கே.ஆர்.பி. அணை என பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட தேர்பேட்டை சாலை 2-வது குறுக்கு தெரு முதல் 5-வது தெரு வரை உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்தது. மேலும் விஷஜந்துகளும் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதேபோன்று காவேரிபட்டணம் பகுதியிலும் கனமழை பெய்தது. இதில் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் மழை நீர் நிரம்பி சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. கிருஷ்ணகிரி, நெடுங்கல், கே.ஆர்.பி. அணை பகுதியில் கனமழை கொட்டியதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 93.20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அஞ்செட்டி-6.50, பாரூர்-14.60, தேன்கனிக்கோட்டை-2, ஓசூர்-3.10, , கிருஷ்ணகிரி-93.20, நெடுங்கல்-25, பெனுகொண்டாபுரம்-14.30, போச்சம்பள்ளி-16, ராயக்கோட்டை-5, சூளகிரி-21, ஊத்தங்கரை-22.20, சின்னாறு அணை-19, கெலவர ப்பள்ளி அணை-6, கே.ஆர்.பி. அணை-57, பாம்பாறு அணை-39 என மாவட்டம் மொத்தம் முழுவதும் 343.90 மி.மீ பதிவாகி உள்ளது.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மோதியது.
    • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த தா.அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் லட்சுமணன் (வயது31).

    இவருக்கும் புளியம்பட்டியைச் சேர்ந்த நதியா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இதில் நதியா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு தாய்வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இந்த நிலையில் லட்சுமணன் தனது கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக நேற்று மாலை புளியம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவர் மணியம்பாடி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • படிப்பிற்கு பொருளாதாரம் ஒரு போதும் தடையில்லை.
    • மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சீனிவாச நகரில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

    முதலாவதாக சிறப்பு விருந்தினர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    இளம் அறிவியல் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை பயிலும் மாணவப் பேரவைச் செயலர் திருமலைச்செல்வி வரவேற்புரை வழங்கினார். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து சிறப்பு செய்தார்.

    அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சீனி. திருமால் முருகன் இறுதியாண்டு மாணவிகள் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஈடுபாட்டுடன் கல்வியோடு பிற துறைகளிலும் செயல்படுவதை கூறி மேலும் படிப்பிற்கு பொருளாதாரம் ஒரு போதும் தடையில்லை. வாழ்வில் உயர ஆயிரம் கரங்கள் உண்டு, குடும்ப சூழ்நிலை, சமூகநிலை என எந்நிலையில் இருந்தாலும் திறமையினால் வெற்றி பெற முடியும். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது என்று மாணவிகளை ஊக்கப்படுத்தி வாழ்த்துரை வழங்கினார் .

    அதன்பின் மாணவிகள் பயிலும் காலங்களில் ஏற்பட்ட நல்மாற்றங்களையும் கல்லூரி அனுபவத்தையும் பின்னோட்டமாக வழங்கினார்கள். கணிதவியல் துறை மூன்றாமாண்டு பயிலும் மாணவப் பேரவைத் தலைவி நிவேதா நன்றியுரை ஆற்றினார். 

    • ஜோதிபுரத்தில் உள்ள சாலை, குடிநீர் பொது கழிப்பிடம் புனரமைக்க வேண்டும் .
    • அப்பகுதியில் குடிநீர், சாலை, மற்றும் பொது கழிப்பிடத்தை, புனரமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் பேரூராட்சி ஜோதிபுரத்தில் உள்ள சாலை, குடிநீர் பொது கழிப்பிடம் புனரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமாரிடம் மனு அளித்தனர்.

    இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் குடிநீர், சாலை, மற்றும் பொது கழிப்பிடத்தை, புனரமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், பேரூராட்சி உறுப்பினர் அமுதா பழனி மற்றும் ஜோதிபுரம் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    • கோடை விடுமுறைக்காக ஈரோட்டில் உள்ள தனது அக்கா வீட்டில் சென்று இருந்து வந்தார்.
    • மாணவியின் தாய் பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள செங்கோடி சின்ன அள்ளி பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் ராயக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கோடை விடுமுறைக்காக ஈரோட்டில் உள்ள தனது அக்கா வீட்டில் சென்று இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று சொந்த ஊருக்கு மாணவியும், இவரது தாயும் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.

    அப்போது கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற மாணவி மாயமானார்.

    மாணவியின் தாய் பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள செல்லூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவருடைய தாய் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருடைய தாயுடன் திருப்பூரில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் மாணவி 11-ம் வகுப்பு படித்து வந்தார். ேகாடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சிறுமி திடீரென காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    ×