என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி பங்கில்  பெட்ரோலுடன் தண்ணீர் கலந்துள்ளதாக  புகார்
    X

    கிருஷ்ணகிரி பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்துள்ளதாக புகார்

    • மற்ற பெட்ரோல் பங்க்கில் உள்ள பெட்ரோலுக்கும், அங்குள்ள பெட்ரோலுக்கும் நிறத்திலும், திட தன்மையிலும் வித்தியாசம் இருந்தது.
    • போலீசார் அங்கு சேகரிக்கப்பட்ட பெட்ரோலை பரிசோ தனைக்காக சென்னைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.

    இவர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி ஒரு பெட்ரோல் பங்கில் தனது மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டார். அவர் பெட்ரோல் பங்க்கில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் நின்றது.

    இதையடுத்து நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள் இயங்காததால் அவர் பழுது பார்க்கும் கடைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அண்ணாமலை நேற்று காலை அந்த பெட்ரோல் பங்க்கிற்கு வந்து தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வதாக கூறினார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து டவுன் போலீசார் அங்கு வந்து பெட்ரோலை பாட்டிலில் பிடித்து பார்த்தனர்.

    அப்போது பெட்ரோல் நிறம் வித்தியாசமாக இருப்பதை அறிந்த போலீசார் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அந்த பெட்ரோலை எடுத்துக் கொண்டனர்.

    மற்ற பெட்ரோல் பங்க்கில் உள்ள பெட்ரோலுக்கும், அங்குள்ள பெட்ரோலுக்கும் நிறத்திலும், திட தன்மையிலும் வித்தியாசம் இருந்தது.

    இதனால் போலீசார் அங்கு சேகரிக்கப்பட்ட பெட்ரோலை பரிசோ தனைக்காக சென்னைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

    மேலும் அந்த பெட்ரோல் பங்க்கில் தற்காலிகமாக பெட்ரோல் வினியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×