என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி சாலை பணியாளர் சாவு
- சின்னஏரிக்கரை பகுதியில் வந்த போது திருப்பத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.
- விபத்தில் நாராயணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காரப்பட்டு அடுத்துள்ள காமாட்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது55). சாலை பணியாளராக பணியாற்றி வந்த இவர் இருசக்கர வாகனத்தில் தனது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சின்னஏரிக்கரை பகுதியில் வந்த போது திருப்பத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் நாராயணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






