என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில்குமாரிடம் மனு அளித்த காட்சி.
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் மனு
- ஜோதிபுரத்தில் உள்ள சாலை, குடிநீர் பொது கழிப்பிடம் புனரமைக்க வேண்டும் .
- அப்பகுதியில் குடிநீர், சாலை, மற்றும் பொது கழிப்பிடத்தை, புனரமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் பேரூராட்சி ஜோதிபுரத்தில் உள்ள சாலை, குடிநீர் பொது கழிப்பிடம் புனரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமாரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் குடிநீர், சாலை, மற்றும் பொது கழிப்பிடத்தை, புனரமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், பேரூராட்சி உறுப்பினர் அமுதா பழனி மற்றும் ஜோதிபுரம் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story






