என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வேலை செய்யும் தொழிலாளர்கள் கூத்தனப்பள்ளிக்கு சென்று ராமகிருஷ்ணப்பா இருக்கும் வீட்டின் கதவை தட்டினர்.
    • ஜன்னல் வழியாக பார்த்தபோது ராமகிருஷ்ணப்பா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாருதிபடவேணா பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா (வயது52).

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அளேசீபம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலி வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் கூத்தனப்பள்ளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

    ராமகிருஷ்ணப்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையை முடித்து விட்டு தங்கி இருக்கும் அறைக்கு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வேலைக்கு வரவில்லை.

    உடனே உடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூத்தனப்பள்ளிக்கு சென்று ராமகிருஷ்ணப்பா இருக்கும் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் அவர் வெளியே வரவில்லை. உடனே ஜன்னல் வழியாக பார்த்தபோது ராமகிருஷ்ணப்பா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து அவர்கள் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து ராமகிருஷ்ணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணப்பா குடும்ப தகராறு காரண மாக தூக்குபோட்டு கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற் காக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் பர்துல் அர்சித்தா என்ற மாணவி 600-க்கு 593 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
    • தொடர்ந்து இப்பள்ளி 17 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் 2023-2024 கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பர்துல் அர்சித்தா என்ற மாணவி 600-க்கு 593 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ம் இடமும், போச்சம்பள்ளி தாலுக்கா அளவில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    மேலும் இயற்பியலில் 100-100-க்கு 3 மாண வர்களும், வேதியலில் 100-100 3 மாணவர்களும், கணிதத்தில் 100-100 3 மாணவர்களும் தமிழ், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களிலும் 100-90 மதிப்பெண்களை பெற்று மாணவர்கள் 100 சதவீதம் பெற்று சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி இயக்குனர் அமுதினி, தாளாளர் ராசேந்திரன், முதல்வர் சூரியமூர்த்தி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவற்றிற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி இயக்குனர், தாளாளர் பாராட்டினர்.

    தொடர்ந்து இப்பள்ளி 17 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இப்பள்ள்யில் நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன. 2023-2024 ஆண்டிற்கான எல்.கே.ஜி. முதல் 11- வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    • ஒரு கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்கிற “தொண்டர்களாய் ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • தி.மு.க. அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.விடம், நகர செயலாளர் நவாப் ஒப்படைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளையொட்டி ஒரு கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்கிற "தொண்டர்களாய் ஒன்றிணைவோம்" என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதில் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில் 65 சதவீத உறுப்பினர் படிவங்களை நேற்று மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.விடம், நகர செயலாளர் நவாப் ஒப்படைத்தார்.

    அப்போது மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினரும், நகராட்சி தலைவருமான பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர் சித்ரா சந்திரசேகர், நகர அவைத்தலைவர் மாதவன், துணை செயலாளர்கள் பொன்.குணசேகரன், அரங்கண்ணல், மாவட்ட பிரதிநிதி ஜான்டேவிட்ராஜ், நகர பொருளாளர் கனல் சுப்பிரமணி நகர மன்ற உறுப்பினர் வேலுமணி, வட்ட செயலாளர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கார்த்திக் விஜய் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்ற மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • பள்ளியின் தாளாளர் கூத்தரசன் பங்கேற்று, மாண வர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி, மே.9-

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் 2022-23ம் கல்வியாண்டில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.

    இதில், கார்த்திக் விஜய் என்ற மாணவர் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்ற மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    கிரேஸ் கிருஸ்டி 594, துளசிஸ்ரீ 594 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுவாதி 593 மற்றும் சந்தியா 593 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், முகேஷ்வர் 592 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், கவிப்பிரியா 590 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்று உள்ளனர்.

    இந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இதில் பள்ளியின் தாளாளர் கூத்தரசன் பங்கேற்று, மாண வர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், வேப்பனஹள்ளி முதல்வர் அன்பழகன், துணை முதல்வர் ஜலஜாஷி, திருப்பத்தூர் பள்ளியின் துணை முதல்வர் பூங்கா வனம், நிர்வாக அலுவலர் கவுரிசங்கர், பள்ளியின் பொறுப்பாளர் யுவராஜ், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இப்பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 20 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோடை காலத்தில் வனப்பகுதியில் தீ விபத்தைத் தடுக்க 270 கிமீ தூரம் தீத்தடுப்பு பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • இதைமீறி அய்யூர் வனப்பகுதியில் கடந்த மாதம் சுமார் 15 ஏக்கரில் தீ பரவியுள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் 1,501 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு 468 வகையான தாவர இனங்கள், 36 வகையான பாலூட்டிகள், 272 வகையான பறவையினங்கள், 172 வகையான வண்ணத்துப் பூச்சி வகைகள் உள்ளன.

    குறிப்பாக அய்யூர் முதல் பெட்டமுகிலாளம் வரை 14 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் உள்ளிட்ட மரவகைகளும், அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெரு மைகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்பு திண்ணிகள், சிறுத்தைகள், மயில்கள் மற்றும் அரிய வகையான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகுகள் வசிக்கின்றன.

    அய்யூரில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்துக்கு அதிக அள விலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அய்யூர் சுற்றுச்சூழல் மையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள சாமி ஏரி, தொளுவபெட்டா வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதில், அப்பகுதியில் இருந்த மரங்கள் எரிந்தன. மேலும், வன உயிரினங்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறுகையில் அய்யூர் வனப்பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் இப்பகுதியில் சிறிய தீ விபத்து ஏற்படும். அதை உடனடியாக வனத்துறையினர் கட்டுப்படுத்தி விடுவர்.

    தற்போது, வன ஊழியர்கள் பற்றாக்குறை யால் வனப்பகுதியில் கண்காணிப்புப் பணி குறைந்துள்ளது. இதனால், வனக் குற்றங்களைதடுக்க முடியவில்லை. தற்போது, காட்டுத் தீயில் அரிய வகை வன உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என்றனர்.

    ஓசூர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறுகையில் கோடை காலத்தில் வனப்பகுதியில் தீ விபத்தைத் தடுக்க 270 கிமீ தூரம் தீத்தடுப்பு பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைமீறி அய்யூர் வனப்பகுதியில் கடந்த மாதம் சுமார் 15 ஏக்கரில் தீ பரவியுள்ளது.

    இதற்குக் காரணம் மனிதர்கள் வைத்த தீயா அல்லது காட்டுத் தீ பரவியதா என கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும், எத்தனை வன உயிரினங்கள் உயிரிழந்தது என்பதும் தெரியவில்லை. இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேறு ஒரு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு காரணமான 3 பேரைக் கைது செய்து அபராதம் விதித்துள்ளோம் என்றார்.

    • திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்கள் வயலூர் கிருஷ்ணமூர்த்தி, பையூர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரி ப்பட்டணம் அகரம் கூட்ரோட்டில் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலை வர் தட்ர அள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவேரி ப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

    கூட்டத்திற்கு நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, அகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, ரமேஷ், சண்முகம், கோவிந்தசாமி, பெரியசாமி, சுப்பிரமணி, தங்கராஜ், துரைசாமி, மணியரசு, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்கள் வயலூர் கிருஷ்ணமூர்த்தி, பையூர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார் .

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா மணி , மாதவி முருகேசன், மகேஸ்வரி சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில்-8648 பேரும், மாணவிகள் 9760 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 18498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பயிலும் 10061 மாணவர்கள், 10642 மாணவிகள் என மொத்தம் 20703 பேர் எழுதினர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடிவுகள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில்-8648 பேரும், மாணவிகள் 9760 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 18498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 88.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த 1.5 சதவீதம் பேர் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • பர்கூர் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது.
    • அப்துல் பாட்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேட்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாட்ஷ (வயது55).

    கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 11 பேருடன் காரில் கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றார்.

    அப்போது அந்த கார் வேலூர்-கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதியான பர்கூர் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அப்துல் பாட்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்தில் அப்துல் பாஷாவின் மனைவி வானா கவுசர் (45), அல்டாப் (22), அப்துல் பாஷா, பாத்திமா முனிஷா (55), முகமது அனிஷ் (30) உள்பட 10 பேரும் காயம் அடைந்தனர்.

    அவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 18498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கடந்த ஆண்டு 88.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பயிலும் 10061 மாணவர்கள், 10642 மாணவிகள் என மொத்தம் 20703 பேர் எழுதினர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடிவுகள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் -8648 பேரும், மாணவிகள் 9760 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 18498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 88.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த 1.5 சதவீதம் பேர் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • கடந்த 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், ஒருவருக்கு கூட வங்கிக்கணக்கு இல்லை.
    • பா.ஜ.க. அரசில் ஒவ்வொரு வாக்காளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு உள்ளது.

    ஓசூர்,

    பா.ஜனதா கட்சியின் அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண்டல அளவில் அமைப்புசாரா பிரிவினருக்கு களப்பணி யாற்ற வந்துள்ளோம்.தேசிய அளவில் மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களித்து வருகிறார்கள்.

    இன்னும் 40 ஆண்டுகள் யாரும் பிரதமர் மோடியை அசைக்க முடியாது. சுயநலமற்ற,ஒரு தூய்மையான,நேர்மையான சாமானிய மக்களுக்கு வளர்ச்சிப்பாதையை காட்டக்கூடிய கட்சியாக பா.ஜ.க விளங்குகிறது.

    மத்திய அரசினால், ஓசூர் பகுதி தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசு தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளது.

    கடந்த 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், ஒருவருக்கு கூட வங்கிக்கணக்கு இல்லை.ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசில் ஒவ்வொரு வாக்காளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு உள்ளது.

    இதன் மூலம் நல உதவிகளை அனைவரும் பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு, அவர் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவின் மாநில துணைத்தலைவர் பஸ்தி சீனிவாஸ்,மாநில செயலாளர்கள் சோமா சந்திரசேகர்,பாலாஜிராமன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • வள்ளலார் 200 முப்பெரும் விழா, நேற்று நடைபெற்றது,
    • விழாவையொட்டி, சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில், இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில், வள்ளலார் 200 முப்பெரும் விழா, நேற்று நடைபெற்றது,

    ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை பரப்புரை மேற்கொண்ட சன்மார்க்க சங்க அடியார்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.

    முன்னதாக வள்ள லாரின் சிறப்பை விளக்கும் வகையில், ஓசூர் பண்டாஞ்சநேயர் கோயில் அருகிலிருந்து விழா மண்டபம் வரை பேரணி நடைபெற்றது.

    மேலும் விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா, சப்- கலெக்டர் சரண்யா, இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் குமரேசன், ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, தாசில்தார் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி, சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் தரத்தினை உறுதி செய்ய வேண்டும்
    • அனைத்து துறை அலுவலர்களும் நீர் ஆதாரங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ஜல் சக்தி அபியான் 2023 குடிநீர் ஆதாரங்கள் கண்டறிதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்கள் கண்டறிந்து பாதுகாத்தல், ஆழப்படுத்துதல் தொடர்பான திட்ட அறிக்கைகளை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    அனைத்து திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்குவது புவி குறியீடு புகைப்படம் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி உள்ளிட்ட அனைத்து துறை நிதி ஆதாரங்கள் மூலம் குடிநீர் தொடர்பான பணிகளான குழாய் மூலம் குடிநீர் வழங்குதல், சர்வே பணிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    நிலத்தடி நீரை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். நீர் கட்டமைப்புகளை புதுப்பித்தல், நீர் நிலைகளை ஆழப்படுத்துதல், மேம்படு த்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கரைகளை மேம்படுத்துதல், தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    நீர் நிலைகளை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், குப்பைகளை நீர்நிலைகளில் போடுவதை தடை செய்ய வேண்டும். பருவ மழைக்கு முன் மற்றும் பின் வேதியியல், உயிரியியல் ரீதியாக குடிநீர் தரத்தினை கண்காணிக்க வேண்டும்.

    வருகிற ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் ஜல் சக்தி அபியான் திட்டப் பணிகள் திட்டம் தயாரித்தல் மற்றும் மேற்கொள்ளுதல் வேண்டும். வருகிற அக்டோபர் மாதத்திற்குள் நீர் ஆதாரங்களை ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். நவம்பர் மாத இறுதிக்குள் பொதுமக்களுக்கு சிறப்பு கிராம சபை மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேலும், அனைத்து துறை அலுவலர்களும் நீர் ஆதாரங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும். கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அதிக அளவில் செடிகள் நடவு செய்து, புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தோட்டக்கலைத்துறை, கல்வித் துறை மற்றும் நேரு யுவகேந்திரா துறை அலுவலர்கள் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்மேலாண்மை தொடர்பான போதிய விளம்பரம் செய்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து, அவர்களை திட்ட பணிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன் மறறும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×