என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க. மாநில தலைவர் பேட்டி"

    • கடந்த 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், ஒருவருக்கு கூட வங்கிக்கணக்கு இல்லை.
    • பா.ஜ.க. அரசில் ஒவ்வொரு வாக்காளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு உள்ளது.

    ஓசூர்,

    பா.ஜனதா கட்சியின் அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண்டல அளவில் அமைப்புசாரா பிரிவினருக்கு களப்பணி யாற்ற வந்துள்ளோம்.தேசிய அளவில் மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களித்து வருகிறார்கள்.

    இன்னும் 40 ஆண்டுகள் யாரும் பிரதமர் மோடியை அசைக்க முடியாது. சுயநலமற்ற,ஒரு தூய்மையான,நேர்மையான சாமானிய மக்களுக்கு வளர்ச்சிப்பாதையை காட்டக்கூடிய கட்சியாக பா.ஜ.க விளங்குகிறது.

    மத்திய அரசினால், ஓசூர் பகுதி தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசு தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளது.

    கடந்த 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், ஒருவருக்கு கூட வங்கிக்கணக்கு இல்லை.ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசில் ஒவ்வொரு வாக்காளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு உள்ளது.

    இதன் மூலம் நல உதவிகளை அனைவரும் பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு, அவர் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவின் மாநில துணைத்தலைவர் பஸ்தி சீனிவாஸ்,மாநில செயலாளர்கள் சோமா சந்திரசேகர்,பாலாஜிராமன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    ×