என் மலர்
கிருஷ்ணகிரி
- படைப்பணிச் சான்று நகல் 2, மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும், இது குறித்து விவரம் பெற 04343- 236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர் வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான தையற்பயிற்சி மற்றும் எம்பிராய்டரிக்கான பயிற்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறையின் வழியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் சேர, முன்னாள் படைவீரர்கள் (18 வயது முதல் 40 வயதிற்குட்டவர்கள் மட்டும்), முன்னாள் படைவீரர் மற்றும் படைவீரரின் மனைவி மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு மட்டும் (18 வயது முதல் 40 வயதக்குட்பட்டவர்கள் மட்டும்) தகுதியானவர்கள் ஆவர்.
இப்பயிற்சியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி, ஆதார் அட்டை நகல் 2, வங்கி கணக்கு புத்தக நகல் 2, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, படைப்பணிச் சான்று நகல் 2, மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இது குறித்து விவரம் பெற 04343& 236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய கற்கால கலாசாரத்தில் இருந்து இரும்பு கால கலாசாரம் வளர்ந்த விதத்தை மயிலாடும்பாறை அகழாய்வு எடுத்துக் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
- மாணவி களுக்கு அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டினை படியெடுத்து படிக்க பயிற்சி அளித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 12-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை 15 நாட்கள் கல்லூரி மாணவிகளுக்கான அருங்காட்சியகவியல் மற்றும் தொல்லியல் உள்விளக்க பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மற்றும் ஊத்தங்கரை அதியமான் கல்லூரிகளில், முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவிகள் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
தொடக்க நாளான நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆர்வலர் மனோகரன் ஆகியோர், மாவட்டத்தின் வரலாற்று சிறப்புகள் குறித்து எடுத்து கூறினார்கள்.
முதல் நாள் பயிற்சியில், மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பா ட்சியர் கோவிந்தராஜ், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்றால் என்ன? வரலாற்றுக் காலம் என்றால் என்ன? இரண்டுக்குமான அடையாளங்கள் என்ன என்பது குறித்து விளக்கி கூறினார்.
இரண்டாம் நாளான நேற்று, பழங்கற்காலம், இடைக்கற்காலம் மற்றும் புதிய கற்காலம் ஆகியவை குறித்து விளக்கினார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய கற்கால சான்றுகளைக் கொண்டுள்ள முதன்மையான மாவட்டம் என்றும், புதிய கற்கால கலாசாரத்தில் இருந்து இரும்பு கால கலாசாரம் வளர்ந்த விதத்தை மயிலாடும்பாறை அகழாய்வு எடுத்துக் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து மாணவி களுக்கு அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டினை படியெடுத்து படிக்க பயிற்சி அளித்தார்.
இனிவரும் நாட்களில், பிராமி வட்டெழுத்து, கிரந்தம் தமிழ் எண்கள் போன்றவற்றை எழுத, படிக்க கற்றுத் தரப்படும் என்றும், கள ஆய்வாக சின்னகொத்தூர் போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக காப்பாட்சியர் தெரிவித்தார்.
- ஒரு நாளைக்கு 7,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து சென்று வருகின்றன.
- இந்த சாலையை இரண்டாக பிரித்து சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியானது ஒன்றியமாகவும், தாலுகா வாகவும், ஊராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.
மேலும் சூளகிரி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள், 417 கிராமங்கள் உள்ளன. சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், வங்கிகள், அரசு மருத்துவமனை, சார்பதிவகம் என அனைத்து அலுவலங்கள், பள்ளிகள் என அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சூளகிரி ஊராட்சி பகுதிக்கு உள்பட்ட சாலையில் ஒரு நாளைக்கு 7,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து சென்று வருகின்றன.
மேலும் இந்த பகுதியில் விபத்து, வாகன நெரிசல் போன்ற வற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி யடைந்து வருகின்றனர்.
இதனால் ஒசூர்- கிருஷ்ணகிரி சாலை, ஓசூர்- கும்பளம் சாலையில் உள்ள சாலை ஆக்கிரம்பிப்புகளை அகற்றி, இந்த சாலையை இரண்டாக பிரித்து சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் .
ே
இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்களுக்கு பொதுமக்கள், மாணவர்கள், ஊழியர்கள் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- கொசுகளால் பாதிக்கபட்டவர் யாரேனும் இருப்பின் ஊராட்சி நிர்வாகிகள், சுகாதார துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்
- கூட்டத்திற்கு சூளகிரி ஒன்றிய குழுசேர்மன் லாவன்யா ஹேமநாத் தலைமை வகித்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சூளகிரி ஒன்றிய குழு உறுப்பினர் களுக்கான சாதாரன கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய திட்ட பணிகள், சுகாதாரம், சுத்தமான குடிநீர், கழிவு நீர் கால்வாய் சுத்தபடுத்துதல்,பற்றி விவாதிக்கபட்டது. மேலும் பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்து வருகிறது.
இதனால் கிராமங்களில் உள்ள தொட்டிகள், உடைந்த பானைகள், சிரட்டைகளில் மழை நீர் தேங்காமல் இருக்க ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் சுகாதா ரத்துறையினர் கண்கானித்து டெங்கு கொசு வளராமல் பாதுகாக்க வேண்டும்.
வீடு தேடி வருபவர்களுக்கு கொசுக்களை ஒழிக்க உதவி புரிய வேண்டும், கொசுகளால் பாதிக்கபட்டவர் யாரேனும் இருப்பின் ஊராட்சி நிர்வாகிகள், சுகாதார துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என உத்தர வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு சூளகிரி ஒன்றிய குழுசேர்மன் லாவன்யா ஹேமநாத் தலைமை வகித்தார்.
மேலும் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், கோபால கிருஷ்ணன், பணி மேற்ப்பார்வையார் விஜயா, தனம், நஞ்சாரெட்டி, பொறியாளர் சுமதி, சியாமா,வெங்கடேஷ், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஷ், டெங்சிங், ஜேம்ஸ் சுகாதார மேற்பார்வையாளர் , மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மறுறும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மண்ணின் இறுக்கம் குறைந்து மழை நீர் எளிதில் ஊடுருவி நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப்படுகின்றது.
- மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடை உழவு செய்வதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் வேர்கள் எளிதில் வளர்வதுடன் சத்துக்கள் எளிதாக பயிருக்கு கிடைப்பதால் நன்கு வளர்ச்சி அடைகின்றன.
தற்போது சூளகிரி வட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த மழையை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் தவறாமல் கோடை உழவு செய்து கொள்ளுமாறும் அதானால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நன்கு ஆழமாக உழவு செய்யும்போது கீழ் பகுதியில் உள்ள மண் மேலாகவும், மேலே உள்ள மண் கீழாகவும் மாறும்போது மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக பரவுவதால் சத்துப் பற்றாக்குறை பிரச்சினை குறைகிறது.
கோடை உழவு செய்வதனால் மண்ணின் அடியில் உள்ள வேர்களை தாக்கும் மற்றும் நோய்களை உண்டாக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்புழுக்கள் ஆகியவை வெளியே கொண்டுவரப்பட்டு சூரியஒளி மற்றும் வெப்பம் காரணமாக கொள்ளப்படுகின்றன.
மேலும் மண்ணிலிருந்து வெளி வரும் சிறு பூச்சிகள்,கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை பறவைகள் கொத்தி தின்று அவைகளை அழித்து விடுவதால் அடுத்து சாகுபடி செய்யும் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்த ஏதுவாகின்றது.
மண்ணின் இறுக்கம் குறைந்து மழை நீர் எளிதில் ஊடுருவி நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப்படுகின்றது.
மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது.
மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. மண்ணில் உள்ள களைகளின் விதைகள் முளைத்து செடிகளாக வளர்கிறது.
மறு உழவு செய்யும் போது களை செடிகள் மடக்கி உழப்பட்டு மீண்டும் களைகள் வராமல் தடுக்க படுவதால் களை மேலாண்மைக்கான செலவு மற்றும் நேரம் சேமிக்கபடுகின்றது. களை செடிகள் இயற்கை எருவாக்கப்படுகிறது.
மேற்கூறியவற்றை கடைபிடித்தால் எளிதில் விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம்.
இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
- போலீசார் ஜோதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.800-யை பறிமுதல் செய்தனர்.k
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீசார் ஜோதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.
உடனே போலீசார் அங்கு சென்றபோது சிலர் தப்பிஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் ஊத்தங்கரை நஞ்சகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (வயது24), மணிகண்டன் (27) ஆகிய 2 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.800-யை பறிமுதல் செய்தனர்.
- சிறுவனுக்கு மேலும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மன வருத்ததில் இருந்து வந்தார்.
- வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேவீரபள்ளி அண்ணாநகரைச் சேர்ந்தவர் கமலேஷ் ஷா (வயது36). இவரது மகன் கிஷன்குமார் (17). இந்த சிறுவனுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவதிக்குள்ளானர். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது சிறுவனுக்கு மேலும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மன வருத்ததில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை கமலேஷ் பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகையை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
- மாணவர்கள் கல்வியில் மென்மேலும் உயர்ந்து இந்த சமுதாயத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. மேலும் கல்வி பணியிலும் சேவையாற்றி வருகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிகேப்பள்ளியில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த வருடம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.32 ஆயிரத்து 900 மதிப்பில் ஸ்மார்ட் 43 இன்ஞ் டி.வி. மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 130 மதிப்பில் ஒலியமைப்பு என மொத்தம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகையை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் கல்வியில் மென்மேலும் உயர்ந்து இந்த சமுதாயத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் இதுவரை ஐ.வி.டி.பி. நிறுவனத்தின் மூலம் இந்த பள்ளிக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவிகள் வழங்கப்பட்டு ள்ளதாக தெரிவித்தார்.
- ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தங்களின் அரசு பணி கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் வராண்டா ரேஸ் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் இப்பயிற்சி மையமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தங்களின் அரசு பணி கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையம் தொடங்கி ஓராண்டுக்குள் பலரை அரசு பணியாளர்களாக உருவாக்கி உள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள இந்த சூழலில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று, அரசு பணியாளராக பொறுப்பேற்று மக்களுக்கு சேவை செய்திட வேண்டும் என்றார்.
மேலும் போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ., ராஜேந்திரன், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பர்கூர் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், வெற்றி ச்செல்வன், மாதையன், சர்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தனபால் வரவேற்றார். முடிவில், வராண்டா ரேஸ் பயிற்சி மையத்தின் கிளை மேலாளர் கலையரசன் நன்றி கூறினார்.
- கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.
- கலெக்டர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இவ்விழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் இரவு திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.
- முன்னதாக, ஆலயத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சென்னை சாலை சுண்டம்பட்டி புதுவை நகரில் உள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய 53-ம் ஆண்டு தேர்த் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இந்த தேர் திருவிழாவில், நாள்தோறும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால், நவநாள் ஜெபங்களுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தன. இவ்விழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் இரவு திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஆலயத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பின்னர் புனிதர் அந்தோணியாரின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. வாணவேடிக்கையுடன் தொடங்கிய தேர் பவனியை பங்குத்தந்தை ஜார்ஜ், புனித நீர் தெளித்து, மந்திரித்து தொடங்கி வைத்தார். இதில், சுண்டம்பட்டி, கந்திகுப்பம், புதுவை நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக வந்த இந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.
- தீர்த்தக் குளங்கள் காணவில்லை.
- அனைத்து கோவில்களிலும் பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் கலைகோபி மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் சரயுவிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள புராதானமான வரலாற்று சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாமன்னர்கள் கட்டிய கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் உள்ளன. அனைத்து கோவில்களிலும் பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிலைகள், ஆபரணங்கள், உண்டியல் காணிக்கைகள் களவாடப்பட்டுள்ளன.
தீர்த்தக் குளங்கள் காணவில்லை. ஆகவே கலெக்டர், கிருஷ்ணகிரி இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் உள்ள கோவில்களை நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






