என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவிகளுக்கான பயிற்சி முகாம்
    X

    கல்லூரி மாணவிகளுக்கான பயிற்சி முகாம்

    • புதிய கற்கால கலாசாரத்தில் இருந்து இரும்பு கால கலாசாரம் வளர்ந்த விதத்தை மயிலாடும்பாறை அகழாய்வு எடுத்துக் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
    • மாணவி களுக்கு அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டினை படியெடுத்து படிக்க பயிற்சி அளித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 12-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை 15 நாட்கள் கல்லூரி மாணவிகளுக்கான அருங்காட்சியகவியல் மற்றும் தொல்லியல் உள்விளக்க பயிற்சி முகாம் நடந்து வருகிறது.

    இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மற்றும் ஊத்தங்கரை அதியமான் கல்லூரிகளில், முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவிகள் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

    தொடக்க நாளான நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆர்வலர் மனோகரன் ஆகியோர், மாவட்டத்தின் வரலாற்று சிறப்புகள் குறித்து எடுத்து கூறினார்கள்.

    முதல் நாள் பயிற்சியில், மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பா ட்சியர் கோவிந்தராஜ், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்றால் என்ன? வரலாற்றுக் காலம் என்றால் என்ன? இரண்டுக்குமான அடையாளங்கள் என்ன என்பது குறித்து விளக்கி கூறினார்.

    இரண்டாம் நாளான நேற்று, பழங்கற்காலம், இடைக்கற்காலம் மற்றும் புதிய கற்காலம் ஆகியவை குறித்து விளக்கினார்.

    மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய கற்கால சான்றுகளைக் கொண்டுள்ள முதன்மையான மாவட்டம் என்றும், புதிய கற்கால கலாசாரத்தில் இருந்து இரும்பு கால கலாசாரம் வளர்ந்த விதத்தை மயிலாடும்பாறை அகழாய்வு எடுத்துக் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து மாணவி களுக்கு அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டினை படியெடுத்து படிக்க பயிற்சி அளித்தார்.

    இனிவரும் நாட்களில், பிராமி வட்டெழுத்து, கிரந்தம் தமிழ் எண்கள் போன்றவற்றை எழுத, படிக்க கற்றுத் தரப்படும் என்றும், கள ஆய்வாக சின்னகொத்தூர் போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக காப்பாட்சியர் தெரிவித்தார்.

    Next Story
    ×