என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் வழங்கிய காட்சி.
அரசு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.1.34 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை
- ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகையை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
- மாணவர்கள் கல்வியில் மென்மேலும் உயர்ந்து இந்த சமுதாயத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. மேலும் கல்வி பணியிலும் சேவையாற்றி வருகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிகேப்பள்ளியில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த வருடம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.32 ஆயிரத்து 900 மதிப்பில் ஸ்மார்ட் 43 இன்ஞ் டி.வி. மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 130 மதிப்பில் ஒலியமைப்பு என மொத்தம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகையை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் கல்வியில் மென்மேலும் உயர்ந்து இந்த சமுதாயத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் இதுவரை ஐ.வி.டி.பி. நிறுவனத்தின் மூலம் இந்த பள்ளிக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவிகள் வழங்கப்பட்டு ள்ளதாக தெரிவித்தார்.






