என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை
    X

    சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை

    • சிறுவனுக்கு மேலும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மன வருத்ததில் இருந்து வந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேவீரபள்ளி அண்ணாநகரைச் சேர்ந்தவர் கமலேஷ் ஷா (வயது36). இவரது மகன் கிஷன்குமார் (17). இந்த சிறுவனுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவதிக்குள்ளானர். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது சிறுவனுக்கு மேலும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மன வருத்ததில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை கமலேஷ் பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×