என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரியில் உள்ள, ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
சூளகிரியில் போக்குவரத்து நெரிசல்
- ஒரு நாளைக்கு 7,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து சென்று வருகின்றன.
- இந்த சாலையை இரண்டாக பிரித்து சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியானது ஒன்றியமாகவும், தாலுகா வாகவும், ஊராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.
மேலும் சூளகிரி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள், 417 கிராமங்கள் உள்ளன. சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், வங்கிகள், அரசு மருத்துவமனை, சார்பதிவகம் என அனைத்து அலுவலங்கள், பள்ளிகள் என அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சூளகிரி ஊராட்சி பகுதிக்கு உள்பட்ட சாலையில் ஒரு நாளைக்கு 7,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து சென்று வருகின்றன.
மேலும் இந்த பகுதியில் விபத்து, வாகன நெரிசல் போன்ற வற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி யடைந்து வருகின்றனர்.
இதனால் ஒசூர்- கிருஷ்ணகிரி சாலை, ஓசூர்- கும்பளம் சாலையில் உள்ள சாலை ஆக்கிரம்பிப்புகளை அகற்றி, இந்த சாலையை இரண்டாக பிரித்து சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் .
ே
இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்களுக்கு பொதுமக்கள், மாணவர்கள், ஊழியர்கள் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






