என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குழு உறுப்பினர்கள் கூட்டம்
    X

    சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குழு உறுப்பினர்கள் கூட்டம்

    • கொசுகளால் பாதிக்கபட்டவர் யாரேனும் இருப்பின் ஊராட்சி நிர்வாகிகள், சுகாதார துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்
    • கூட்டத்திற்கு சூளகிரி ஒன்றிய குழுசேர்மன் லாவன்யா ஹேமநாத் தலைமை வகித்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சூளகிரி ஒன்றிய குழு உறுப்பினர் களுக்கான சாதாரன கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் புதிய திட்ட பணிகள், சுகாதாரம், சுத்தமான குடிநீர், கழிவு நீர் கால்வாய் சுத்தபடுத்துதல்,பற்றி விவாதிக்கபட்டது. மேலும் பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    இதனால் கிராமங்களில் உள்ள தொட்டிகள், உடைந்த பானைகள், சிரட்டைகளில் மழை நீர் தேங்காமல் இருக்க ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் சுகாதா ரத்துறையினர் கண்கானித்து டெங்கு கொசு வளராமல் பாதுகாக்க வேண்டும்.

    வீடு தேடி வருபவர்களுக்கு கொசுக்களை ஒழிக்க உதவி புரிய வேண்டும், கொசுகளால் பாதிக்கபட்டவர் யாரேனும் இருப்பின் ஊராட்சி நிர்வாகிகள், சுகாதார துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என உத்தர வழங்கப்பட்டது.

    இந்த கூட்டத்திற்கு சூளகிரி ஒன்றிய குழுசேர்மன் லாவன்யா ஹேமநாத் தலைமை வகித்தார்.

    மேலும் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், கோபால கிருஷ்ணன், பணி மேற்ப்பார்வையார் விஜயா, தனம், நஞ்சாரெட்டி, பொறியாளர் சுமதி, சியாமா,வெங்கடேஷ், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஷ், டெங்சிங், ஜேம்ஸ் சுகாதார மேற்பார்வையாளர் , மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மறுறும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×