என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலாம் ஆண்டு நிறைவு விழா"

    • ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தங்களின் அரசு பணி கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
    • போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் வராண்டா ரேஸ் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில் இப்பயிற்சி மையமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தங்களின் அரசு பணி கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த மையம் தொடங்கி ஓராண்டுக்குள் பலரை அரசு பணியாளர்களாக உருவாக்கி உள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள இந்த சூழலில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று, அரசு பணியாளராக பொறுப்பேற்று மக்களுக்கு சேவை செய்திட வேண்டும் என்றார்.

    மேலும் போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ., ராஜேந்திரன், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பர்கூர் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், வெற்றி ச்செல்வன், மாதையன், சர்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தனபால் வரவேற்றார். முடிவில், வராண்டா ரேஸ் பயிற்சி மையத்தின் கிளை மேலாளர் கலையரசன் நன்றி கூறினார்.

    ×