என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
    • அடிப்படை வசதிகள், வளர்ச்சிபணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூ ராட்சி மன்ற கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

    இதில் செயல்அலுவலர் மனோகரன், துணை தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான், கிருஷ்ணன், ஸ்ரீதர், மணி வண்ணன், லிங்கோஜிராவ், ஜெயந்த், உட்பட 18-வார்டுகவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 18-வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வளர்ச்சிபணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • தொடர்ந்து மாவட்ட திட்டக்குழுமம் ஒரு கண்ணோட்டம் குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது.
    • மாவட்ட திட்டக்குழுவின் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட திட்டக்குழு துணை தலைவரும், கலெக்டருமான சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்டக்குழு அலுவலர் சாந்தா வரவேற்றார்.

    இதில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட கதிரவன், சங்கர், மம்தா, அனிதா, பூதட்டியப்பா, வெங்கடாசலம் என்கிற பாபு, சசிகலா, பழனி, வித்யா, சீனிவாசலு, சுனில்குமார், மணிவண்ணன் ஆகியோர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட திட்டக்குழுமம் ஒரு கண்ணோட்டம் குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும் மாவட்ட திட்டக்குழுவின் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜகோபால், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் பிரச்சன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட ஊராட்சி செயலாளர் சாந்தா, கிருஷ்ணகிரி நகராட்சி பரிதா நவாப், நகர தி.மு.க. செயலாளர் நவாப், ஒன்றிய குழு தலைவர்கள் சீனிவாசலு ரெட்டி, உஷா குமரேசன், சசி வெங்கடசாமி, கேசவமூர்த்தி, நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

    • விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த எம்.சி. ரக 8 டன் எடை கொண்ட பருத்தி ரூ.4 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றன.
    • மத்தூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்து பயன் பெற்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்ட வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

    பருத்தி ஏலத்தை வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தின் துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுந்தரம் உத்தரவின் பேரிலும் பொதுமேலாளர் முருகன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த எம்.சி. ரக 8 டன் எடை கொண்ட பருத்தி ரூ.4 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றன.

    இப்பருத்தி எலத்தில் கொங்கணாபுரம், ஊத்தங்கரை, தருமபுரி, மத்தூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்து பயன் பெற்றனர்.

    இதனை தொடர்ந்து விவசாயிகள் கலந்து கொண்டு வந்த பருத்திக்கான நிர்ணயத் தொகையை விற்பனை சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு உடனடி பணம் பட்டுவடா செய்யப்பட்டது.

    இப்பணியை அலுவலக உதவியாளர் விஜி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • உரிய ஆவணங்க ளுடன் வருகிற ஜூலை 5-ந் தேதிக்குள், விண்ணப்பப் படிவம் பெற்றவர்க ளிடத்திலேயே திரும்ப கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பு களுக்கு விண்ணப் பிப்பவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளி யிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தி.மு.க. தலை வரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, தமிழக உணவுத்துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி ஆலோசனையின்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஒன்றிய, நகர, பேருர் பகுதிகளுக்கு அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்பிற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கிறது.

    இப்பொறுப் பிற்கு விண்ணப் பிக்க விருப்ப முள்ளவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவல கத்திலும், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்க ளிடத்தில் விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்க ளுடன் வருகிற ஜூலை 5-ந் தேதிக்குள், விண்ணப்பப் படிவம் பெற்றவர்க ளிடத்திலேயே திரும்ப கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பு களுக்கு விண்ணப் பிப்பவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள நகல் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்ட வேண்டும். தற்போது உள்ள இளைஞரணி நிர்வாகிகள் மீண்டும் அப்பொறுப்பிற்கு வர விரும்பினால், மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப் பட்டுள்ள அனைத்து விவரங் களையும் தெளிவாகவும், முழுமை யாகவும் பூர்த்தி செய்து வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 112 உயரத்தில் புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம், அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.
    • ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம் மீது பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் மின் மோட்டார் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமரகதாம்பிகை சமேத சந்திரகுடேஸ்வர சாமி மலைக்கோவிலில், சுமார் 7 கோடி செலவில் 112 உயரத்தில் புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம், அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.

    விழா நிகழ்ச்சிகள் கடந்த திங்கட்கிழமை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணா ஹுதி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

    தொடர்ந்து செவ்வாய்க் கிழமை அன்று விஷேச சாந்தி, இரண்டாம் கால பூஜை விஷேச திரவிய ஹோமம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாலையில், புதிய கலச ஸ்தாபனம், 3- ஆம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், நாடி சந்தானம் பூர்ணாஹூதி மற்றும் பல்வேறு சிறப்ப பூஜைகள் நடைபெற்றது.

    சிறப்பு பூஜைகளை, மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வர குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தினர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும், ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம் மீது பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் மின் மோட்டார் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, செங்கோல் ஆதினம் மற்றும் டாக்டர் செல்லகுமார் எம்.பி, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, தாசில்தார் சுப்பிரமணி, ஓசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினரும், அ.தி.மு.க. தெற்கு பகுதி செயலாளருமான பி.ஆர்.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும், முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, விழா நடைபெற்ற 3 நாட்களும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை, கமிட்டி நிர்வாகி கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர். கும்பாபிஷேக விழாவை யொட்டி ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
    • இரட்டை கொலை குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே பண்ணந்தூரை அடுத்துள்ள சாதி நாய்கன்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் திருப்பணியின் ஒரு பகுதியாக சிமெண்டு சிற்பங்கள் செய்யும் பணியில், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 37), சிதம்பரம் வயலூரை சேர்ந்த சபரிவாசன் (58) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

    இதைகண்டு அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் பாரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராகவன், சிவசந்தர், கார்த்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் நேற்று முன்தினம் இந்த கோவில் திருப்பணிக்கு புதிதாக வந்திருந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த கணேசன், கடலூர் மாவட்டம் வன்னியபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜ்குமார், சபரிவாசன் ஆகிய 2 பேரும் மதுபோதையில் இருந்ததாகவும், அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    இந்த இரட்டை கொலை குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவுல்ராஜ், தனது தாயாரை அழைத்து செல்வது தொடர்பாக தனது அண்ணனான விவசாயி சவுரிராஜன் என்பவருடன் தகராறு செய்தார்.
    • கொலை தொடர்பாக பவுல்ராஜின் மனைவி ரெஜினா புஷ்பா, தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (வயது 36). டைல்ஸ் கடை நடத்தி வந்தார். மேலும் சொந்தமாக சரக்கு வேன் வைத்து இருந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

    இவர் கடந்த 26-ந்தேதி மாலை மது குடித்து விட்டு தனது தாயாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சரக்கு வேனை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டு பவுல்ராஜ் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அதன்பின்னர் அவர் இரவு வெளியே சென்றார்.

    இந்த நிலையில் பவுல்ராஜ், தனது தாயாரை அழைத்து செல்வது தொடர்பாக தனது அண்ணனான விவசாயி சவுரிராஜன் (44) என்பவருடன் தகராறு செய்தார். அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சவுரிராஜன் அருகில் இருந்த கட்டையால் தம்பி பவுல்ராஜின் தலையில் அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் பவுல்ராஜ் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இந்த கொலை தொடர்பாக பவுல்ராஜின் மனைவி ரெஜினா புஷ்பா, தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் பவுல்ராஜை அவருடைய அண்ணன் சவுரிராஜன், எதற்காக பழைய வீட்டிற்கு வந்தாய் என கேட்டு தகராறு செய்ததும், தகராறு முற்றியதில் கட்டையால் அடித்துக்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சவுரிராஜனை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
    • நேற்று வீட்டில் தூக்குபோட்டுதற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சைய்யது அஸ்சிம் (வயது77). இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குபோட்டுதற்கொலை செய்து கொண்டார்.

    • கல்வி மற்றும் பொருளா தாரத்தில் பின் தங்கிய பகுதியாக இக்கிராமங்கள் உள்ளன.
    • காலையில் காய்கறி சந்தையும் நண்பகல் முதல் இரவு வரை மது பாராகவும் மாறியுள்ளது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் வேப்பனப்பள்ளி உள்ளது.

    இப்பகுதியைச் சுற்றிலும் தீர்த்தம், நேரலகிரி, சென்ன சந்திரம், நடுச்சாலை, பில்லனக்குப்பம், குருபரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்கள் அதிக அளவில் உள்ளன.

    கல்வி மற்றும் பொருளா தாரத்தில் பின் தங்கிய பகுதியாக இக்கிராமங்கள் உள்ளன.

    மேலும், இக்கிராமப் பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவை க்கு வேப்பனப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    மேலும், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர், சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதி மக்களும் வேப்பனப்பள்ளிக்கு பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வேப்பனப்பள்ளியின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

    இங்கு பயணிகளின் வசதிக்காக இருக்கை, தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

    ஆனால், பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வராமல் சாலை யோரங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன.

    இதனால், பேருந்து நிலையம் கட்டியும் மக்களுக்குப் பயனில்லாத நிலையே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

    மேலும், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்ல இதுவரை நடவடிக்கை எடுக்காததால், காலையில் காய்கறி சந்தையும் நண்பகல் முதல் இரவு வரை மது பாராகவும் மாறியுள்ளது.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறு கையில் வேப்பனப்பள்ளி பேருந்து நிலையத்தில் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை தற்காலிக காய்கறி சந்தையாகவும், நண்பகல் 12 மணி முதல் இரவு வரை மது அருந்தும் பாராகவும் மாறியுள்ளது.

    இதனால், பேருந்துக்குக் காத்திருக்கும் பயணிகள் வெயிலுக்கும், மழைக்கும் வழக்கம்போல திறந்தவெளியில் நிற்கின்றனர். இதனால், இச்சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    இதைத் தடுக்க புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    • பொது மக்கள் மத்தியில் பேரணியாக வீதி வீதியாக சென்று போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • மாண வர்கள் போதை விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பேரிகை காவல் நிலையமும் அத்தி முகம் அதியமான் வேளாண்கல்லூரியும் இணைந்து அத்திமுகம், பேரிகை பகுதியில் பொது மக்கள் மத்தியில் பேரணியாக வீதி வீதியாக சென்று போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சிக்கு பேரிகை காவல் உதவி ஆய்வாளர் கண்ணன், போலீசார் மற்றும் அத்திமுகம் பகுதியில் அமைந்த அதியமான் வேளாண் கல்லூரி முதல்வர் ஸ்ரீரிதரன், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாண வர்கள் போதை விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தனர். 

    • போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.
    • இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார். சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பாண்டு மற்றும் பி.டி.ஏ தலைவர் ராமன், துணைத்தலைவர் ஷானு, நிர்வாகிகள் அஸ்பர், ெஜபஸ்டின் மற்றும் எஸ்.எம்.சி, தலைவி கனிமொழி மற்றும் நிர்வாகள் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் ராமசந்திரன், கோவிந்தராஜ், ஆசிரியர்கள் கணேசன், முகமது அலி மற்றும் பல கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் ரஜி மாண வர்கள் மத்தியில் பள்ளியில் ஒழுக்கம் முக்கியம், ஒழுக்கம் இருந்தால் கல்வி வளரும், மாணவர்களாகிய நீங்கள் எந்த போதை பொருட்களுக்கும் அடிமை ஆகி விடாதீர்கள், அது உங்களை அனு அனுவாக புற்றுநோய், காசநோய் என பல வியாதியினால் உங்களை கொன்று விடும் என விழிப்புணர்வு எற்படுத்தினார்.

    மேலும் மாணவர்கள் ஒழுக்கம் இல்லாமல் சுற்றி திரிவது விதிகள் மீறுவது குறித்து காவல்துறை கண்காணித்து வருகிறது என எச்சரித்தார்.

    • விஷ பாம்பு ஒன்று மீனா வை கடித்துள்ளது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மீனா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போபனபள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவரதுமனைவி மீனா (வயது26).இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அன்று மீனா வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மீனா உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×