என் மலர்
நீங்கள் தேடியது "பருத்தி ஏலம் போனது"
- விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த எம்.சி. ரக 8 டன் எடை கொண்ட பருத்தி ரூ.4 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றன.
- மத்தூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்து பயன் பெற்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்ட வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
பருத்தி ஏலத்தை வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தின் துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுந்தரம் உத்தரவின் பேரிலும் பொதுமேலாளர் முருகன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த எம்.சி. ரக 8 டன் எடை கொண்ட பருத்தி ரூ.4 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றன.
இப்பருத்தி எலத்தில் கொங்கணாபுரம், ஊத்தங்கரை, தருமபுரி, மத்தூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்து பயன் பெற்றனர்.
இதனை தொடர்ந்து விவசாயிகள் கலந்து கொண்டு வந்த பருத்திக்கான நிர்ணயத் தொகையை விற்பனை சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு உடனடி பணம் பட்டுவடா செய்யப்பட்டது.
இப்பணியை அலுவலக உதவியாளர் விஜி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.






