என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நடந்திருப்பது தி.மு.க.வினருக்கு பிடிக்கவில்லை.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. அவசர ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர், நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஓசூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திர சூடேஸ்வர சாமி கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழாவில் குழப்பம் விளைவிக்கவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்துடனும், சில அரசியல் சக்திகள், "அமைப்பு " என்ற பெயரில், இயக்கமே இல்லாத ஒரு இயக்கத்தின் பெயரால் குழப்பம் ஏற்படுத்தவும், அங்கு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கின்ற இடத்தில், நமது விதிமுறைகள் கலாச்சார முறைப்படி நடைபெறும் இடத்திற்கு சென்று, நாங்கள்தான் மந்திரம் ஓதுவோம், நாங்கள்தான் யாகம் செய்வோம் என்று தேவையில்லாத உரிமைகளை நிலைநாட்ட முயன்று குழப்பம் செய்துள்ளனர்.

    விழா நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்ற பின்னர், காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுங்கட்சி நேரடியாக மோத முடியாமல், பின்வாசல் வழியாக இயக்கம் என்ற பெயரில், நாலைந்து பேரை அனுப்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். எங்குமே நடந்திராத யாருமே கேள்விப்படாத கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட முயன்றதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். போலீசார், இதற்கு ஆதரவாக உள்ள அரசியல் சக்திகளை கண்டறிந்து ஒடுக்குவதை விட்டு, விழா ஏற்பாட்டாளர்களுடன் கலந்து பேசாமல் ,பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக இது போன்ற கோரிக்கைகளை வைத்து, கடவுள் சன்னிதியில் அநியாயம் செய்ய வந்தவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஓசூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    இந்த நிகழ்வை, நாங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம். இது போன்ற சம்பவங்கள், வேறு எந்த கோவில் விழாக்களிலும் நடக்கக்கூடாது என்பதை உணர்த்தவும்,, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்தும் வகையில், பா.ஜ.க. மாவட்ட தலைமை சார்பில் 1-ந்தேதி மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும். கும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நடந்திருப்பது தி.மு.க.வினருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் பா.ஜ.கவின் வளர்ச்சியை தடுக்கும் விதத்திலும், பா.ஜ.க.வினர் ஆன்மீக விழாக்கள் நடத்தக்கூடாது என்ற எண்ணத்திலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற செயல்கள் மூலம், தி.மு.க.வினர் எங்களை சீண்டிப்பார்க்க நினைத்தால் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • குருப்ரீட்சிங்க்கும், அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர்.
    • குருப்ரீட்சிங் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    பஞ்சாப் மாநிலம், சூலோவால் பகுதியை சேர்ந்தவர் குருப்ரீட்சிங் (வயது35). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து லாரியில் தலைகவசம் லோடு ஏற்றி ஓசூருக்கு வந்தார். அங்கு அந்த நிறுவனத்தில் லாரியை நிறுத்தி விட்டு வெளியே வந்தார்.

    இதனிடையே குருப்ரீட்சிங்க்கும், அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர். இதனால் அவரது மனைவி விவாகரத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குருப்ரீட்சிங் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஞ்செட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பொன்சோலை பகுதியில் பணம் வைத்து சூதாடிய கிருஷ்ணன், மாயன், முருகேசன், வடமாலை, சேக் இஸ்மாயில் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள பெருமகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 56). இவர் அரசு பஸ் நடத்துனராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமான நிலையில் மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரா மலிங்கம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் மத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

    அந்த சாலை வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களை சைக்கிளில் கடந்து, கேரளா செல்லும் வழியில் நேற்று ஓசூர் வந்தார்.
    • அவருக்கு, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    ஓசூர்,

    பொள்ளாச்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் முத்துசெல்வன்(26) எம்.பி.ஏ.பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

    சைக்கிள் மூலம் 34,300 கிமீ தூரம் பயணித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக கடந்த 2021- ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கினார். ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம்,காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களை சைக்கிளில் கடந்து, கேரளா செல்லும் வழியில் நேற்று ஓசூர் வந்தார். அவருக்கு, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    பின்னர், முத்துசெல்வன் கூறுகையில்:-

    தான் இதுவரை 18,000 கிமீ தூரம் பயணித்திருப்பதாகவும், வருகிற 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் பயணத்தை முடிக்க உள்ளதாகவும் கூறினார்.

    மேலும் அவர், கியர் இல்லாத சாதாரண சைக்கிளில் 120 கிலோ எடையிலான பொருட்களுடன் பயணிப்பதாகவும், தானே சமைத்து சாப்பிட்டு, பெட்ரோல் நிலையம், காவல்நிலையங்களில் இரவு நேரங்களில் தங்குவதாகவும் தெரிவித்தார்.

    • பொதுமக்கள் சாலையை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனங்களை நிறுத்தவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வாரச் சந்தைகூடுகிறது. இதில் காவேரிப்பட்டணம் சுற்றுப்புறத்திலுள்ள கிராம மக்கள் வந்து வாரச் சந்தையில் தங்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர். சந்தைக்கென்று தனியாக பாலக்கோடு சாலையில் இடம் உள்ளது.

    ஆனால் வியாபாரிகள் அந்த இடத்தை பயன்படுத்தாமல் சேலம் மெயின் ரோட்டில் சாலையின் ஓரங்களை ஆக்கிரமித்து கடைநடத்துகின்றனர். இதனால் சனிக்கிழமையன்று குறிப்பாக மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை சேலம் மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மாவட்ட கலெக்டர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உத்தரவிட்டதன் பேரில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து கடை வைக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த பயனடைந்தனர். சிறிது காலத்திற்கு பிறகு வியாபாரிகள் வழக்கம்போல் சாலையின் ஓரங்களை ஆக்கிரமித்து கடை வைத்து நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

    கடைகளுக்கு பொருட்கள் வாங்கவரும் பொதுமக்கள் சாலையின் குறுக்கே இரு சக்கரவாகனங்களை நிறுத்தவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    குறிப்பாக காவேரிப்பட்டணம் நகரில் சேலம் மெயின் ரோடு முக்கிய சாலை என்பதால் ஊருக்குள் வரும் பேருந்துகள் இருபுறமும் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. இந்த சாலையில்தான் அரசு மருத்துவமனை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காவல்நிலையம் உள்ளது. அவசரமாக மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன.

    ஏனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு வாரச்சந்தையன்று ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாலை 7 மணிக்கு வசந்த் விஜய்ஜி மகாராஜின் பாண்டுரங்க மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகில் உள்ள அக்ரஹாரம் சிவாஜிநகரில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா மற்றும் 87வது பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இவ்விழாவானது வருகிற ஜூலை மாதம் 5-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்த விழாவில், நேற்று காலை 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 7 மணிக்கு வசந்த் விஜய்ஜி மகாராஜின் பாண்டுரங்க மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.

    இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜையும், நாளை காலை ஜூலை 1-ம் தேதி ஸ்ரீவிட்டல் ரகுமாயி அம்பா பவானிக்கு அபிஷேக பூஜையும், 4-ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீருக்மணி திருக்கல்யாணமும், அன்னதானமும் நடக்க உள்ளது. தொடர்ந்து 5-ம் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 

    • சபரிவாசன், ராஜ்குமார் ஆகியோர் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன் மீது வழக்குபதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே பண்ணந்தூரை அடுத்துள்ள சாதி நாய்கன்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் திருப்பணியின் ஒரு பகுதியாக சிமெண்டு சிற்பங்கள் செய்யும் பணியில், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 37), சிதம்பரம் வயலூரை சேர்ந்த சபரிவாசன் (58) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து பாரூர் போலீசார் மேலும் இந்த கோவில் திருப்பணிக்கு புதிதாக வந்திருந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த கணேசன், கடலூர் மாவட்டம் வன்னியபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது கணேசன் என்பவர் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் தான் கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார். கணேசன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு கோவிலில் வேலை செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் தெரிவித்தனர். அதனால் நான் அவரை கண்டித்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அவர்கள் இருவரையும் நான் இரும்பு கரண்டியால் அடித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன் மீது வழக்குபதிவு செய்து நேற்று கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • நடப்பாண்டில் தற்போது வரையில் 3727 விவசாயிகளுக்கு ரூ.33.92 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • நடப்பு ஆண்டு வட்டியில்லா பயிர் கடனாக ரூ.310 கோடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதி உள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லாத பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. பயிர் கடனாக தனி நபர் பிணையத்தின் பேரில் ரூ.1.60 லட்சம் வரையிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-2023-ம் நிதி ஆண்டில் 33 ஆயிரத்து 11 விவசாயிகளுக்கு ரூ.286.66 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் தற்போது வரையில் 3727 விவசாயிகளுக்கு ரூ.33.92 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு வட்டியில்லா பயிர் கடனாக ரூ.310 கோடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களின் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர்கடன் பெற்று கொள்ளலாம்.

    மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    எனவே விவசாயிகள் நில உடமை, சிட்டா, அடங்கல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான போட்டோ ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அளித்து உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லாத பயிர்கடன் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,551 கனஅடியாக அதிகரித்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கெலவரப்பள்ளி அணையில் மதகுகள் புனரமைக்கும் பணிக்காக அதிக அளவில் தண்ணீர் திறப்பதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மதகுகள் புனரமைக்கும் பணிக்காக, அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 638 கனஅடியாக இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 202 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் கெலவரப்பள்ளி திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,551 கனஅடியாக அதிகரித்தது.

    அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.60 அடியாக உள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நெடுங்கல் தடுப்பணை வழியாக சீறி பாய்ந்து செல்கிறது. மேலும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • இக்கண்காட்சிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை ஓட்டியவாறு, அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு, ஒரு பாதை அமைக்க ப்பட்டுள்ளது.
    • பெங்களூரு சாலை வழியாக தனியார் மருத்துவமனை ஓட்டியும் ஏற்கனவே உள்ள பாதை வழியாக பொதுமக்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் தோட்டக்கலைத்துறை சார்பில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருகிற ஜூலை 5-ந் தேதி தொடங்குகிறது.இதற்கான அரங்குகள், மேடை, தின்பண்ட கடைகள், விளையாட்டு திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும், இக்கண்காட்சிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை ஓட்டியவாறு, அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு, ஒரு பாதை அமைக்க ப்பட்டுள்ளது.

    மேலும் பெங்களூரு சாலை வழியாக தனியார் மருத்துவமனை ஓட்டியும் ஏற்கனவே உள்ள பாதை வழியாக பொதுமக்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நோில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    • இதையொட்டி வருடாபிஷேக விழா நடைபெற்றது.
    • விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் ராம்நகரில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பா பிஷேகம் கடந்தாண்டு இதே நாளில் நடத்தப்பட்டது.

    இதையொட்டி வருடாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    மேலும் ஹோம நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் விழாவையொட்டி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கோவில் தர்மகர்த்தாவுமான கே.கோபிநாத் தலைமையில் ஜெய்சங்கர், நீலகண்டன், அர்ச்சகர் ஸ்ரீதர் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×