என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை வைப்பதை தடுக்க வேண்டும்"

    • பொதுமக்கள் சாலையை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனங்களை நிறுத்தவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வாரச் சந்தைகூடுகிறது. இதில் காவேரிப்பட்டணம் சுற்றுப்புறத்திலுள்ள கிராம மக்கள் வந்து வாரச் சந்தையில் தங்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர். சந்தைக்கென்று தனியாக பாலக்கோடு சாலையில் இடம் உள்ளது.

    ஆனால் வியாபாரிகள் அந்த இடத்தை பயன்படுத்தாமல் சேலம் மெயின் ரோட்டில் சாலையின் ஓரங்களை ஆக்கிரமித்து கடைநடத்துகின்றனர். இதனால் சனிக்கிழமையன்று குறிப்பாக மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை சேலம் மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மாவட்ட கலெக்டர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உத்தரவிட்டதன் பேரில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து கடை வைக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த பயனடைந்தனர். சிறிது காலத்திற்கு பிறகு வியாபாரிகள் வழக்கம்போல் சாலையின் ஓரங்களை ஆக்கிரமித்து கடை வைத்து நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

    கடைகளுக்கு பொருட்கள் வாங்கவரும் பொதுமக்கள் சாலையின் குறுக்கே இரு சக்கரவாகனங்களை நிறுத்தவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    குறிப்பாக காவேரிப்பட்டணம் நகரில் சேலம் மெயின் ரோடு முக்கிய சாலை என்பதால் ஊருக்குள் வரும் பேருந்துகள் இருபுறமும் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. இந்த சாலையில்தான் அரசு மருத்துவமனை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காவல்நிலையம் உள்ளது. அவசரமாக மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன.

    ஏனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு வாரச்சந்தையன்று ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×